குக்கும்பர் கச்சும்பர், வெள்ளரி கூலன்ட் - வெயிலுக்கு உகந்த ரெசிபி வகைகள்!
உஷ்ணத்தின் தாக்கம் அதிகரித்துள்ள இவ்வேளையில், நமது உணவு வகைகளிலும் கவனம் தேவை! இதோ வெயிலுக்கு உகந்த இரண்டு ரெசிபி வகைகள் இங்கே!
 
 

ஈஷா ருசி

உஷ்ணத்தின் தாக்கம் அதிகரித்துள்ள இவ்வேளையில், நமது உணவு வகைகளிலும் கவனம் தேவை! இதோ வெயிலுக்கு உகந்த இரண்டு ரெசிபி வகைகள் இங்கே!

குக்கும்பர் கச்சும்பர்

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்
பெங்களூர் தக்காளி
கிஸ்மிஸ் பழம் (உலர்ந்த திராட்சை)
புதினா தழை
அஸ்கா சர்க்கரை
எலுமிச்சை சாறு
உப்பு

இவை அனைத்தும் சுவை மற்றும் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.

செய்முறை:

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மேற்சொன்ன அத்தனை பொருட்களையும் ஒன்றாக கலக்கி பிரிட்ஜில் வைக்கவும். சற்று நேரம் கழித்து வெளியே எடுத்து, சில்லென்னு இருக்கும் போதே பரிமாறவும். மிக எளிமையான குக்கும்பர் கச்சும்பர் தயார்.

இம்முறையில் சாலட் செய்துக் கொடுக்கும்போது குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாமல் கேட்டு வாங்கி உண்பர்.

வெள்ளரி கூலன்ட்

தேவையான பொருட்கள்:

பிஞ்சு வெள்ளரி நறுக்கியது - 2 கப்
தயிர் - 1 கப்
உப்பு, மஞ்சள்தூள் - சுவைக்கேற்ப
துளசி இலை பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்

செய்முறை:

வெள்ளரியை தோல் சீவி நறுக்கவும். பின்னர் தயிர் சேர்த்து அடித்துக் கொள்ளவும். உப்பு, மிளகு தூள் கலந்து, துளசி இலைகளை மேலே தூவி பரிமாறவும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1