ஈஷா ருசி

பாப் கார்ன் தெரியும், பேபி கார்ன், கார்ன் ஃபிளேக்ஸ், ஸ்வீட் கார்ன் கூட தெரியும், அதென்ன கார்னி சால்சா. ரொம்ப புதுசா இருக்கேன்னு நீங்க நினைக்கலாம். இதை செய்வது ரொம்ப சிம்பிள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை ட்ரை பண்ணி பார்த்தால், சுவையான கார்னி சால்சாவும், கார்ன் வெஜிடபில் ரோலும் ரெடி...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கார்னி சால்சா

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் : தேவையான அளவு
கேரட் துருவியது : 1/4 கப்
குடமிளகாய் : 2 இன்ச் நீளத்தில் நறுக்கிறது - 1/4 கப்
கறுப்பு ஆலிவ்ஸ் : - 1/2 கப்
வெள்ளை எள்: 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி : 10
ரீஃபைண்ட் ஆயில்: 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்: - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு: தேவைக்கேற்ப
புளித்த தயிர்: 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை: 1/4 கப்

செய்முறை:

  • ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பேபி கார்ன் நன்றாக வதக்கவும்.
  • வதங்கியவுடன் துருவிய கேரட், குடமிளகாய், புளித்த தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இத்துடன் உப்பு, மிளகாய் தூள், நறுக்கிய கொத்தமல்லி, கறுப்பு ஆலிவ்ஸ், முந்திரி சேர்த்துக் கிளறி வெள்ளை எள் தூவிப் பரிமாறவும்.

கார்ன் வெஜிடபிள் ரோல்

தேவையான பொருட்கள்:

கான் பிளவர் மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் - 1 கப் (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1 கப்
கடுகு, உளுந்தப்பருப்பு, உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - சிறிதளவு
கர மசாலா - தேவையான அளவு
தக்காளி - 2
மஞ்சள் பொடி - சிறிதளவு

செய்முறை:

  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.
  • ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தப்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி போட்டு எண்ணெயில் வதக்க வேண்டும்.
  • வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, கர மசாலா, மிளகுத்தூள், தேவையான உப்பு போட்டு நன்றாக வதக்கிய பின், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி போட்டு இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கான் பிளவர் மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி போல் பிசைந்து, செய்த மசாலாவை மாவிற்கு நடுவில் வைத்து பூரணம் போல் மடித்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கான் வெஜிடேபிள் ரோல் ரெடி.