பிரட் கோலா உருண்டை !
பிரட்டை அப்படியே சாப்பிடும் பழக்கமுடையவர்கள், தங்கள் கற்பனைத் திறனுக்கேற்ப பல உணவுகளை தயாரிக்க முடியும். இதோ இங்கே சேம்பிலுக்காக இரண்டு உணவு பதார்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நாவுணர்ச்சியை தூண்டும் பிரட் கோலா உருண்டை மற்றும் பிரட் குலாப் ஜாமுன் உங்களுக்காக...
 
ஈஷா ருசி

பிரட் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்

பிரெட் - 10
தயிர் - 2 கப்
கேரட் - 1/2 கப் (துருவியது)
தக்காளி - 1/2 கப் (சிறிதாக நறுக்கியது)
வெள்ளரிக்காய் - 1/2 கப் (சிறிதாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1/4 கப் (சிறிதாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
சாட் மசாலா - சிறிதளவு

செய்முறை

பிரெட்டின் நான்கு பக்கங்களையும் வெட்டி, அதை தண்ணீரில் நனைத்து உருண்டையாக பிடித்துக் தட்டில் வைத்து கொள்ளவும். (ஒரு உருண்டைக்கு 1 பிரட்) தயிர், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை நன்கு கலக்கி, பிரெட் உருண்டைகளின் மேல் ஊற்றவும். பிறகு கேரட், தக்காளி, கொத்தமல்லி, வெள்ளரிக்காய், சாட் மசாலா ஆகியவற்றை உருண்டையின் மேல் தூவினால் பிரெட் கோலா உருண்டை ரெடி. குழந்தைகள் கேட்டு வாங்கி உண்பர்.

பிரட் குலாப்ஜாமுன்

தேவையான பொருட்கள்

பிரட் - 6
காய்ச்சிய பால் - சிறிதளவு
வெள்ளை சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு வாணலியில் வெள்ளைச் சர்க்கரையைப் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்து சிறிது கெட்டியானதுடன் ஏலக்காய் தூள் போட்டு தனியாக வைத்துக் கொள்ளவும். பிரட்டில் தேவையான அளவு பாலை ஊற்றி உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து பாகில் போட்டால் சுவையான பிரட் குலாப்ஜாமுன் ரெடி.

  0 Comments
 
Login / to join the conversation1