குணப்படுத்தும் அற்புத கசாயம்

பூலுவப்பட்டியை சேர்ந்த சில தூய்மைப் பணியாளர்கள் அவர்களுடைய குடிப்பழக்கத்தை விடுவதற்கான ஊக்கியாக நிலவேம்பு கசாயம் செயல்படுவதாக கூறினர். வைரஸை வெல்வோம் என்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், சாக்கடை சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பிக்கும் முன்னர் குடிப்பத்தை வழக்கமாக கொண்டிருந்தனர். ஊரடங்கால் மதுபானக்கடைகள் மூடியிருந்த நிலையில் அவர்களுக்கு மதுபானங்கள் கிடைக்காத நிலையில் இருந்தனர்.

இந்த போதைக்கு அடிமையாவதற்கு பதிலாக அந்த பணியாளர்கள் தங்களுடைய கவனத்தை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு கசாயத்தின் மேல் திருப்பினர். இப்போது அந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணியை ஆரம்பிக்கும் முன்னர், தினமும் நிலவேம்பு கசாயத்தைக் குடிப்பத்தை முக்கியமாக கருதுகின்றனர்.

"நாங்கள் இந்த கசாயத்தின் சுவைக்கு பெரிய ரசிகராகிவிட்டோம். நாங்கள் குடியை மறக்க இது பெரிதும் உதவுகிறது, இதனால் நாங்கள் மிக தெம்பாக இருப்பதாக உணர்கிறோம்," என்று அவர்களில் ஒருவர் நம் தன்னார்வலரிடம் வாக்குமூலம் அளித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
blog_alternate_img

பசியைத் தூண்டி ஆரோக்கியம் தரும் ஒரு பானம்

இந்த கசாயத்தை தினமும் அருந்துவதால் ஏற்படும் சுகாதார நலன்களைப் பற்றி கிராமப்புற மக்கள் தினமும் அளவளாவிக் கொள்கிறார்கள். ஒரு தன்னார்வலர் கூறினார், "சில சமயங்களில் நாங்கள் திரும்ப சென்று புதிதாக இந்த கசாயத்தை தயாரித்து மீண்டும் எடுத்து வரும்நிலை இருக்கிறது. ஊருக்குள் அதற்கு அத்தகைய ஒரு வரவேற்பு இருக்கிறது."

பூலுவப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் நம் தன்னார்வலரிடம் கூறினார், "நாங்கள் இப்போது ஆரோக்கியமாக நல்ல உடல் திடத்தோடு இருப்பதாக உணர்கிறோம். இந்த கசாயம் பலதரப்பட்ட நோய்களையும் போக்கும் என கிராம மக்கள் இப்போது உணருகிறார்கள். நாங்கள் நிலவேம்பு கசாயம் குடிக்க ஆரம்பித்ததில் இருந்து, தங்கள் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பத்தை கவனிப்பதாக பலரும் கூறுகின்றனர். மேலும், பலர் தங்களுக்கு நெடுநாளாக இருந்து வந்த நோய்களும் வயிற்று செரிமான கோளாறுகளும் சரியாகிவிட்டதாக கூறுகின்றனர்."

ஜாகிர்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், "தினமும் இந்த கசாயம் அருந்தும் காரணத்தினால், என் குழந்தைகளின் பசியார்வம் வெகுவாக உயர்ந்துள்ளது. அவர்கள் இப்போது நன்றாக உணவு உண்கிறார்கள்," என்று கூறினார்.

blog_alternate_img
 

புதூரில் சில மூதாட்டிகள் நம் தன்னார்வலர்களை வழி மறைத்தனர். அவர்கள் தாங்கள் தினமும் அருந்தும் நிலவேம்பு கசாயத்தை அன்று குடிப்பதை தவறவிட்டுவிட்டார்கள். அந்த கிராமத்தின் மற்றுமொரு பகுதியில் கசாய விநியோகத்தில் இருந்த தன்னார்வலர்களோடு பேசி அந்தப் பகுதியில் இன்னும் விநியோகம் நடந்து கொண்டிருப்பத்தை அறிந்து அந்த மூதாட்டிகளிடம் கூறினோம். அதை அறிந்துகொண்ட அந்த மூதாட்டிகள் அங்கு விரைந்து சென்று அவர்களுடைய தினசரி பங்கை வாங்கி அருந்தினர். மக்கள் இந்த கசாயத்தின் பலன்களை அறிந்து கொண்டத்தை பார்க்கும்போது மிக நெகிழ்ச்சியாக உள்ளது.

கிராமங்களில் வாழும் பல வயதான முதியவர்களுக்கு வருமானம் ஏதுமில்லை. அவர்கள் தற்போது தங்களின் தினசரி உணவுக்கு ஈஷாவையே நம்பியுள்ளனர்.