கருணை கற்றுத்தந்த பாடம்

நரசீபுரம் கிராமத்தில், கருணையும் பரிவும் கற்றுத்தந்த ஒரு தனித்துவமான அத்தியாயத்திற்கு கிராம சமூகமும், தன்னார்வலர்களும் சாட்சிகளாக உள்ளனர். ஒரு மதியப்பொழுதில், கிராமத்தினரிடையே எல்லா உணவுப் பொட்டலங்களும் விநியோகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், கிராமத்தின் மூதாட்டி, 80 வயது, குயிலாத்தாள் அவர்களினால் உணவுப் பொட்டலத்தை சேகரித்துக்கொள்ள இயலாமல் போய்விட்டது.

அந்த மூதாட்டியின் சங்கடத்தை தன்னார்வலர்கள் கிராமத்தினருக்குத் தெரிவித்தபோது, நரசீபுரத்தின் மற்றொரு முதியவர் செய்த செயல் அனைவருக்கும் உதாரணமாகத் திகழ்ந்தது. ஒரு கணமும் தயங்காமல், இராமசாமி என்ற 65-வயது முதியவர், சட்டென முன்வந்து தனது உணவுப் பொட்டலத்தை, 'பாட்டி' என்று மற்றவர்களால் எப்போதும் அழைக்கப்படும் குயிலாத்தாளுக்கு வழங்கினார். இராமசாமியின் அருகில் இருந்தவர்கள் தங்களது உணவுப் பொட்டலத்தை அவருக்குப் பகிர்ந்தளித்த அதே நேரத்தில், அந்தப் ‘பாட்டி’ திருப்தியாக உணவு உட்கொள்கிறாரா என்பதிலும் அவர்கள் அனைவரும் கவனம் செலுத்தினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அடுத்த நாள் ஈஷா தன்னார்வலர்கள் உணவுப் பொட்டலம் விநியோகம் செய்யும்போது, நரசீபுரத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான பொட்டலங்கள் அளிக்கப்பட்டன. குயிலாத்தாள் மற்றும் இராமசாமி உட்பட அனைத்து கிராமத்தினருக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்க ஈஷா தன்னார்வலர்கள் தனிக்கவனம் செலுத்தினர்.

blog_alternate_img

ருசியான தக்காளி ஊறுகாய் நன்கொடை

கிராம மக்களால் தாராள மனதுடன் வழங்கப்பட்ட நன்கொடையின் மூலம், ஈஷா தன்னார்வலர்களால் வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களில் இப்போது நாவினிக்கும் தக்காளி ஊறுகாயும் அணி சேர்கிறது. உணவும், உதவியும் கொண்டு சேர்ப்பதில் எல்லா இடர்களையும் கடந்து முன்னேறும் தன்னார்வலர்களுக்கு, தோள் கொடுக்கும் விதமாக, கிராம மக்களும் வைரஸை வெல்வோம் யுத்தத்திற்கு, தங்களுக்கே உரிய விதத்தில் நன்கொடைகள் வழங்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில், சில விவசாயிகள் பெருமளவில் தக்காளிகளை நன்கொடையாக வழங்கினர். 300 கிலோ தக்காளிகளும் தன்னார்வலர்களால் ஊறுகாயாக உருமாற்றம் அடைந்தது. உணவுக்கு பக்கத்துணையாக கிராமத்தினர் வழங்கிய தக்காளியால் செய்யப்பட்ட ஊறுகாய் நாவினிக்க வைப்பதற்கு நன்றி.

நாவூறும் தக்காளி ஊறுகாய் கிராமத்தினருக்கு விநியோகம் செய்யப்படத் தயாரான நிலையில், அதற்குள் மற்றொரு கொடையுள்ளம் கொண்ட குழுவினரால் தக்காளி நன்கொடையானது தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. ஒரு தன்னார்வ அமைப்பாக, கிராமத்தினருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவரும், ஆலாந்துறை கிராமத்தின் அஜித் ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்கள் 100 கிலோ தக்காளியை நன்கொடையாக வழங்கினர். மன்றத்தின் செயலாளர் வினோத்குமார் கூறியபோது: “ஈஷாவுக்கு நன்கொடையாக வழங்கப்படுவது எதுவாக இருந்தாலும், இறுதியில் அது சென்று சேரவேண்டிய இடத்தை அடைந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் தக்காளிகளை நன்கொடையளிக்க நாங்கள் முடிவு செய்தோம்.”

blog_alternate_img

 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம்பெயர் தொழிலாளிகளாக இருப்பவர்கள், வேலை இழந்து, தங்கள் குடும்பத்தினரின் பசியாற்றும் வழி தெரியாமல், ஆதரவின்றி தவிக்கின்றனர். இந்த பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு உதவி செய்ய நாம் கரம் கோர்ப்போம்.