பைரவி புண்ணிய பூஜா
"பைரவியின் அருளைப் பெற்றவர்கள் வாழ்வு, மரணம், ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து அக்கறையோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை. பைரவியின் அருளைப் பெற்றால், எவையெல்லாம் நல்வாழ்வு என ஒரு மனிதர் கருதுகிறாரோ, அவையனைத்தும் அவருக்குக் கிடைக்கும்."
 
 

பைரவியின் அருளைப் பெற்றவர்கள் வாழ்வு, மரணம், ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து அக்கறையோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை. பைரவியின் அருளைப் பெற்றால், எவையெல்லாம் நல்வாழ்வு என ஒரு மனிதர் கருதுகிறாரோ, அவையனைத்தும் அவருக்குக் கிடைக்கும்.

- சத்குரு

ஜெய் பைரவி - இந்த வார்த்தையைக் கேட்டாலே கண்களில் நீர் வழிந்தோடும் பலருக்கு. பிள்ளைப் பேறு ஆகட்டும், பிள்ளைகளுக்கான வித்யாரம்பம் ஆகட்டும், நடக்காத திருமணம் ஆகட்டும், தீராத வியாதி ஆகட்டும், இறுதிக் கடன்களான காலபைரவ கர்மா ஆகட்டும், வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை அத்தனை அம்சங்களுக்கும் விடை சொல்லும் அற்புத தேவி - லிங்கபைரவி. பலரின் வாழ்வையே புரட்டிப் போட்டு அவர்களின் வாழ்வில் ஒரு பகுதியானவள்.

லிங்கபைரவியை உருவாக்கிய நாள் முதல் இன்று வரை, தேவியை பல ரூபங்களில் மக்களுக்கு அர்பபணித்து வந்திருக்கிறார் சத்குரு. அதில் தற்போதைய படியாய், லிங்கபைரவி புண்ணிய பூஜா...

இந்த செயல்முறையை செய்வதன் மூலம், லிங்கபைரவி மற்றுமொரு வடிவில், உங்கள் இல்லங்களில் குடியிருப்பாள்.

புதுவீட்டில் கிரஹப்பிரவேசம் செய்யும்போதோ, அல்லது ஏற்கனவே குடியிருக்கும் இல்லங்கள் மற்றும் அலுவலங்களிலோ இதை செய்து கொள்ள முடியும்.

பைரவி புண்ணிய பூஜையின் மூலம் லிங்கபைரவி அவ்வீட்டில் ஆக்ருஷிக்கப்படுகிறாள் (வரவழைப்பது). இந்த செயல்முறை முழுவதுமே லிங்கபைரவி கோவிலை பராமரிக்கும் பைராகினி மா ஒருவர் நேரடியாக வந்து செய்வார்.

இதைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த லிங்கபைரவி மந்திர உச்சாடனங்கள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தேவியின் இருப்பும் (Presence) அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

அதன் பிறகு தேவிக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்படும். சக்தியூட்டப்பட்ட பைரவியின் வடிவங்களை வீட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வைக்கப்பட்டு தேவி ஆலயத்தில் இருக்கக்கூடிய திரிசூலத்தில் மட்டுமே கட்டப்படும் சூத்திரம் இந்த வீட்டிலும் கட்டப்படும்.
இது தங்கள் வீட்டை தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும், வீட்டில் மங்களம் நிறைந்திருக்கச் செய்யும்.

இந்த சடங்கை செய்து வரும் பைராகினி மா சித்ரா, "பைரவியின் விளக்கை நான் ஏற்றியவுடன் அவளது தரிசனத்தை என்னால் உணர முடிகிறது. இப்பூஜையின் விளைவால் ஏற்பட்ட தீவிரமான சக்தியால் இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டிலுள்ள அனைவரும் தேவியோடு தொடர்பு கொள்வதைக் காண முடிகிறது," என்கிறார்.

மேலும், "வீட்டில், இந்த பூஜைக்குப் பிறகு, தேவியின் அரவணைப்பிலும் அவளது அருளிலும் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதை தீவிரமாக உணர முடிவதாக, பல நாட்களுக்குப் பிறகும், அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்," என்கிறார்.

இந்த பைரவி புண்ணிய பூஜா ஒரு மதம் சார்ந்த சடங்கு அல்ல. இது ஒரு தொன்மையான அறிவியல், ஒவ்வொருவரும் உணரக்கூடிய உயிரோட்டமுள்ள சக்திப் பரிமாற்றம்.

சத்குருவிடமிருந்து வரும் எந்தவொரு விஷயமும் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் அதிஆழமானது.


உங்கள் இல்லங்களிலும் இந்த பூஜை நடைபெற...
யோகினி டிரஸ்ட்,
லிங்கபைரவி திருக்கோவில்,
தொலைபேசி எண்: 94890 00333/ 94433 65631
temple@lingabhairavi.org
சென்னையில் பதிவு செய்துக் கொள்ள: திருமதி.சீதா 99623 24466

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1