உலக உயிர்களுக்கு ஒரு தாயாக…

யோகா ஆசிரியரான ஜெயக்குமார் ஒரு ஈஷா தன்னார்வத் தொண்டர். கோவை ஈஷா மையத்திலிருந்து வெகுதொலைவில் பிற ஊர்களுக்கு சென்று யோகா கற்றுத்தரும் இவர், தன்னுடன் இணைந்துள்ள மற்றும் பல தன்னார்வலர்களைப் போல தற்போது வைரஸை வெல்வோம் என்ற குறிக்கோளுடன் கிராமங்களிலுள்ள மக்களுக்கு உதவி புரிய துணிகரமாக செயல்பட்டு வருகிறார். பல தடைகளைத் தாண்டி மக்களுக்கு உதவும் இந்த அனுபவம் அவரின் மனநிலையை மாற்றியமைத்ததோடு மட்டுமல்லாமல், அவரது எல்லைகளைக் கடக்கவும் உதவுகிறது.

நரசீபுரம் பஞ்சாயத்தில் உள்ள மக்களோடு பணிபுரிந்து வரும் இவர், இந்த அனுபவம் தன்னை முற்றிலும் மாற்றியமைத்துள்ளதாகக் கூறுகிறார். இதற்கு முன் தனது வாழ்க்கை, ஒதுக்கப்பட்ட அலுவல்களை செய்வதிலும், யோகாவை பயிற்றுவிப்பதிலும் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்த ஜெயக்குமார், இன்று நரசீபுரம் பஞ்சாயத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வைப் பற்றி பெரும் அக்கறை கொண்டுள்ளார்.

blog_alternate_img
 

இப்போது தன்னுடைய எல்லைகள் எல்லாம் கரைந்து, அனைவரையும் தன்னுள் ஏற்றுக்கொள்ளும் பரந்த உள்ளம் கொண்டுள்ளதாக அவர் உணர்கிறார். ஒரு அன்புள்ளம் கொண்ட தாய், உலக உயிர்கள் மீது கொண்டுள்ள பரிவைப் போன்றதொரு உணர்வை, கோவை கிராம மக்களுடன் பணியாற்றும்போது, தான் பெறுவதாக ஜெயக்குமார் கூறுகிறார்.

மக்களின் நலனில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அங்குள்ள அனைவரது மதிப்பையும் அபிமானத்தையும் அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்று அவர் நரசீபுரம் பஞ்சாயத்து வீதிகளில் நடந்து செல்லும்போது பெரியவரும் சிறியவரும் பாரபட்சமின்றி அவரை அன்போடு "சாமி" என்று அழைக்கின்றனர். அவர்களின் கண்களில் மிளிர்கின்ற நம்பிக்கையும் அபிமானமும் இவரை நெகிழ்ச்சி அடைய செய்வதாகவும் "வாசுதெய்வ குடும்பகம்" (உலகம் ஒரே குடும்பம்) என்ற சமஸ்கிருத வாக்கியத்தின் சாராம்சத்தை இவரது உள்ளம் உணரும் வகையும் இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறுகிறார்.

கசப்பான கசாயத்திற்கு பெரும் வரவேற்பு

கசப்பான நிலவேம்பு கசாயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது. அதற்கு இளம் வயதினர் முதல் முதியவர் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பு உள்ளது. வடிவேலம்பாளையம் மற்றும் நாதேகவுண்டன்புதூர் கிராமங்களில் மக்கள் நம் தன்னார்வலர்களை அணுகி நிலவேம்பு கசாயம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில், சமூக விலகல் கடைப்பிடித்து வரிசைகளில் நின்று அந்த கிராம மக்கள் நிலவேம்பு கசாயம் குடிப்பதைப் பார்க்கும்போது, அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பெரும் மாறுதலை கண்கூடாக காண முடிகிறது என தன்னார்வலர்கள் கூறுகின்றனர். "தொடக்கத்தில் அந்த கசப்பான கசாயத்தை குடிக்க யாரும் முன் வரவில்லை. ஆனால், இப்போது அந்த கசாயத்தின் நன்மையை, நோயெதிர்ப்பு சக்தியை உணர்ந்த மக்கள், அதற்காக வரிசையில் பொறுமையோடு காத்திருக்கின்றனர்" என்று ஒரு தன்னார்வலர் கூறினார்.

blog_alternate_img
 

வீட்டை விட்டு வெகுதூரம் தள்ளி வந்து முன்பின் அறிமுகம் இல்லாத சூழலில் புதிய வாழ்க்கையை கையாளும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது. ஆனால், கிராமத்தினர் தங்கள் இதயங்களை அவர்களுக்காக திறந்து பல வகைகளில் தாமாகவே முன்னின்று அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.