சென்னை - உங்கள் உதவிக்காக காத்திருக்கிறது!
சென்னை வெள்ளத்தில் பல்லாயிரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் படகுகள் மூலம் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப் படுகிறார்கள். வீடின்றி, உணவின்றி துவள்வதோடு, குளிராலும், தொடர் மழையாலும் அவர்கள் அவதியுற்று வருகிறார்கள். அவர்கள் துயர் துடைக்க முன்வாருங்கள்!
 
 

சென்னை வெள்ளத்தில் பல்லாயிரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் படகுகள் மூலம் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப் படுகிறார்கள். வீடின்றி, உணவின்றி துவள்வதோடு, குளிராலும், தொடர் மழையாலும் அவர்கள் அவதியுற்று வருகிறார்கள். அவர்கள் துயர் துடைக்க முன்வாருங்கள்!

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில், இந்த நூற்றாண்டிலேயே இல்லாத வகையில் அதிகபட்ச மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு இது தொடரும் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால், லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. வெள்ளத்துயரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், உடை, கம்பளி, மருந்துப் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் உடனடியாகத் தேவைப்படுகிறது.

ஈஷா அறக்கட்டளையும் பிற தொண்டு நிறுவனங்களும், பொது மக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவற்றை செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து, அவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுசேர்க்கும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

எங்களுடன் சேர்ந்து சென்னை மக்களின் துயர்துடைக்க முன்வாருங்கள். உங்கள் நன்கொடை பணமாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். நீங்கள் செய்யும் இந்த உதவி, இப்பேரிடரில் இருந்து மீள்வதற்கான வழியாய், ஒளியாய் அவர்களின் மனதில் மலரட்டும்.

உடனுக்குடன் செயல்படுவதனால், நம்மால் காலம் தாழ்த்தாமல் அவர்களுக்கு உதவ முடியும்.

​ஈஷாவின் மீட்பு நடவடிக்கைகள் சில கட்டங்களாக நடைபெறும். ஒவ்வொரு கட்டத்திலும் மக்களின் தேவைகளைப் பொருத்து செயல்திட்டங்கள் அமைக்கப்படுகின்றன.

​மீட்பு நடவடிக்கைகள்:

நடமாடும் மருத்துவமனை

இந்த மருத்துவமனைகளில் ஒரு மருத்துவரும், சில செவிலியரும் இருப்பர். நீர் புகுந்துள்ள இடங்களுக்கு இவை செல்லும். அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவம் செய்யப்படும்.

மருத்துவ ஆலோசனை

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவர் குழு முகாமிட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை செய்வார்கள்.

பொருட்கள் விநியோகம்

மாநிலம் முழுவதும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. துணி, பாத்திரம், உணவு போன்ற அடிப்படைப் பொருட்கள் இந்த மண்டலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு, வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும்.

நீங்கள் நன்கொடையாக வழங்கக்கூடிய பொருட்கள்

  • துண்டு
  • போர்வை
  • ஷார்ட்ஸ்
  • சுடிதார்
  • புடவை
மீட்புப் பணிகளில் உதவ விரும்புபவர்கள் மற்றும் விருப்பமுள்ள மருத்துவர்கள் தொடர்பு கொள்ள: +918300011111, +918300051000, +918300052000
நேரடி வங்கி வரவு மூலம் பணம் செலுத்த (Donation via bank transfer): +919442139000
ஆன்லைனில் நன்கொடை வழங்க: href="http://www.ishafoundation.org/Donate?utm_source=tamilblog&utm_medium=blog_post&utm_campaign=ChennaiFloodRelief" target="_blank">http://www.ishafoundation.org/Donate

நன்றி,

ஈஷா தன்னார்வத் தொண்டர்கள்

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1