ஈஷா, வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதா! யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதா !
 
 

ஈஷா, வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது!
ஈஷா யோக மையம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பட்டா நிலத்தில் மட்டுமே செயல்படுகிறது. உண்மையை சொல்லப்போனால், இங்கு ஈஷா வந்தபின் வன ஆக்கிரமிப்பு குறைந்து, மறைந்து போயிருக்கிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் நடைபெற்று வந்த சட்டவிரோதமான செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், ஈஷா மையத்திற்கு சில எதிரிகள் உருவாகி உள்ளனர். இவர்கள் ஈஷாவை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

வனத்துறை நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதா என்கிற கேள்விக்கு வனத்துறையே பதில் தந்துள்ளது. மண்டல வனப்பாதுகாப்பு காவலர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் ஈஷா வளாகத்தை ஆய்வுசெய்தனர். அதன்பின், முதன்மை வனப் பாதுகாவலருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஈஷா யோக மையம், பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் ஈஷா செய்யவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (Document reference number: CFCIT/07/2013)

இதுபற்றி ஈஷா மையம் பலமுறை விளக்கம் அளித்ததையும் பொருட்படுத்தாமல், ஒருசிலர் தொடர்ந்து இதுபற்றியே பேசிவருவது,மதிப்பிற்குரிய அரசுத்துறையை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது.

ஈஷா யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது!
யானை வழித்தடம் அல்லது யானை வலசைப் பாதை என்பது யானைகள் வசிக்கும் இரண்டு வனங்களை இணைக்கிற பாதையாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வனத் துறையால் யானை வழித்தடம் என்று குறிப்பிட்டுள்ள88 யானைப் பாதைகளில் ஈஷா இல்லை. சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி யார் வேண்டுமானாலும் இது பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.


 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1