தேசிய அளவிலான போட்டியில் ஈஷா வித்யா மாணவர்கள்!
தர்மபுரி ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் தேசிய அளவிலான போட்டி மற்றும் ஈஷா யோகா கற்றுக்கொண்ட திராவக வீச்சுக்கு எதிரான பெண்மணிகள் குழு ஆகிய இரு நிகழ்வுகள் குறித்து இங்கே சில வரிகள்!
 
தேசிய அளவிலான போட்டியில் ஈஷா வித்யா மாணவர்கள்!, Desiya alavilana pottiyil isha vidhya manavargal
 

தர்மபுரி ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் தேசிய அளவிலான போட்டி மற்றும் ஈஷா யோகா கற்றுக்கொண்ட திராவக வீச்சுக்கு எதிரான பெண்மணிகள் குழு ஆகிய இரு நிகழ்வுகள் குறித்து இங்கே சில வரிகள்!

தேசிய அளவிலான போட்டியில் ஈஷா வித்யா மாணவர்கள்!

Spell Bee எனப்படும் ஆங்கிலமொழி உச்சரிப்பு போட்டியில் தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியைச் சேர்ந்த 44 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 11 பேர் மாநில அளவிற்குத் தேர்ச்சி பெற்றனர். கோபிநாத் (2 வது வகுப்பு), நித்யஸ்ரீ (2 வது வகுப்பு), தர்ஷினி (3 வது வகுப்பு), நவீன் குமார்.S (4 வது வகுப்பு), ரித்தின் A.R. (5 வது வகுப்பு) மற்றும் மகாலட்சுமி.S (7 வது வகுப்பு) ஆகிய 6 மாணவர்கள் ஏப்ரல் 24ஆம் தேதி சென்னையில் நிகழும் தேசிய அளவிலான போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

போட்டி குறித்து நிர்வாகிகளின் பகிர்வுகள்!

திரு. மகேந்திரன் Spell Bee வணிகம் மற்றும் வளர்ச்சித்துறை இயக்குநர், சௌம்யா Spell Bee வணிகம் மற்றும் வளர்ச்சித்துறை நிர்வாகி ஆகியோர் தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியைப் பார்வையிட வருகை தந்தனர். அவர்கள் கூறும்போது, “தர்மபுரியிலிருந்து தேசிய அளவில் தேர்வாகியுள்ள ஒரே பள்ளி ஈஷா வித்யாதான்” என்று தெரிவித்ததோடு, மாணவர்களின் ஆங்கிலத் திறமை குறித்து வியந்து பாராட்டினர்.

திராவக வீச்சுக்கு எதிரான பெண்மணிகள் குழு ஈஷாவில்!

திராவக வீச்சுக்கு எதிரான பெண்மணிகள் குழு ஈஷாவில்!, Upa-yoga acid attack survivors

திராவக வீச்சுக்கு ஆளாகியிருந்தாலும் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ள லக்ஷ்மி சா, சோனியா, ரூபா ஆகிய பெண்மணிகளோடு, இன்று இத்தகைய கொடுமையை நிறுத்துவதற்காக குரல்கொடுத்துப் போராடும் குழுவினர் ஈஷாவில் உபயோகப் பயிற்சியை மேற்கொண்டனர். யோகா தங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக கூறிய அவர்கள், இத்தகைய வாய்ப்பை வழங்கிய சத்குருவிற்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1