சென்னையில் ஒரு புதிய பேரலை!
ஜூலை 18 முதல் சென்னை முழுவதும் - ஈஷா உயிர்நோக்கம்! ஒரே ஒரு க்ளிக்கில், அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்...
 
 

ஜூலை 18 முதல் சென்னை முழுவதும் - ஈஷா உயிர்நோக்கம்! ஒரே ஒரு க்ளிக்கில், அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்...

அமைதியான வாழ்க்கையும், ஆரோக்கியமும், சந்தோஷமும் எட்டா கனியாக இருக்கிறதா? இதோ நீங்களே அதனை உருவாக்கிக் கொள்ள, ஒரு எளிய பயிற்சி சென்னை முழுவதும் ஜுலை 18ம் தேதியிலிருந்து வருகிறது... ஈஷா உயிர்நோக்கம்.

சென்னை நகர வாழ்வின் பரபரப்பிலிருந்து சற்றே நம்மை ஆயாசப்படுத்திக் கொள்ள, உடல்நலன் பேண, நல்வாழ்வு பெற... ஈஷா உயிர்நோக்கம் யோக வகுப்பு, உங்கள் வாசல்படி வரை வருகிறது.

இப்பயிற்சி 3 நாட்களில், தினமும் வெறும் இரண்டே மணி நேரத்தில் சொல்லித் தரப்படுகிறது. உங்கள் சொந்தம்-பந்தம், உற்றார்-உறவினர், தெரிந்தவர்-தெரியாதவர் என அனைத்து தரப்பினரும் இதனை கற்றுக் கொள்ள வழி அமைத்துக் கொடுங்களேன்!

எப்படி என்கிறீர்களா? நீங்கள் Facebook, Twitter போன்ற பக்கங்களில் உலாவுபவரா? அதுபோதும். இந்த விழிப்புணர்வை வளர்க்க, இதுபோன்ற சமூக வலைதளங்களிலும், உங்கள் இமெயில் மூலமும் நீங்கள் அறிந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஜுலை 18 முதல் சென்னை முழுவதும் - ஈஷா உயிர்நோக்கம்!

இந்த வலை மெல்ல விரியும். ஒரு சொட்டு ஆன்மீகம் பரவும். வாருங்கள் நாம் இதனை நிகழச் செய்வோம்.

இப் பெரு முயற்சியில் தங்களின் பேராதரவினை நல்குமாறு வேண்டுகிறோம். இதற்குத் தேவையெல்லாம், உங்களிடமிருந்து ஒரே ஒரு க்ளிக் மட்டுமே.

இது எப்படி வேலை செய்யும்?

போதுமான அளவு உங்கள் ஆதரவு இத்திட்டத்திற்கு இருந்தால், Thunderclap - ஒரே நேரத்தில், உங்கள் சார்பாக, உங்கள் முகநூல் அல்லது ட்விட்டரில் ஒரு செய்தியை பதிவுசெய்யும். இச்செய்தி உங்கள் முகநூல் நண்பர்கள் மற்றும் ட்விட்டர் பின்பற்றுபவர்களை ஒரே நேரத்தில் சென்றடைவதால், இது ஒரு பெரும் கர்ஜனையை உருவாக்கும். எங்களோடு இணைந்து இந்த கர்ஜனைப் பேரொலியில் தங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதனை நாம் நிகழச்செய்வோம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1