பெங்களூரூ மாரத்தானில் ஓடிய ஈஷாக்கள்!
300க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூரூ TCS World 10K மாரத்தானில் ஓடினர். போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்பதல்ல இவர்கள் நோக்கம்! அதைவிட உன்னதமானது! மாரத்தானில் பங்கேற்றவர்கள் சிலரின் அனுபவங்களும் அங்கு நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் இங்கே!
 
 

300க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூரூ TCS World 10K மாரத்தானில் ஓடினர். போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்பதல்ல இவர்கள் நோக்கம்! அதைவிட உன்னதமானது! மாரத்தானில் பங்கேற்றவர்கள் சிலரின் அனுபவங்களும் அங்கு நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் இங்கே!

இந்த ஆண்டு எப்போதும் பார்க்காத சில காட்சிகளை பெங்களூரூ மாரத்தான் கொண்டிருந்தது. ஆம்... அங்கே பஞ்சகட்ச வேட்டிகளுடன் ஈஷா பிரம்மச்சாரிகளின் கால்கள் போட்டிக்கான இலக்கை நோக்கி விரைந்துகொண்டிருந்தன.

ஒருவர் 10கி.மீ தூரம் ஓடுவதற்கு தயாராகிறார் என்பதும், அதற்காக அவர் தன்னாலான முழு முயற்சியையும் செய்கிறார் என்பதும் அவரது குடும்ப உறுப்பினர்களிடத்திலும் நண்பர் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது.

TCS World 10K எனப்படும் இந்தியாவின் மிகப் பிரசித்திபெற்ற 10 கிமீ தூர மாரத்தான் ஓட்டப்போட்டி இந்த ஆண்டு ப்ரோகாம் (Procam) நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு நன்கொடை திரட்டுவதற்காக இந்த போட்டியில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஆச்சரியப்படத்தக்க வகையில் 300 பெங்களூரு தன்னார்வத் தொண்டர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் 100 பேர் 10கி.மீ தூர போட்டியிலும், எஞ்சியவர்கள் 6கி.மீ தூரப் போட்டியிலும் கலந்துகொண்டனர். ஈஷா வித்யாவிற்காக நன்கொடை திரட்டும் இந்த முயற்சியால் 100க்கும் மேற்பட்ட வசதிவாய்ப்பற்ற ஏழைக் குழந்தைகள் ஆங்கில கல்வியையும் கம்ப்யூட்டர் கல்வியையும் ஈஷா வித்யா பள்ளி வாயிலாகப் பெறுவார்கள். individual runners efforts அல்லது Isha Vidhya contribution page -இங்கே க்ளிக் செய்து உங்கள் நன்கொடைகளை வழங்குவதன் மூலம், இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு இப்போதும் உள்ளது!

உள்ளூர் தன்னார்வத் தொண்டரும் மாரத்தான் போட்டியில் அனுபவஸ்தருமான ஷ்ரேயா கர்னட் அவர்கள் புதிய வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். நிறைய தன்னார்வத் தொண்டர்கள் பலவித தன்னார்வத் தொண்டுகளிலும் நன்கொடை திரட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்ததால் ஓட்டப் பயிற்சிக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலையிருந்தது. இருப்பினும் அவர்கள் தங்கள் உத்வேகத்தை இழக்கவில்லை. நன்கொடை திரட்டுவது மற்றும் நீண்டதூர ஓட்டம் ஆகிய இரண்டையும் ஒருங்கே கையாண்டனர்.

இதுகுறித்து தன்னார்வத் தொண்டர் திவ்யா ஹேமச்சந்திரன் அவர்கள் கூறும்போது:

“நன்கொடை திரட்டும் செயலில் ஈடுபடும்போது இந்த கடினமான சவால் நிறைந்த பணியை நான் எப்படி மேற்கொள்ளப்போகிறேன் என நினைக்கும்போது ஒரு பெரிய மலைபோல் இருந்தது. ஆனால் நான் அந்த பணிகளில் என்னை நுழைத்துக்கொண்டவுடன், நான் இதற்காக பெரிய அளவில் மெனக்கெடத் தேவையிருக்காது எனப் புரிந்துகொண்டேன். நாம் மக்களின் கவனத்திற்கு ஈஷா வித்யாவைப் பற்றி கொண்டு சென்று, அவர்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதற்கான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவுதான்! அதோடு, ஒருவர் 10கி.மீ தூரம் ஓடுவதற்கு தயாராகிறார் என்பதும், அதற்காக அவர் தன்னாலான முழு முயற்சியையும் செய்கிறார் என்பதும் அவரது குடும்ப உறுப்பினர்களிடத்திலும் நண்பர் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் கவன ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு நன்கொடையைப் பெறும்போதும் நான் நிச்சயமாக எனது ஓட்டத்தை நிறைவுசெய்வேன் என்ற நம்பிக்கையை வழங்கி வந்தேன். ஆனால், போட்டிக்கான நாள் நெருங்க நெருங்க, பயிற்சிகள் அனைத்தையும் தவறவிட்ட எனக்கு சற்று நம்பிக்கையின்மை ஏற்பட்டது. போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு நான் பயிற்சி ஓட்டம் ஒன்றை பரிசோதித்துப் பார்க்க வேண்டுமா அல்லது நேரடியாக 10கி.மீ போட்டியில் கலந்துகொள்ளலாமா என பயிற்சியாளருடன் கலந்தாலோசித்தேன். பதில் மிகத் தெளிவாக வந்தது! ஓடுங்கள்... என்னதான் நடக்கிறதெனப் பார்ப்போம்!

இவர்களில் ஆறு பிரம்மசாரிகள் பெங்களூரூ மாரத்தானில் 55 நிமிடங்களுக்குள்ளாகவே பந்தய தூரத்தை அடைந்திருந்தனர்.

சிறிது ஓட்டமும் சிறிது நடையுமாக ஒருவழியாக நான் போட்டியை முடித்துவிட்டேன்! வார்ம் அப் செய்ததில் துவங்கி குரு பூஜையில் கலந்துகொண்டு ஆரவாரம் மற்றும் கைதட்டல்களுக்கிடையே போட்டியில் ஓடத் துவங்கிய தருணமும், புகைப்பட பதிவுகளும், இந்த பெரும் நிகழ்வில் ஒரு பகுதியாக இருந்துள்ளேன் என்ற அனுபவமும் மிகவும் உற்சாகம் தரும் அம்சமாக அமைந்தன. அடுத்த இரண்டு நாட்களுக்கு கால்களில் வலி ஆட்கொண்டிருந்தாலும், இதயத்தில் நிறைந்திருந்த ஆனந்தம் அதைவிடப் பெரிதாக இருந்தது.”

சென்னையைச் சேர்ந்த பூஜா மஹாதேவன் போன்ற வீரர்கள் நல்ல அனுபவம் மிக்க மாரத்தான் வீரர்களாக இருந்தாலும், அவர்களுக்கு World 10K போட்டியில் கலந்துகொள்வது முதல் அனுபவமாகவே இருந்தது. “நான் பல போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும் இதுபோன்றதொரு உன்னத நோக்கத்திற்காக நான் இதுவரை கலந்துகொண்டதில்லை. ஈஷா வித்யாவிற்கு நன்கொடை திரட்டுவதற்காக ஓடுவதென்பது, நான் இதுவரை செய்யாத மனம் நிறைவான விஷயமாகும். இதற்காக செயல்படும் மக்களைப் பார்க்கும்போது மிகவும் பிரம்மிப்பாகவும் ஆனந்தமாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு அற்புத அனுபவமாகவும் புதிய அனுபவத்தைக் கற்றுக்கொள்ளும் விதமாகவும் எனக்கு அமைந்தது.”

போட்டியில் பங்கேற்ற ஈஷா ஆசிரமவாசிகள்!

ஈஷா யோகா மையத்திலிருந்து பதினான்கு பிரம்மச்சாரிகள், மூன்று பிரம்மச்சாரினிகள் மற்றும் ஏழு ஆசிரமவாசிகள் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டனர். இவர்களில் பலர் கடந்த சில மாதங்களாக போட்டிக்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு, தங்களை ஆயத்தப்படுத்தி இருந்தனர். மேலும் சிலர் ஜனவரி மாதம் சென்னையில் நடந்த மாரத்தானில் பாதியளவு தூரப் போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களில் ஆறு பிரம்மசாரிகள் பெங்களூரூ மாரத்தானில் 55 நிமிடங்களுக்குள்ளாகவே பந்தய தூரத்தை அடைந்திருந்தனர். இதில் 45 நிமிடங்களை அவர்கள் சிறப்பாக பயன்படுத்தியிருந்தனர். F பிரிவான இறுதி செட் ஓட்ட வீரர்கள் பிரிவிலிருந்து புறப்பட்டபோதும் இவர்களால் இதை சாதிக்க முடிந்துள்ளது அசாதாரணமான விஷயமாகும்.

அந்த பிரம்மச்சாரிகளில் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது:

“நான் 10கிமீட்டர் தூரத்தை 60 நிமிடங்களுக்கு உள்ளாக முடிப்பதற்கு நம்பிக்கைகொண்டிருந்தேன். எனவே நான் மாரத்தானுக்கு முன்னதாக, கல் குத்துவதை ஓரளவிற்கு தடுக்கும் வண்ணம் சாக்ஸ் மட்டுமே அணிந்தபடி வெறும் காலுடன் ஓடிப்பழகினேன்; பாதையிம் மேடு பள்ளங்களை அறியும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் 10கிமீ தூரம் முழுவதும் நடந்தே சென்றேன்; பனைவெல்லம் கலந்த தண்ணீருடன் கூடிய சிறிய தண்ணீர் பாட்டில் மட்டுமே வைத்திருந்தேன்; அதோடு வேகமாக ஓடும் மாரத்தான் வீரர்களைப் (pacer) பின் தொடரவும் செய்தேன்.

ஆசிரமத்திலிருந்து வந்திருந்த பெக்கி அவர்கள் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களான ஹென்னா M மற்றும் நாகராஜ் ஹர்ஷா ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் இருவரும் 55 நிமிட வேகத்தில் எல்லையைக் கடக்கும் வீரர்கள் ஆவர்.

போட்டி நாளன்று துவக்கக் கோட்டில் நான் 60 நிமிட pacer பார்த்தேன். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். முதல் கிலோமீட்டரின் முடிவில் நான் பார்த்தபோது அவருக்கு சிறிதளவே பின் தங்கியிருந்தேன். 55 நிமிட pacer எங்களுக்கு முன்னதாக சென்றுகொண்டிருந்தார். நான் 55 நிமிட pacerஐ பின்தொடர இயலாவிட்டாலும் குறைந்தபட்சம் 60 நிமிட pacerஐ பின்தொடரமுடியும் என நினைத்தேன். ஒருவேளை நான் 60 நிமிட pacerஐ பின்தொடர்ந்தால் எனக்கு 65 நிமிடங்கள் தேவைப்படும். எனவே நான் 55 நிமிட பேசரைப் பின் தொடரத் தீர்மானித்தேன்.

7 கி.மீ வரை நான் அவருக்குப் பின்னாலேயே இருந்தேன். அப்போது வீரர்கள் சிறிது பின்தங்க துவங்கினர். ஆனால், என்னுடைய பனைவெல்ல நீர் எனக்கு நல்ல சக்தி தந்ததால் என்னால் மேலும் முன்னேறிச் செல்ல முடிந்தது. நான் தொடர்ந்து 9வது கிலோ மீட்டர் வரை என்னால் முன்னேற முடிந்தது. அங்கு சாலைகளின் இருமருங்கிலும் கூடிநின்றிருந்த மக்கள் எங்களை கைதட்டி ஆரவாரம் செய்து ஊக்கப்படுத்தியது, எனக்கு இறுதி இலக்கை எட்டுவதற்கான தெம்பை கூடுதலாக அளித்தது. நான் எல்லையை எட்டியபோது 54 நிமிடங்கள் 20 நொடிகளில் கடந்திருப்பதை அறிந்து வியப்படைந்தேன். என்னுடைய காயமடைந்த மூட்டு மற்றும் மூச்சுத் திறணல் ஆகிய பிரச்சனைகளோடு என்னால் எப்படி இதனை சாதிக்க முடிந்தது என்பதை இன்னும் புரிந்துகொள்ளமுடியவில்லை.

பெங்களூரு தன்னார்வத் தொண்டர்கள் ஆசிரமவாசிகளை சிறப்பான முறையில் வரவேற்று தங்குமிடம் மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்கான பணிகளை சிரமேற்கொண்டு சிறப்பாக செய்திருந்தனர். பந்தயம் முடிந்த பிறகு பங்குகொண்ட அனைவரும் கபன் பூங்காவில் (Cubbon Park) அழகான சூழலில் மனம்விட்டுப் பேசி, ஈஷா வித்யாவிற்காக நன்கொடை திரட்டுவதற்காக ஓடிய தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டது ஒரு ஆனந்த அனுபவமாக இருந்தது.

ஈஷா வித்யாவில் பயிலும் கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் வாழ்வில் இந்த மாரத்தான் ஓட்டம் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, சென்னை மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ போன்ற இடங்களில் நிகழும் மாரத்தான்களில் ஈஷா வித்யாவிற்காக ஆண்டுதோறும் பங்கேற்று நன்கொடை திரட்டும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்! இதன்மூலம் 8 ஈஷா வித்யா பள்ளிகளில் 40 வகுப்பறைகள், மேசை நாற்காலிகள் போன்ற மரச்சாமான்கள், சுற்றுச்சுவர்கள் என பலவித தேவைகள் நிறைவடைந்துள்ளன. அனைத்திற்கும் மேலாக 2000 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1