ஆரோக்கியம் புதியதோர் கோணத்தில்! - Isha Life Integrated Health Solutions
 
 

கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைக்கவேண்டிய அடிப்படை வசதிகள். இதில் வணிக நோக்கம் நுழைந்துவிட்டால், அதன் தன்மை, அதன் நேர்மை குலைந்துவிடும். கல்வி வியாபாரமானால் அது பணம் வசூலிக்கும் எந்திரமாகும். மருத்துவம் வியாபாரம் ஆகி, நோயாளி வாடிக்கையாளர் ஆனால், பிறகு வாடிக்கையாளரைத் தக்கவைத்துக் கொள்வதைப் பற்றிய எண்ணமே மேலோங்கும்.

முதன்முறையாக, அலோபதி, அயூர்வேதா, சித்தா, யோகா என நான்கு முறைகளையும் கொண்டு, ஒரு மனிதருக்கு எம்மாதிரியான மருத்துவம் தேவை என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல யோகாவினை ஒரு மருத்துவமுறையாக இங்கு கையாளவிருக்கிறோம்.

நோய் தீர்க்க ஒரு மருத்துவமனைக்குச் சென்றால் ஒரு நாள் முழுவதும் அங்கு செலவிடும் சூழ்நிலை இருக்கிறது. மருத்துவரைப் பார்க்க 1.5 மணிநேரம் காத்திருப்பு, ஐந்தே நிமிடத்தில் பரிசோதனை என்பதே இன்றைய இயல்புநிலை. பல டெஸ்ட்டுகளுக்குப் பிறகு, கைநிறைய மருந்து, மாத்திரைகளுடன் வீடு திரும்புகிறோம்.

இதனை கவனித்துப் பார்க்கும்போது சில கேள்விகள் எழுகின்றன...

 • முதலில் நம்முடைய நிலைக்கு மாத்திரை மருந்துகள் தேவையா?
 • நம் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறையை மாற்றினால் இந்தப் பிரச்சனைகள் மறையுமா?
 • இவை போதாத பட்சத்தில், ஒருசில யோகப் பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் சரி செய்துவிடலாமா?
 • இவற்றுடன் சில மருந்துகளும் கட்டாயம் தேவையா?
 • அப்படி தேவைப்பட்டால், அது அலோபதியா? ஆயூர்வேதமா? சித்த மருத்துவமா?
 • இதுபற்றித் தெரிந்தவர்கள் ஒன்றிணைந்து "நோயாளிகளின் ஆரோக்கியமே முக்கியம்" என்ற எண்ணத்தில் செயல்படத் தயாராக இருக்கிறார்களா?

இத்தனை கேள்விகளுக்கும் பதிலாய், இந்த புரட்சிகரமான எண்ணத்தின் விளைவாய் சென்னையில் உருவாகியிருக்கிறது, ஈஷா லைஃப் இன்டெக்ரேட்டட் ஹெல்த் சல்யூஷன்ஸ்.

முதன்முறையாக, அலோபதி, அயூர்வேதா, சித்தா, யோகா என நான்கு முறைகளையும் கொண்டு, ஒரு மனிதருக்கு எம்மாதிரியான மருத்துவம் தேவை என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல யோகாவினை ஒரு மருத்துவமுறையாக இங்கு கையாளவிருக்கிறோம். பிரச்சனை என்று வருபவருக்கு மாத்திரை மருந்து கட்டாயம் தரவேண்டும் என்கிற கருத்து இங்கில்லை. அந்த நோயாளிக்கு மருந்துகள் இன்றி, உணவு, வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமும் யோகாவின் உதவியுடனும் தீர்வு தரமுடியுமா என்று தீவிரமாக கணிக்கப்படுகிறது. இயற்கைவழியில் குணமாக்க வழியிருந்தால், அதற்கு இங்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

சென்ற வருடம் "இன்சைட் - தி டி.என்.ஏ ஆஃப் சக்சஸ்" வகுப்பில் சத்குரு அவர்களுடன் உரையாடிய திரு. ரத்தன் டாடா அவர்கள், இதுபோன்ற ஒரு முயற்சிக்கு தான் கைகொடுக்க நினைப்பதாகவும், இதை ஈஷா செயல்படுத்துவதாக இருந்தால் "ஜாம்செட்ஜி டாடா ட்ரஸ்ட்" மூலம் அதற்கு பண உதவி செய்வதாகவும் சொன்னார். "ஈஷா ஆரோக்யா ரிசர்ச் ஃபவுண்டேஷனிற்கு" அவர் அளித்த நன்கொடையின் உதவியுடன் சென்னை மவுன்ட் ரோடில் "ஈஷா ஆரோக்கியா இன்டகிரேடட் ஹெல்த் சொல்யூஷன்ஸ்" அமைக்கப்பட்டிருக்கிறது. அலோபதி மருத்துவ ஆலோசனையை "அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்" வழங்கவிருக்கிறது.

இது ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் என்பதால், இதில் வரும் வருமானம் இதுபோல் வேறு இடங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

ஏதற்காக இந்த ஏற்பாடு?

ஒரு மருத்துவ முறையின் குறை மற்றொன்றின் நிறையாகவும், மற்றொன்றின் நிறை இன்னொன்றின் குறையாகவும் இருப்பதைப் பார்க்கலாம். இவையிரண்டையும் தேவைக்கேற்ப கையாண்டால், அவை வழங்கும் முழுமையான பலன்களை நாம் பெற முடியும். இந்த அடிப்படையில்தான் "ஈஷா லைஃப் இன்டெக்ரேட்டட் ஹெல்த் சல்யூஷ்ன்ஸ்" துவங்கப்பட்டுள்ளது.

சத்குருவின் வார்த்தையில் சொல்வதானால், "கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு, வியாதிகளுக்கு அலோபதி சிறந்த மருத்துவமுறை. அதில் சந்தேகமேயில்லை. அதே நேரத்தில், மனிதனுக்கு உண்டாகும் வியாதிகளில் 70% அவர்களாகவே உருவாக்கிக் கொள்வது. அவர்கள் உடலையும் மனதையும் சரியான முறையில் கையாளாத காரணத்தால் பெரும்பாலான வியாதிகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அலோபதி சரியான மருத்துவமுறை அல்ல. இந்த வியாதிகளை அலோபதியால் சமாளிக்க முடியுமே தவிர, முழுமையாய் அகற்றமுடியாது."

மருத்துவமுறைகளின் பலம், பலவீனம்

அலோபதி

நிறை:

 • அறிகுறி மற்றும் ஆய்வுசார்ந்த மருத்துவம் (இரத்தப் பரிசோதனை போன்று)
 • உடனடித் தீர்வுகள் கிடைக்கும் (அறுவை சிகிச்சை உட்பட)

குறை:

 • நாட்பட்ட நோய்களுக்கு முறையான தீர்வில்லை
 • அறிகுறிக்கான மருத்துவப் பரிந்துரை, தனிப்பட்ட மனிதரின் உடலமைப்பை கருத்தில் கொள்வதில்லை
 • வாழ்க்கைமுறை மாற்றி அமைத்துக் கொள்வதால் உண்டாகும் நலன்களை பரிந்துரைப்பதில்லை

பாரம்பரிய மருத்துவ முறைகள்

நிறை:

 • நாட்பட்ட நோய்களுக்கு தீர்வு
 • ஒவ்வொருவரின் உடலமைப்பிற்கும் ஏற்ற வைத்தியம் (வாதம், பித்தம், கபம் சார்ந்து)
 • வாழ்க்கைமுறை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைப் பரிந்துரை செய்கிறது

குறை:

 • அறிகுறி, ஆய்வு கருத்தில் கொள்ளப்பட மாட்டாது
 • உடனடித் தீர்வுகள் இருக்காது. ஏனெனில், உடலமைப்பு சார்ந்த மருத்துவம் வேலைசெய்ய சில காலம் எடுக்கும்

இதை கவனித்தால், ஒரு மருத்துவ முறையின் குறை மற்றொன்றின் நிறையாகவும், மற்றொன்றின் நிறை இன்னொன்றின் குறையாகவும் இருப்பதைப் பார்க்கலாம். இவையிரண்டையும் தேவைக்கேற்ப கையாண்டால், அவை வழங்கும் முழுமையான பலன்களை நாம் பெற முடியும். இந்த அடிப்படையில்தான் "ஈஷா லைஃப் இன்டெக்ரேட்டட் ஹெல்த் சல்யூஷ்ன்ஸ்" துவங்கப்பட்டுள்ளது.

ஈஷா லைஃப் ஹெல்த் சல்யூஷன்ஸில் என்ன கிடைக்கும்?

 • மன-அழுத்தமின்றி குணமடையும் சூழ்நிலை
 • ஆரோக்கியமான வாழ்வை வழங்கும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை பரிந்துரை
 • கைதேர்ந்த, MD/MRCP பட்டம் பெற்ற அலோபதி மருத்துவர்கள். MD பட்டம் பெற்ற ஆயூர்வேத, சித்த மருத்துவர்களின் கலந்தாய்வுப் பரிசோதனை
 • உடல் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக சிறப்பு யோகப் பயிற்சிகள் மற்றும் பாரம்பரிய ஹடயோகா பயின்ற ஆசிரியர்கள் வழங்கும் யோக வகுப்புகள்.
 • சத்குரு சந்நிதியுடன் கூடிய தியான அறை மற்றும் "யோகசாலை"
 • பஞ்சகர்மா மசாஜ் தெரபி
 • நோயாளிகளுக்கான ஆலோசகரின் 24 மணிநேர உதவி
 • வீட்டிற்கு வந்து இரத்தப் பரிசோதனைக்கான சாம்பிள் பெறும் வசதி
 • அலோபதி, ஆயூர்வேதா, சித்தா மருந்தகங்கள் *இலவச ஹோம் டெலிவரி
 • உணவில் மாற்றம் கொண்டுவரத் தேவையான ஆர்கேனிக் ஹெல்த் ஸ்டோர்
 • சிறுதானிய சமையல் கொண்ட உணவகம்
 • ஆரோக்கியமும் சுவையும் ஒருங்கே கொண்ட - மஹாமுத்ரா உணவகம்

பிரம்மாண்ட திறப்பு விழா

சத்குருவின் பிறந்தநாளான செப்டம்பர் 3ம் தேதி, மாலை 6 மணிக்கு, சத்குரு சந்நிதிப் பிரதிஷ்டையுடன் இம்மையம் சென்னையில் கோலாகலமாகத் திறக்கப்பட்டது. இதில் மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முகவரி:

ஈஷா லைஃப் ஹெல்த் சல்யூஷன்ஸ்,
#2, க்ளப் ஹவுஸ் ரோடு, சென்னை - 600002
(தாஜ் க்ளப் ஹவுஸ் எதிரில், ஸ்பென்சர் ப்ளாசா அருகில்)

அபாயின்மெண்ட் பெறுவது எப்படி?

முன்பதிவுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளுங்கள்
போன்: +91 44-71645333 | வாட்ஸ்அப்: +91 83000 45333

ஈஷா தியான அன்பர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது பரிந்துரையில் வருபவர்களுக்கு அக்டோபர் 15ம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1