பயணத்தின் முன்பாகங்கள் ..

அகஸ்திய முனிவர் பிரஷ்டை செய்த ஈரோடு காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு சத்குருவுடன் சத்சங்கம் நடந்தது. இன்று மதியம் திருச்சியிலும், இரவு தஞ்சாவூரிலும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

சத்குரு கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார். SKM குழும தொழிலாளிகள் 10,000 மரக்கன்றுகளுக்குத் தேவையான நிதியை சத்குருவிடம் வழங்குகிறார்கள்.

day11-tb-cc-pic7-7

காலை 9:10 மணி நடிகர் சரத்குமார் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.O.P.ரவீந்திரநாத் குமார் அவர்களும் வந்திருக்கிறார்கள். இன்றைய பயணத்தில் இருவரும் கலந்துகொள்கிறார்கள்.

day11-tb-cc-pic7-6

day11-tb-cc-pic7-3

day11-tb-cc-pic7-4

day11-tb-cc-pic7-5

O.P.ரவீந்திரநாத் குமார் அவர்கள்

day11-tb-cc-pic7-15

day11-tb-cc-pic7-17

வழியில் ஏற்கெனவே இரண்டு இடங்களில் சத்குருவைக் காண மக்கள் கூட்டமாக நிற்க, அவர்களிடம் ஓரிரு நிமிடம் பேசிவிட்டு சத்குரு பயணத்தைத் தொடர்கிறார்.

day11-tb-cc-pic7-8

day11-tb-cc-pic7-9

கரூர் செல்லும் வழியில் நின்றிருக்கும் இளைஞர்கள்

day11-tb-cc-pic2-6

அடுத்தது கரூரில்: சாலையில் மேடைதான் அமைக்கவில்லை. அத்தனை மக்கள் கூடியுள்ளார்கள். மைக்கும் எடுத்துவந்து தயாராக இருந்தார்கள் போலும்! அங்கேயே சத்குரு அவர்களுடன் சில நிமிட கூட்டம் நடத்திவிட்டு கிளம்புகிறார்கள்.

day11-tb-cc-pic7-1

day11-tb-cc-pic7-2

day11-tb-cc-pic2-9

day11-tb-cc-pic2-8

day11-tb-cc-pic7-13

day11-tb-cc-pic7-14

தொடரும் பைக் பயணம்

day11-tb-cc-pic2-7

day11-tb-cc-pic2-10

இளநீர்-வேளை…

day11-tb-cc-pic2-11

day11-tb-cc-pic2-5

இம்முறை வழியில் நிற்பது பள்ளிக்குழந்தைகளின் ஈடுபாட்டால்

day11-tb-cc-pic2-3

day11-tb-cc-pic3-13

11:30 மணியளவில் தமிழ்நாடு வன மரம் நடும் கழகத்தில் (TAFCORN) பொதுக்கூட்டம்

day11-tb-cc-pic2-12

day11-tb-cc-pic2-16

day11-tb-cc-pic3-5

day11-tb-cc-pic2-4

day11-tb-cc-pic2-13

day11-tb-cc-pic2-17

சிறப்பு விருந்தினர்கள்:

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெள்ளமண்டி N.நடராஜன் அவர்கள்

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் திருமதி.வளர்மதி அவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர் திரு.O.P.ரவீந்திரநாத் குமார் அவர்கள்

நடிகர் திரு.சரத்குமார் அவர்கள்

day11-tb-cc-pic2-2

கோபிசெட்டிபாளைய வேளாண்காடு விவசாயி திரு.செந்தில்குமார் அவர்கள்

day11-tb-cc-pic3-6

தண்ணீர் வளம் நிறைந்த என் தோட்டத்தில் 10 வருடத்துக்கு முன்பு கிணற்றில் நீரில்லாமல் இருந்தபோது ஈஷாவின் வழிகாட்டுதலில் இயற்கை விவசாயம் பின்பற்றினேன். வரப்போரம் 500 மரம் வைத்தேன். படிப்படியாக நிலம் வளமானது. விழுந்த இலை தழைகளை வயலின் நடுவே உரமாக பயன்படுத்தியபோது என் வயலே வளமானது, அதனால் வயல் முழுவதும் மரம் வைத்து ஊடுபயிராக மஞ்சள், வாழை, கரும்பு, சேனை வைத்திருக்கிறேன். அனைத்தும் தரமாக, மகசூல் நன்றாக உள்ளது.

தட்பவெப்பஉதவி:

வெளியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும், என் நிலம் ஈரப்பதத்துடன் உள்ளது

கடும் மழை பெய்தாலும், மரங்கள் குடைபோல் செயல்பட்டு, பயிர்களின் மேல் மெதுவாக மழைத்துளி விழ வழிசெய்கிறது. அதோடு நீரும் வேகமாக நிலத்திற்குள் செல்கிறது

மகசூல் அதிகம். தரம் அதிகம். அதனால் வருமானமும் பன்மடங்காக உயர்ந்துள்ளது.

நேற்றுசத்குருஎன்வயலுக்குவந்தபோது நெல் பயிருக்கு நடுவே 15 அடிக்கு ஒரு மரம் வைத்தால் நெல்லின் தரம் அதிகரிக்கும் என்றார் அதையும் செய்துகாட்டப் போகிறேன். வேளாண்காடு விவசாயத்தால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறவேண்டும்!

நடிகர் சரத்குமார் அவர்கள்:

day11-tb-cc-pic3-7

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவிடம் மரம் நடுவதற்கு நீருக்கு என்ன செய்வது என்று கேட்டேன். மரம் வளர்ந்தால், நிலத்திற்கு நீர் தானாக வரும் என்றார். இந்த வேளாண்காடு வளர்ப்பில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். மண்ணைக் காத்தவர்கள், நீர்வளம் காத்தவர்கள், விவசாயம் காத்தவர்கள், மக்களைக் காத்தவர்கள் என்று அடுத்த தலைமுறை நம்மை பார்த்து பெருமை கொள்ளவேண்டும். சத்குருவுடன் இம்முயற்சியில் இணைந்திருப்பது எங்கள் மகிழ்ச்சி. ஜாதி, மத, மொழி, அரசியல் பேதங்கள் தாண்டி இதற்கு ஒத்துழைப்போம். நீங்கள் ஒவ்வொருவரும் 4 மரங்ககேனும் நடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வரும்வழியில் மக்கள் சத்குருவை மலர்கள் தூவி வரவேற்றார்கள். 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட்டுவிட்டு மீண்டும் நிச்சயம் மக்களை சந்திப்போம்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு.O.P.ரவீந்திரநாத் குமார் அவர்கள்

day11-tb-cc-pic3-8

திருச்சி, தஞ்சாவூர் என்பது காவேரியின் மடி. இன்று இதுபத்தி பேசி, நாளையே இதை நாம் மறந்துவிடக்கூடாது. நம் வருங்கால சந்ததியினரின் நலனுக்காக இதை நாம் வெற்றிகரமாக செயல்படுத்தியே ஆகவேண்டும்.

1 வருடத்தில் 1 கோடி மரக்கன்றுகள் உருவாக்கிக் கொடுக்க இவர் உறுதி பூண்டிருக்கிறார்.

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் திருமதி.வளர்மதி அவர்கள்

day11-tb-cc-pic3-9

காவேரியின் அழைப்பிற்கு பதில்கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம்மை அவள் பல ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது சத்குரு கூறியதும்தான் நமக்கு கவனம் வருகிறது. இதை நாம் செயல்படுத்த வேண்டும்.

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெள்ளமண்டி N.நடராஜன் அவர்கள்

day11-tb-cc-pic3-10

போனமுறை நதிகளை மீட்போம் பேரணியிலும் நாங்கள் கலந்துகொண்டோம். இப்போது செயலில் இறங்கவேண்டிய நேரம். இதை முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தேவையான கொள்கை மாற்றங்கள் வர முயற்சி எடுப்போம்.

சத்குரு:

day11-tb-cc-pic3-12

இதுவரை வருடாவருடம் ஒரேயளவு மழைதான் பெய்திருக்கிறது. அதற்கான அறிக்கைகள் நம்மிடம் உள்ளன. என்னவொன்று 100-140 நாட்களில் பெய்யாமல், 40-75 நாட்களுக்குள் மொத்தமும் கொட்டிவிடுகிறது. காரணம் தேவையான மரம் செடி இல்லை.

ஒன்று மழை வரவில்லை என்கிறார்கள், இல்லை அதிக மழை என்கிறார்கள். உண்மை என்னவெனில் ஒன்றிரண்டு ஆண்டுகளைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளுமே அதேயளவு மழை பெய்திருக்கிறது. 140 நாட்கள்ல மழை பரவலா பெய்தா அதை பிடித்து வைத்து 365 நாட்கள் சுலபமா வாழலாம். ஆனால் இப்போது பிடித்து வைக்க சிரமமாக உள்ளது.

இதற்குக் காரணம் "க்ளவுட் பர்ஸ்ட்". அதாவது ஒரே இடத்தில் மேகம் வெடித்து மழை கொட்டுவது. இது சாமான்யமாக உயரம் அதிகமாக இருக்கும் மரம் இல்லாத பிரதேசங்கள் அல்லது பாலைவனங்களில்தான் இதுபோல் நடக்கும். இப்போது நம் நாட்டில் நடக்கிறது என்றால் இயற்கை நம் நிலத்தை பாலைவனமாக உணர்கிறது.

இதை மாற்ற மரங்கள் வேண்டும். ஏனெனில் 1 கோடி மரம் இருந்தால், மரத்தின் மேல்பாகம், கார்மேகம் தொடர்பு கொண்டு, தேவையான மழையை மட்டும் விழச் செய்கிறது. இதற்கு இப்போது விஞ்ஞான அடிப்படையில நிரூபனம் செய்யறாங்க. நம் கலாச்சாரத்தில் முன்பிருந்தே இதை அறிந்திருந்தார்கள். ஆனால் வெளிநாட்டவர் சொன்னால்தான் நாம் ஒப்புக்கொள்வோம்.

242 கோடி மரங்கள் வைத்தால் இந்நிலை மாறும். இது எப்படி மாறும் என்று தெளிவாக நம் இணையத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதில் 5 point படித்து 100 பேருக்கு புரியவைத்து மரவிவசாயம் பரவ வழிசெய்யுங்கள்.

day11-tb-cc-pic3-11

 

காலையில் சத்குரு TAFCORN நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நம் பங்கேற்பாளர்கள் காவேரிக்கரையில் மற்றுமொரு கோவிலுக்கு சென்றுவிட்டு பின் சத்குருவின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.. வழக்கம்போல் காலை குருபூஜையுடன் இவர்களின் நாள் ஆரம்பித்தது

day11-tb-cc-pic4-1

day11-tb-cc-pic4-4

day11-tb-cc-pic4-3

day11-tb-cc-pic4-5

day11-tb-cc-pic4-2

day11-tb-cc-pic4-6

day11-tb-cc-pic4-7

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அடுத்த பொதுக்கூட்டம் நிகழவுள்ளது. செல்லும் வழியில் ஒரு ஆழமரத்தடியில் டீ குடிக்க நிற்கிறார்கள். சத்குரு அந்த டீயைக் குடித்தவாறு, "இந்த அழகிய ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கிறோம். செல்லும் இடமெல்லாம ஆங்காங்கே தூற்றுக்கணக்கான மக்கள், வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்க்ளோடு நின்று என்னால் பேசமுடியாது என்று தெரிந்தாலும், வழியில் நிற்கிறார்கள். எல்லோருக்கும் காவேரி கூக்குரல் பற்றி தெரிந்திருக்கிறது. இது நல்லது. ஏனெனில் இவர்கள் கையில்தான் மண் உள்ளது. இவர்கள்தான் மனம் வைத்து செயல்பட வேண்டும்."

டீயை சுட்டிக்காட்டி, "லாரி டிரைவர்கள் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக குடிக்கும் டீ இது. இதைக் குடித்தால் 3 நாட்களுக்கு தூங்கமுடியாது" என்று சிரிக்கிறார்.

அடுத்தது திருச்சி கலைஞர் அறிவாலயம்…

day11-tb-cc-pic5-12

Day11-Changed-1

 

day11-tb-cc-pic5-2

day11-tb-cc-pic5-4

சிறப்பு விருந்தினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசர் அவர்கள்

மேற்குத் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.N.நேரு அவர்கள்

திருவேம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்

 

கோபிசெட்டிபாளையன் வேளாண்காடு விவசாயி திரு. செந்தில்குமார் அவர்கள்

day11-tb-cc-pic5-11

பவானி ஆற்றங்கரையில் நிறைந்த நீர்வளத்தோடு வளமான பூமியாக இருந்த என் நிலம் 10 வருடத்துக்கு முன்னால் தண்ணீர் கஷ்டம் ஏற்பட்டது. போர்வெல் போட்டும் பலனளிக்காமல் இருந்தபோது ஈஷாவின் வழிகாட்டுதலில், ஆடு-மாடுகளின் சாணம் கொண்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன். மண் மறுபடியும் வளமானது. தண்ணீர் தேவை குறைந்தது, உழைப்பின் பளு குறைந்தது.

வரப்போரம் மரம் வைத்தோம். அடுத்து ஊடுபயிறாக மரம் வளர்த்தால் வளம் அதிகமாகும் என்றார்கள். அதையும் செய்தேன். பார்த்தவர்கள் ஏளனம் செய்தார்கள். ஆனால் இன்று எல்லோரும் பின்பற்றுகிறார்கள். மஞ்சள், சேனை, கரும்பு, வாழை எல்லாம் மரத்தினடுவே இருப்பதால் தரமான விளைச்சல் கிடைக்கிறது. 8-10 வருடங்களில் சிறந்த வெள்ளாமை.

மற்றவர்களின் நிலத்தில் மஞ்சள் க்வின்டாலுக்கு ₹7,000. ஆனால் என் நிலத்தில் ₹12,500. வாழை மற்றவர் நிலங்களில் ₹200. என் நிலத்தில் ₹300. காரணம் தரம். அதோடு மரம் இருப்பதால் கடும் காற்றிலும் என் வாழை, கரும்பு சேதமாவதில்லை. சுற்றி இருக்கும் மரங்கள் பாதுகாப்பு அரணாக உள்ளது. என் வருமானம் அபரிமிதமாக உள்ளது. எல்லோருக்கும் எடுத்துச் செல்லும் சத்குருவிற்கு நன்றி. வேளாண்காடு விவசாயத்தால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறவேண்டும்!

மேற்குத் திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.N.நேரு

day11-tb-cc-pic5-6

நானும் ஒரு விவசாயி. 300 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்பவன். இயற்கை வேளாண்மை செய்துபார்த்தேன், ஆனால் வெற்றி பெறவில்லை. இவர் சொல்வதைப் பார்த்தால் மீண்டும் முயற்சிக்கத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு அன்பர், 1 லட்சம் சம்பளம் தந்த இரசாயன பொறியாளர் வேலையை விட்டுவிட்டு அடர்வனம் விவசாயம் செய்தார். அங்கு மழை கூடுதலாக வருகிறது. காவேரிக்கரையில் மரம்வெட்டி, மணல் அள்ளி கேடு விளைவித்தோம். இப்போது சரிசெய்ய வேண்டும். நாம் நினைத்தால் எதையும் செய்யமுடியும். சத்குரு அவர்களால் தமிழகம் வளம் பெரும். எத்தனையோ பணிகளுக்கிடையில் விவசாயிக்காக இதில் இறங்கியிருக்கிறீர்கள். எங்களால் முடிந்ததை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

மிக ஹாஸ்யமான ஒரு நொடி...

day11-tb-cc-pic5-8

திருவேம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி

day11-tb-cc-pic5-7

முதலில் இக்கூட்டத்திற்கு வர எனக்குத் தயக்கம் இருந்தது. அரசியல் கட்சி வேறு வேறாக இருக்கும்போது சரியாக இராது என்ற தயக்கம். ஆனால் நம் நாடு "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதுபோல், நம்மிடையே எத்தனை பேதங்கள் இருந்தாலும் அடிப்படையில் நாம் எல்லாம் மனிதர்கள். பல கட்சிகள் ஒன்றாக இதற்காகக் குரல் கொடுக்கிறார்கள். மனிதர்களாக நாம் நிச்சயம் இதை செயல்படுத்தியே ஆகவேண்டும். வருங்கால சந்ததியினர் நம்மை வெறுப்போடு மறக்கநினைக்கும் நிலையை நாம் உருவாக்கக் கூடாது என்று செயல்படுகிறீர்கள். 12 வருட உறுதி கேட்டீர்கள் சத்குரு. இத்திட்டம் வெற்றிகரமாக முடியும்வரை உங்களுடன் சேர்ந்து நிற்பேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசர்

day11-tb-cc-pic5-5

நானும் ஈஷாவில் ஒரு அன்பன். ஈஷா யோக மையத்தில் தங்கியிருந்து நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கிறேன். அறந்தாங்கியில் எனக்கு 25 ஏக்கர் நிலமுள்ளது. என் தந்தை விவசாயி என்பதால் நானும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு விவசாயியாக இந்த இயக்கத்தை நான் வரவேற்கிறேன். ஆன்மீகம் என்பதோடு நில்லாமல், மண்வளம், விவசாயி நலம என பெரும் பொறுப்புகளை சத்குரு ஏற்கிறார். மத்திய அரசாங்கத்தாலும் மாநில அரசாங்கத்தாலும் செய்யமுடியாததை இவர் செய்து கொண்டிருக்கிறார்.

மண், நீர், மரம் ஆகிய மூன்றையும் பாதுகாத்தால்தான் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும். 20-25 வயது இளைஞன் செய்யவதற்கல்ல நினைப்பதற்கே தயங்கும் வேலைகளை இந்த வயதில் இவர் ஏற்றிருக்கிறார். இவர் மக்களின் குரு. மக்களின் நல்வாழிவிற்காகவே அனைத்தும் செய்கிறார்.

சத்குரு:

day11-tb-cc-pic5-9

எங்கு சென்று காவேரி என்று சொன்னாலும் உடனே, "ஓ! காவேரி பிரச்சினையா?" என்கிறார்கள். காவேரி என்பவள் நமக்குத் தாயா? பிரச்சினையா? யாரும் காவேரி பிரச்சினை என்று பேசக்கூடாது. நமக்குத் தாயாக, நம் உயிருக்கு மூலமாக இருப்பவள் காவேரி. அவளைப் பற்றிப் பேசும்போது காவேரித்தாய் என்று சொல்லவேண்டும். இதை 2 மாநில பிரச்சினை என்றும்கூட சொல்லமுடியாது.

இப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் இருக்கு என்று வைத்துக்கொள்ளுகள். இருவரும் ஆளுக்கொரு டம்ளர் தண்ணீர் குடித்து ஆனந்தமாக வாழலாம். ஆனால் இப்போது ஒரேவொரு டம்ளர் மட்டும்தான் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த டம்ளருக்கு அருகில் இருப்பவர் அதை உடனே குடிக்க நினைப்பாரா? இல்லையா? மாநிலத்தை விடுங்கள். உங்களுக்கும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் ஒரு குடம்தான் நீர் இருக்கிறது. என்ன நடக்கும்? சரி அதையும் விடுங்கள். இப்போது உங்கள் வீட்டிற்குள் 1 டம்ளர்தான் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வீட்டிற்குள்ளேயே பிரச்சினை உருவாகுமா? இல்லையா?

இரு மாநிலங்களுக்கும் இடையே தீராத பகை என்று எதுவுமில்லை. தண்ணீர் பற்றாக்குறை அவ்வளவுதான். இருப்பது 1 டம்ளர் தண்ணீர் எனும்போது, நீங்கள் சட்டம் பேசலாம், நீதிமன்றம் போகலாம், குடிக்கக்கூடாது, குடித்தால் தூக்கிலிடுவேன் என்றும் கூட தீர்ப்பு சொல்லலாம். ஆனால் கேட்பாரா? காத்திருப்பாரா? அவ்வளவுதான் பிரச்சினை. இப்படியே இன்னும் 15-20 வருடங்கள் சண்டைபோட்டுக் கொண்டிருந்தால், அதன்பின் சண்டையே இருக்காது, ஏனெனில் தண்ணீரே இருக்காது.

நான் மிகைப்படுத்தவில்லை. நான் சொல்வதைவிட இங்கிருக்கும் பிரச்சினை மிக அதிகமாக உள்ளது. நதியில் தண்ணீர் ஓடினால் பிரச்சினையில்லை. ஆனால் காவேரியில் வருடத்திற்கு 5 மாதம் தண்ணீர் இருப்பதில்லையே. இந்நிலையில் வீட்டிற்குள்ளேயே சண்டை வருமா? வராதா? நீங்களே சொல்லுங்கள். அதுதானே நடக்கிறது? சண்டை போட்டால் தண்ணீர் வந்துவிடுமா? பேருந்தை எரித்தால் வந்துவிடுமா? பேருந்தை எரித்தால் நீங்கள்தான் நாளை நடந்துசெல்ல வேண்டியிருக்கும்.

காவேரி என்பது 1 நதியல்ல. கொடுகு மழையில் தோன்றுமிடத்தில் காவேரி சிறு ஓடையாகத்தான் தோன்றுகிறாள், ஆனால் வழியில் 120 ஆறுகள், பல ஓடைகள் எல்லாம் கலப்பதால் அவள் இப்படியொரு மகத்தான நதியாக உருவெடுக்கிறாள். இந்த 120ம் ஜீவநதிகளாக இருந்தவை. இன்று 35 நதிகள்தான் உள்ளன. காவேரியில் நீரோட வேண்டுமென்றால் இந்த 120 ஆறுகளும் அந்த சிறு ஓடைகள் எல்லாவற்றிலும் நீரோட வேண்டும். ஆனால் இப்போது அவற்றில் பலவற்றை நாம் காணமுடியாது ஏனெனில் அவற்றின் மீது கட்டிடங்கள் கட்டியிருப்பீர்கள். இப்போது இந்த வடிநிலத்தையே புத்துயிரூட்ட வேண்டும். அதாவது 82,000 சதுர கிமீ. இதன் அடிப்படையில்தான் 242 கோடி மரம் வந்துள்ளது.

காவேரி என்பவள் தாய். அவள் பிரச்சினையில்லை. இவ்வருடம் இங்கு பிறக்கும் ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் காவேரி என்று பெயர் வைக்கலாமா? "காவேரி" என்று அன்பாக அழைக்கவில்லை என்றால், அவள் பற்றிய உணர்வில்லை என்றால் நாம் ஏதேனும் செயல் செய்வோமா? கவனம் வேண்டும். குழந்தைக்கு பேர் வைத்தால் கூப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள் அல்லவா? அதனால் பிறக்கும் எல்லாக் குழந்தையும் காவேரி!

242 கோடி மரங்கள் வைத்தால் இந்நிலை மாறும். இது எப்படி மாறும் என்று தெளிவாக நம் இணையத்தில் குறிப்பிட்டுள்ளோம். அதில் 5 point படித்து 100 பேருக்கு புரியவைத்து மரவிவசாயம் பரவ வழிசெய்யுங்கள்.

day11-tb-cc-pic5-10

மதியம் 3:15 மணியளவில் ஸ்ரீரங்கம் பாலத்தில்

day11-tb-cc-pic7-18

day11-tb-cc-pic7-19

3:40 மணியளவில் சத்குரு ஸ்ரீபிரம்மா ஆசிரமத்தில் பங்கேற்பாளர்கள் இருக்க வெளியில் 10 நிமிடமாக சத்குரு நின்றிருக்கிறார். உள்ளிருந்து வெளியே வந்தவர்கள் சத்குருவின் முன் அமர்ந்ததும் அவர்கள் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

day11-tb-cc-pic7-19

day11-tb-cc-pic7-20

 

ஒருகோடி மரக்கன்று வழங்க உறுதி கொண்டிருக்கும் O.P.ரவீந்திரநாத் அவர்களுக்கு நன்றி!

 

மாலை 5 மணியளவில் தஞ்சாவூர்…

day11-tb-cc-pic7-3

பகிர்தல்கள்

மும்பையில் கட்டிடக்கலை வல்லுநரான பங்கேற்பாளர் ஆதித்யா ஜெஸ்வால் அவர்கள் (இடது), " இயற்கைக்கு பணி செய்ய இதைவிட சிறந்த வாய்ப்பு இருக்கமுடியாது. இந்த பயணத்தில் அவரோடு பயணிக்க சத்குரு எனக்கு வாய்ப்பு கொடுத்தது எனக்குக் கிடைத்திருக்கும் பாக்கியம்" என்றார்.

"அழகிய மனம் படைத்தவர் சத்குரு. எங்கள் தஞ்சாவூரில் தண்ணீர் கஷ்டம் அதிகமாக உள்ளது. காவேரி கூக்குரல் மூலம் அதை சரிசெய்ய சத்குரு அவர்கள் முயற்சி மேற்கொண்டிருப்பது மிக அற்புதமான ஒரு விஷயம். எங்கள் வீட்டில் 12 சித்தர்களுக்கு நடுவில் இவரது புகைப்படத்தை வைத்திருக்கிறேன்" - தஞ்சாவூரில் பங்கேற்பாளர்கள் தங்குமிடத்தில் வேலைசெய்யும் புகைப்பட வல்லுநர் பாஷா அவர்கள்

day11-tb-cc-pic7-1

day11-tb-cc-pic7-21

7:30 மணிக்கு தஞ்சாவூர் மஹாராஜா மஹாலில் பொதுக்கூட்டம்

day11-tb-cc-pic7-11

வந்திருக்கும் மக்கள்

day11-tb-cc-pic7-22

day11-tb-cc-pic7-15

சம்ஸ்கிருதி மாணவர்களின் களறி நிகழ்ச்சி

day11-tb-cc-pic7-6

day11-tb-cc-pic7-7

day11-tb-cc-pic7-9

day11-tb-cc-pic7-16

 

சிறப்பு விருந்தினர்கள்:

திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகரன் அவர்கள் , பூண்டி இளவல் TKV கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள், திரு.சுவாமிநாதன் அவர்கள், பாம்பே இனிப்பகங்களின் நிர்வாக இயக்குநர் திரு.மணி அவர்கள், தாமரை சர்வதேசப் பள்ளி தாளாளர் வெங்கடேசன் அவர்கள் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.O.P.ரவீந்திரநாத் அவர்கள்

Day11-Changed-8

 

Day11-Changed-9

 

Day11-Changed-10

 

வானிலை ஆய்வாளர் திரு.செல்லகுமார் சில நிமிடங்கள் பேசியதாவது:

day11-tb-cc-pic7-14.

சத்குரு இத்தனை ஆண்டுகளாக செயல் செய்திருக்கவில்லை என்றால் நம் தமிழகம் எப்போதோ சீர்குலைந்திருக்கும். அப்போதெல்லாம் நெல் மூட்டைகளை வைத்துக்கொண்டு படகில் ஊருக்கு எடுத்து வருவோம். இப்போது ஓடைகள் என்ன ஆறுகளே வறண்டுவிட்ட நிலை உருவாகியுள்ளது. காற்றை மேகமாக மாற்றி மண்ணில் மழை வரசெய்ய மரங்களால் முடியும். இனியும் தாமதிக்க நேரமில்லை. சத்குருவுடன் இணைந்து நீங்களும் இந்த செயல்திட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 

சத்குரு:

day11-tb-cc-pic7-10

 

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு சத்குரு கிளம்புகிறார்

Day11-Changed-11Day11-Changed-12

 

 

இரவு உணவுவேளையில் பங்கேற்பாளர்களுடன்

Day11-Changed-13

Day11-Changed-14

நாள் 11 நிகழ்வுகளின் தொகுப்பு

மேலும் படிக்க...

cavery kookkural விவசாயிகள் சேர்க்கை kavery kookkural தன்னார்வ செயல்கள் cavery kookkural பிரபலங்கள்
     
kaveri kookkural சத்குரு வீடியோ kavery kookkural கட்டுரைகள் kavery kookkural நாளிதழ் செய்திகள்
     
kavery kookkural சேனல் செய்திகள் kavery kookkural சிந்தனைக் கருவூலம் kavery kookkural விவசாயி வெற்றிக் கதைகள்