பிரெட் பொரியல்
பிரெட்டின் வகையறாக்களான பிரெட் பட்டர் ஜாம், பிரெட் சென்னா போன்றவைகளை நீங்கள் தயாரித்து சுவைத்திருக்க முடியும். அதேபோல் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பிரெட் பொரியலையும் தயாரித்து ருசித்துப் பாருங்கள்...
 
ஈஷா ருசி

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 15 (கட்டமாக வெட்டி வைக்கவும்)
நெய் - 50 கிராம்
தக்காளி - 2
குடை மிளகாய் - 1
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்

தாளிக்க...
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - ½ ஸ்பூன்

செய்முறை:

  • வாணலியில் நெய் விட்டு சிறிய தீயில் சூடு செய்யவும்.
  • சூடு ஏறியதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு தாளித்து பின் இஞ்சி விழுது, தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது கிளறி அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும்.
  • இதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
  • தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
 
  0 Comments
 
Login / to join the conversation1