பயணத்தின் முன்பாகங்கள் ..

புதுடில்லியில் ஐ.நா.வின் பாலைவனமாகுதலை தடுக்கும் மாநாடு - சம்பந்தப்பட்டவர்களின் 14வது கருத்தரங்கத்தின் (UNCCD - COP14ன்) உயர் நிலை பிரிவு (HLS - High Level Segment) சந்திப்பை நேற்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கிவைத்தார். சத்குரு இதில் கலந்துகொண்டார். இன்றும் கலந்துகொள்கிறார். சென்ற ஆண்டு COP13 (Conference of Parties 13வது கருத்தரங்கம்) சீனாவில் நடந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள் (2019-2021) வரை இந்தப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

காவேரி கூக்குரல் இரண்டு பாகங்களில் நடக்கிறது. முடிவடைந்துள்ள அதன் முதல் பாகத்தை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இன்று பார்க்க உள்ளோம்.

கர்நாடகத்தில் நடந்து முடிந்த காவேரி கூக்குரல் 100% வெற்றிபெற்றுள்ளதாக சத்குரு அவர்கள் பகிர்ந்துள்ளார். காவேரி கூக்குரல் முன்வைத்த 5 பிரதான வேண்டுகோள்களையும் கர்நாடக அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மாண்புமிகு கர்நாடக முதல்வர் திரு. B.S.எட்டியூரப்பா, மாநிலத்தின் வனத்துறை மூலமாக 2 கோடி மரக்கன்றுகள் வழங்குவதாகவும், காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணியளவில் சத்குரு பங்கெடுக்கும் இன்றைய கருத்தரங்கம் ஆரம்பம்.

day8-tb-cc-pic2-1

10:30 மணிக்கு சத்குரு தன் ஆரம்ப உரையை நிறைவு செய்தார். உலகம் முழுவதிலும் இயற்கையை ஒன்றிய வளர்ச்சியை பின்பற்றவும், எல்லா இடங்களிலும் இயற்கையான சூழல் மலரச் செய்யவும் நெறி-சார்ந்த அணுகுமுறையை பின்பற்றலாமா? என்ற கேள்விக்கு பதிலாய் சத்குருவின் உரை இருந்தது.

10:55 மணிக்கு அர்ஜென்டினா நாட்டில் இருந்து, மக்கட்தொகை கட்டுப்பாடை தேசிய அளவில் செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டைகளாய் இருப்பவை எது?

உடல் மேல் கொண்டிருக்கும் அடையாளத்தைத் தாண்டி மனிதர்கள் வாழும்போது, குழந்தைகளைப் பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவர்களை விட்டுப்போகும். நம் உடல்-மன சார்ந்த கட்டாயங்களை விழிப்புணர்வோடு கையாள வேண்டும். இதுதான் மனிதனாய் பிறந்ததன் முக்கிய அம்சம். இனப்பெருக்க செயலை விழிப்புணர்வோடு நாம் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால் இயற்கை அதைக் கொடிய வழியில் செயல்படுத்தும். இது ஒழுக்கமோ, நெறியோ, மதமோ சம்பந்தப்பட்ட விஷயமல்ல, செயல்படக்கூடிய அடிப்படை-அறிவு சார்ந்தது. இன்று ஒவ்வொரு மனிதனின் தேவையும், அவன் பயன்படுத்தும் இயற்கை வளங்களின் அளவும் முன்காலத்தில் ஒருவர் பயன்படுத்தியதைவிட மிக அதிகமாக உள்ளது. அதனால் விழிப்புணர்வோடு சில மாற்றங்களை நாம் செயல்படுத்த வேண்டும் என்றார்.

11:35 மணிக்கு "மண்ணைக் கையாள நெறி-சார்ந்த அணுகுமுறை" என்ற தலைப்பில், முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி பலரும் பங்கெடுக்கும் கருத்தரங்கத்தின் முதல் பாகம் முடிவடைந்தது. நாம் உண்ணும் உணவு, பருகும் நீர், நடந்து செல்லும் நிலம் எல்லாவற்றையும் ஆழமான மதிப்போடும், மரியாதையோடும் நாம் கையாள வேண்டும். நம் கலாச்சாரத்தில் இழையோடிய அம்சங்கள், வாழ்க்கைப் பற்றிய நவீன கண்ணோட்டத்தில் தொலைந்துவிட்டது. பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களாய் அன்றி, இயற்கை வளங்களை நமக்கு உயிர் தரும் கருப்பொருட்களாய் மதிக்கும் நம் அடிப்படையை நாம் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தன் நிறைவு உரையை சத்குரு வழங்கினார்

கருத்தரங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் சத்குரு

day8-tb-cc-pic2-2

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் செனகால் நாட்டின் இளைஞர்கள் பலர் சத்குருவின் வீடியோக்களை பார்த்து வருகிறார்கள் என்றும் அங்கு பலருக்கும் சத்குருவை மிகப் பிடிக்கும் என்று பிரபல பாடகர் பாபா மால் பகிர்ந்தார். சத்குருவுடன் ஒரே மேடையில் அமர்ந்து கருத்தரங்கில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்ததற்காக அவருடைய நாட்டில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்களாம். பாபா மால் அவர்களின் வாழ்க்கையில் அவருக்கு ஊக்கமாக இருந்த மனிதர்கள் மூவர் - அவரின் தந்தை, நெல்சன் மண்டேலா மற்றும் பாலஸ்தீன அமைதி ஆர்வலர் அஜீஸ் அபு சாரா அவர்கள். அந்த மாமனிதர்கள் மூவரையுமே சத்குரு இவருக்கு நினைவுறுத்துவதாகப் பகிர்ந்து இன்று COP14ல் சத்குருவின் உரைக்கு நன்றி தெரிவித்தார்.

day8-tb-cc-pic2-3

இத்தாலியின் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. சேர்ஜியோ காஸ்டா சத்குருவை சந்தித்து அவரது கருத்துக்களுக்கு தன் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அவரருகில் இருப்பது இத்தாலியின் இந்தியத் தூதர் திரு.லாரென்சோ ஏஞ்செலோனி

day8-tb-cc-pic5-6

மதியம் 1 மணியளவில் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் இந்திய அங்க பொதுசெயலாளர் மற்றும் தலைமை அதிகாரி திரு. ரவி சிங் அவர்களும் சத்குரு அவர்களும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்கள். திரு. ரவி சிங் அவர்கள் நதிகளை மீட்போம் வாரியத்தின் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

day8-tb-cc-pic5-7

இந்தியாவின் UNCCDCOP14 அதிகாரப்பூர்வமான டிவிட்டரில் வெளியிடப்பட்ட செய்தி:

மதியம் 2:30 மணிக்கு க்ளோபல் என்வெரன்மெண்ட் ஃபெசிலிடியின் தலைமை அதிகாரி நவோகோ இஷீ காவேரி கூக்குரல் இயக்கத்தின் விஸ்தாரத்தையும் செயலளவையும் சத்குருவிடமிருந்து நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.

day8-tb-cc-pic5-8

UNCCDன் பொதுச் செயலாளர் இப்ரஹீம் தியா அவர்களுடன்

day8-tb-cc-pic5-3

ஐ.நாவின் உயிரின பன்மியத்தைப் பாதுகாக்கும் மாநாட்டின் நிர்வாக செயலாளர் கிறிஸ்டினா பஸ்கா பாமர் அவர்களுடன்

day8-tb-cc-pic5-1

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் வன நிர்வாக இயக்குநர், சித்தாந்த தாஸ்(இடது), தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் (நடு) சத்குருவை சந்திக்கின்றனர்

day8-tb-cc-pic5-4

ஆல் இந்தியா ரேடியோவின் நிதீஷ் அரோரா

day8-tb-cc-pic5-5

உள்ளே அமைக்கப்பட்டிருந்த காவேரி கூக்குரல் ஸ்டாலில் அமர்ந்து சத்குருவும் திரு. ரவி சிங் அவர்களும் உரையாடினார்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

day8-tb-cc-pic5-2

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறைக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இந்த இயக்கம் பற்றி கூறியதாவது:

 

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்

day8-tb-cc-pic3-4

தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் திரு. கேசவ விநாயகம் அவர்கள்

முன்னாள் மத்திய நிதி, சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்,

day8-tb-cc-pic3-5

day8-tb-cc-pic3-11

தமிழ்நாட்டில் சத்குரு கலந்துகொள்ளும் காவேரி கூக்குரல் பொதுக்கூட்டங்கள் நாளை துவங்கவிருக்க பல இடங்களிலும் பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

நம் நெடுங்கால தன்னார்வத் தொண்டரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தன் வழியில் ஆதரவு சேகரித்து வருகிறார். அவர் பங்கேற்ற திருவாரூர் வர்த்தக சங்க நிர்வாகிகள், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் கூட்டத்தில் காவேரி கூக்குரலுக்கு ஆதரவு.

day8-tb-cc-pic3-7

day8-tb-cc-pic3-8

இதுபோல் தமிழ் பிராமண சங்கம் மற்றும் பலர் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி ஆதரவு சேகரித்து வருகின்றனர்

day8-tb-cc-pic3-9

day8-tb-cc-pic3-10

திரைப்பட நடிகர் சமாந்தா அவர்கள் வெகு முன்பே காவேரி கூக்குரலுக்கு ஆதரவு தெரிவித்து, 1 லட்சம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்டும் பக்கத்தை உருவாக்கினார். தன் பக்கத்தில் நிதி வழங்குபவருக்கு கிடைக்கும் நதிகளை மீட்போம் சான்றிதழ்களை தம் பக்கத்தில் பகிர்ந்து மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார். இன்று மதியம் 2:30 மணியளவில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக மக்களை சந்தித்து இதற்கு ஆதரவு சேகரிக்கிறார்.

day8-tb-cc-pic3-12

day8-tb-cc-pic3-13

பள்ளி மாணவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது

காட்டுமன்னார்கோவிலில் ஜி.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி - ஊர்வலமாக காவேரி கூக்குரலுக்கு கோஷம் எழுப்பியவாறு நடந்து சென்றனர்

day8-tb-cc-pic3-14

day8-tb-cc-pic3-15

பெரம்பலூர்-அரும்பாவூரில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனம் - மாணவர்கள் மைதானத்தில் இந்த வடிவில் நிற்கின்றனர்

day8-tb-cc-pic3-16

day8-tb-cc-pic3-17

கோவை ஈஷா வித்யா பள்ளி

day8-tb-cc-pic3-18

day8-tb-cc-pic3-19

day8-tb-cc-pic3-20

day8-tb-cc-pic3-21

 

நாளை காலை ஓசூர் அதியமான் கலைக்கல்லூரியில் சத்குரு கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

அதற்காக ஓசூர் பேருந்துநிலையம், ஓசூர் ரயில்நிலையம் ஆகிய இடங்களில் "Flash Mob" நிகழ்த்தி ஆதரவு சேகரித்த ஓசூர் தன்னார்வத் தொண்டர்கள்.

day8-tb-cc-pic3-23

day8-tb-cc-pic3-22

ஓசூர் அருகே விவசாயிகள் பொதுமக்களை வீடு வீடாக சென்று அழைப்பு

day8-tb-cc-pic3-24

day8-tb-cc-pic3-25

day8-tb-cc-pic3-26

நாளை மாலை சத்குருவுடன் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள தருமபுரி விஜய் மில்லேனியம் பள்ளியில் இன்று பள்ளி மாணவர்களுக்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

day8-tb-cc-pic3-27

day8-tb-cc-pic3-29

6 நாட்களாக மழையிலும், குளிரிலும், வெயிலிலும் சத்குருவுடன் கர்நாடக பாகத்தில் பயணித்த நம் பைக்கர்களில் சிலரைக் காண்போம். அடுத்த பாகத்திற்கு புதிதாய் பைக்கர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

கட்டிடத்தின் உள்பகுதியை அழகாக அமைக்கும் இலக்கிய சுடர்; 10,000 மரங்களுக்கு நிதி திரட்ட உறுதி கொண்டிருக்கும் தொழிலதிபர் மீடா வலவல்கர், திருமதி ரம்யா மற்றும் கணவர் பாலாஜி

day8-tb-cc-pic4-12

day8-tb-cc-pic4-13

day8-tb-cc-pic4-14

day8-tb-cc-pic4-8

மோட்டார் சைக்கிள் போட்டிகளில் பங்கெடுக்கும் குமரகுரு கண்ணன், 19 வயது முதல் ஆர்வமாக பைக் ஓட்டும் சத்யு, நவீன விவசாயி சஷிகுமார், நதிகளை மீட்போம் பேரணியிலும் பங்கெடுத்த அர்ஜுன் ராமன், வணிக கடற்படையில் தளபதி விக்ரம் யாதவ், ஈஷா ஹட யோகா டீச்சராக விரும்பும் மும்பை ஹார்மஜ் சிங்கன்பொரியா (இவர் தமிழ்நாடு பாகத்திலும் பங்கெடுக்கிறார்), காவேரியைக் காக்க உயிர்ப்போடு கர்நாடகத்தில் இருந்து வந்திருக்கும் அரியெஜ் டாடா

day8-tb-cc-pic4-3

day8-tb-cc-pic4-4

day8-tb-cc-pic4-5

day8-tb-cc-pic4-1

day8-tb-cc-pic4-7

day8-tb-cc-pic4-11

day8-tb-cc-pic4-6

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்