மக்களுக்குப்பிடித்த சாம்பார் சாதம்

கிராமப்புற சமூகங்களில் இதுவரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருப்பது ஈஷாவின் சாம்பார் சாதம். கிராம மக்களின் உள்ளங்களில் ஏற்பட்ட திருப்தியும் நிறைவும் அவர்கள் முகத்தில் புன்னகையாக மலர்வதைக் காண்பதே தங்களுக்கு பெரும் வெகுமதி என்று தன்னார்வலர்கள் உணர்கிறார்கள். அந்த உணர்வு கொடுக்கும் உத்வேகத்தில் அவர்கள் இன்னும் நீண்ட தொலைவு கூடச் சென்று மக்களுக்கு விருப்பமான இந்த உணவை அவர்களுக்கு கொண்டுசேர்க்கின்றனர்.

நம் தன்னார்வலர் நவீன் அண்ணா கூறினார், "சாம்பார் சாதம் வரும் செய்தி காட்டுத்தீ போல பரவி, அடுத்த சில நிமிடங்களில் கிராம மக்கள் சாதத்தை பெற்றுக்கொள்ள வரிசையில் கூடுகிறார்கள்.” மக்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிய தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அங்குள்ள ஒரு பகுதியின் வார்டு கவுன்சிலர், சாம்பார் சாதம் வந்துள்ளதைப் பற்றி மற்ற மக்களுக்கு அறிவித்தார். மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்தபோது, "ஈஷா யோக மையத்திலிருந்து சிறப்பான உணவு வந்துள்ளது" என்று அறிவித்தார். இந்த சுவையான உணவிற்கு மக்களிடம் இருக்கும் விருப்பத்தை அறிந்திருந்த தன்னார்வலர்கள், எப்போதும் எடுத்துச் செல்லும் அளவை விட கூடுதலாக எடுத்துச் சென்றிருந்த போதிலும், அதுவும் போதாமல் போய்விட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிரதாப் என்ற தன்னார்வலர், "நாங்கள் மறுபடி சமைக்கும் இடத்துக்கு சென்று திரும்ப சாம்பார் சாதம் கொண்டு வரும் நிலைமை வந்தது" என்று கூறினார்.

ஜே.என்.பாளையத்திலும் மக்கள் அன்றைய உணவுப்பட்டியலில் சாம்பார் சாதம் இருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். அந்த கிராமத்தில் உள்ள ஊர்த்தலைவர்களும் சமூக விலகல் கடைப்பிடித்து வரிசையில் நின்றனர். அவர்களும் இந்த சுவையான சாம்பார் சாதத்தை சுவைக்க ஆவலோடு இருந்தனர்.

உரிமையுடன் கேட்ட சிறுமி

நம் தன்னார்வலர் ஜெயக்குமார் அண்ணாவை நோக்கி சென்ற ஒரு சிறுமி, அவளுக்கும் ஒரு உணவு பொட்டலம் வழங்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டாள். அவள் அந்த பொட்டலத்தை பிரித்து சுவைத்து சாம்பார் சாதத்தை உண்பதைக் கண்ட ஜெயக்குமார் அண்ணா, "இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்," என்று கூறினார். பொதுவாக தினமும் உணவு பொட்டலங்கள் குறிப்பிட்ட மக்களுக்கு பட்டியல்படி விநியோகிக்கப்படும். அந்த சிறுமி அப்பாவித்தனமாக, அதே சமயம் நம்பிக்கையோடு உரிமையோடு எழுப்பிய வேண்டுகோள், நம் தன்னார்வலர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதாய் இருந்தது. அவர்கள் கிராம மக்கள் யாரும் பட்டினியில் இருக்கக்கூடாது என்று உறுதியெடுத்தனர்.

blog_alternate_img

மூதாட்டி வழங்கிய ரப்பர் பேண்டுகள்

ஜே.என்.பாளையத்தை சேர்ந்த ஒரு வயதான பெண் நம் தன்னார்வலர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்க ஒன்று வைத்திருந்தார். அவர் மிக முயற்சியோடு நிறைய ரப்பர் பேண்ட்களை சேர்ந்து வைத்திருந்தார். களப்பணி புரியும் தன்னார்வலர்கள் அந்த பகுதிக்கு உணவும் நிலவேம்பு கசாயமும் வழங்க சென்றபோது, அந்த மூதாட்டி அவர்களிடம் அந்த ரப்பர் பேண்ட்களைக் கொடுத்தார். "நான் இவற்றை உங்களுக்காக சேகரித்து வைத்துள்ளேன். எங்களுக்கு நீங்கள் தினமும் கொடுக்கும் உணவு பொட்டலங்களைக் கட்ட இவற்றை உபயோகித்துக் கொள்ளுங்கள்," என்று அந்த மூதாட்டி கூறினார்.

காந்தி காலனியைச் சேர்ந்த அருணகிரி ஒரு ஆர்வமுள்ள ஆதரவாளர். ஈஷா தன்னார்வலர்களுக்கு தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு தன் உதவியை அளித்து வருகிறார். இப்போது நம் களப்பணியாற்றும் தன்னார்வலர்கள் அந்த பகுதியில் உணவு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பொறுப்பை அவரிடம் விட்டுள்ளனர். தினமும் நிலவேம்பு கசாயத்தை காந்தி காலனி மக்களுக்கு விநியோகிக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்துள்ளனர் நம் தன்னார்வலர்கள்.

blog_alternate_img