தீமையிலும் ஓர் நன்மை

ஒவ்வொரு காலையும் முள்ளாங்காடு கிராமத்தில் நவீனின் குரல் ஒரு அலார மணியோசை போல தெளிவாக ஒலிக்கும். ஈஷா தன்னார்வலர்கள் அந்த கிராமத்தை அடைந்தவுடன் இந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அவர்களின் வருகையை மற்ற கிராமத்தினருக்கு உரத்த குரலில் தெரிவிக்க ஆரம்பித்துவிடுவார். இப்போது கிராம மக்கள் நவீனின் இந்த உற்சாகத்தை சார்ந்து இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

துல்லியமான கடிகாரத்தைப் போல நவீன் ஒவ்வொரு நாளும், "சுவையான உணவு வந்துவிட்டது, வந்து வாங்கிக்கொள்ளுங்கள்... வந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்று அழைப்பு விடுப்பார். முன்பு தன் மருத்துவத்துக்கு உதவி செய்த தன்னார்வலர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் விதமாக நவீன் தானே விருப்பப்பட்டு இந்தப் பணியை செய்து வருகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முள்ளாங்காடு கிராம மக்களை மட்டுமல்ல, அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் மற்றவரையும், இந்த சுவையான உணவு ஈர்த்துவிட்டது. தென்னமநல்லூர் பஞ்சாயத்தில் பணியில் இருக்கும் ஒருவர், "ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் ஒரு நன்மை, தினமும் பரிமாறப்படும் இந்த சுவையான உணவுதான்" என்று புன்னகையோடு கூறினார்.

அதேபோன்ற பாராட்டுக்கள் TT பாளையத்திலும் எதிரொலித்தது. அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் தங்கி இருந்த 22 பேருக்கு தினமும் தங்களுக்கு தேவையான உணவை தயாரிப்பது பெரும் போராட்டமாய் இருந்தது. அவர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் தினமும் வழங்கிய சுவையான உணவு ஒரு பெரும் நிம்மதியை அளித்தது.

blog_alternate_img

வாழை இலைகளை வாரி வழங்கியவர்

உள்ளூரைச் சேர்ந்த தியாகராஜன் அவர்கள் நரசீபுரத்தில் உள்ள தன் 10 ஏக்கர் பண்ணையிலிருந்து வாழை இலைகளை பெற்றுக்கொள்ளுமாறு தன்னார்வலர்களிடம் கூறினார். "உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு வாழை இலைகளையும் தயவு செய்து பண்ணையில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று தியாகராஜன் கூறினார். தினமும் உணவு பொட்டலங்களை கட்ட இந்த இலைகள் உபயோகிக்கப்படுகின்றன.

blog_alternate_img

குணம் கொடுக்கும் கை

நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு வயதான மூதாட்டி, தன் மருந்துகள் தீர்ந்ததும் உதவிக்கு ஈஷா தன்னார்வலர்களை அணுகினார். இந்த ஊரடங்கால் எந்தவித மருத்துவ உதவியும் பெற முடியாத 80 வயதுடைய சின்னாள் என்ற மூதாட்டி, ஈஷா தன்னார்வலர்களின் உதவியை நாடினார். அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்த தன்னார்வலர்கள், அவரை கோவை ஈஷா ஆசிரமத்துக்கு அருகே உள்ள ஈஷா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தகுந்த சிகிச்சையும் மருந்துகளும் வழங்கப்பட்டன. தகுந்த நேரத்தில் தனக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லிய சின்னாள் தன் உடல்நலன் தேறி வருவதாகவும் கூறினார்.

உலகமே நாளையை எண்ணி பதட்டத்துடன் உள்ள சூழலில் கரும்புக்காட்டுப்பதி & பட்டியார்கோயில்பதி பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் மனநிறைவோடும் ஆனந்தத்தோடும் வாழ்கின்றனர். அவர்களின் பெற்றோர்களுக்கோ பட்டினியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது என்பதே பெரும் சவாலான ஒன்று.