அந்தி சாயும் கடற்கரை. தென்றல் ரம்யமாக நெற்றி முடியைச் சிலுப்பி விட்டுக் கொண்டிருந்தது. வில்வன் இதையெல்லாம் ரசிக்காமல் சுயபச்சாதாபத்தில் மூழ்கி இருந்தான். இலக்கற்று கண்கள் கடல் அலைகளை வெறித்துக் கொண்டிருந்தன.

மதியம் தரகரிடம் அம்மா தயங்கித் தயங்கி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தது இப்போதும் அவன் காதினில் ஒலித்தது. “நீங்க இன்னொரு முறை பெண் வீட்ல பேசிப் பாருங்களேன் ஐயா! வில்வனுக்கு இந்தப் பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. தெரிஞ்சா கஷ்டப்படுவான்.”

தரகர் தர்ம சங்கடத்துடன், “உண்மைதான், ஆனா பெண்ணோட அப்பா, ‘வில்வன் ரொம்ப குண்டா இருக்கார். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், பக்கவாதம் போல நோய்கள் வர்றது மட்டுமில்லாம, குழந்தைகளுமே குண்டா பிறக்க வாய்ப்பிருக்கு, வேண்டாம்‘னு சொல்றார். விடுங்கம்மா, வேற பொண்ணா கெடைக்காது? நம்ம வில்வன் ஜிம்முக்குப் போய் டயட் கடைபிடிச்சான்னா ஈஸியா எடை குறைஞ்சிடுவான். சீக்கிரம் நல்ல செய்தியோட வரேன்!” என்றவாறே கிளம்பினார் தரகர்.

vembu

யார்தான் அவனை உடற்பயிற்சி செய்யச் சொல்லவில்லை?! சிறுவயதில் ‘மொழுக் மொழுக் பாப்பா’ எனச் சொல்லி பாட்டி வைத்த திருஷ்டி மை மட்டும்தான் கரைந்தது. ‘மொழுக் மொழுக்’ மட்டும் கரையவே இல்லை.

குழந்தைப் பருவத்தில் குளிர்பானங்கள், ஜங்க் ஃபுட் மற்றும் துரித உணவுகள் (empty calories junk and fast foods)  அவனை ஊட்டி வளர்த்தன. 15 வயதிலேயே 90 கிலோ இருந்ததால், பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்தனர். உடல் சோர்வு, அசதி, ஓடியாடி விளையாட முடியாத தன்மை அவனைக் குறுக்கியது.

புத்தகங்களைப் படிப்பதற்கு உடலுழைப்பு தேவையில்லை என்பதால் படித்து மதிப்பெண் பெற்று, நல்ல வேலையில் சேர்ந்துவிட்டான். நல்ல சம்பளமும் கூட. ஆனால், திருமணத்திற்குப் பெண் மட்டும் அமையவில்லை.

அவனும் எடை குறைய படாதபாடு பட்டுக் கொண்டுதான் இருக்கிறான். கொகுப்பு உறிதல் (Diego suction) மற்றும் அதிரடி உணவுமுறை போன்றவற்றை மட்டுமல்லாமல், முழுப் பட்டினி விரதமெல்லாம் செய்துவிட்டான். குறைவதுபோல் குறையும், எடை மீண்டும் வந்து அவனை அணைத்துக் கொள்கிறது.

வெகுநாளாய் யோசித்துக் கொண்டிருந்த வில்வன், ஈஷா லைஃப் எடைக் குறைப்பு நிகழ்ச்சியில் சேர்ந்துதான் பார்க்கலாம் என்று மணலைத் தட்டியவாறு கிளம்பினான். அட! என்ன ஆச்சரியம்! வில்வனின் எடை சீராகக் குறைந்தது; அது மட்டுமில்லை; மீண்டும் கூடவில்லை! இது எப்படிச் சாத்தியமாயிற்று?!

gym

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடல் செயல்பாடுகள் பற்றி சில அடிப்படை உண்மைகள்:

நாம் சாப்பிடும் உணவு நல்ல பிராண சக்தி உள்ள உணவாயிருந்தால், வயிறு அதை நன்றாகச் செரித்து, சத்தை உள்வாங்கிக் கொள்கிறது. தாது (Datu) என ஆயுர்வேதா/ சித்தாவில் சொல்லப்படும் சதையாக மாறுகிறது. கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. நம் உடல் செல்களில் (cellular respiration)  சுவாசம் நன்றாக நடக்கிறது. அதனால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பசி வேறு, ஜீரணம் வேறு. சிலபேருக்கு நன்றாகப் பசிக்கும். ஆனால், ஜீரணிக்கும் தன்மையோ, சத்துக்களை உள்வாங்கும் தன்மையோ குறைவாக இருக்கும்.

சித்தா, ஆயுர்வேதத்தில் நாம் சாப்பிடும் உணவு, 7 வித தாதுவாக உருமாறுகிறது என்று சொல்கிறார்கள். அவற்றை சாரம் (lymph), இரத்தம் (blood), ஊன் (muscle), கொழுப்பு (fat),எலும்பு (bone), மஜ்ஜை (bone marrow), சுக்கிலம் (ஆண்களின் semen) அல்லது ஸ்ரோனிதம் (ovum - பெண்களில்) என்று சொல்லலாம்.

நுரையீரலால் மூச்சு விடுகிறோமோ இல்லையோ, நம் உடலில் ஒவ்வொரு செல்லும் நன்றாக மூச்சு விடுவது மிக முக்கியம்.

இந்த ஜீரணத்தன்மை குறைந்தாலோ, சத்து நன்றாக உறியப்படவில்லை என்றால், பிராணசக்தி இல்லாத உணவு உண்டால், உடற்கழிவுகள் நன்றாக வெளியேறவில்லை என்றால், இந்த 7 தாதுக்களின் சமநிலை குறைகிறது. ஊளைச் சதை, அதிக கொழுப்பு அல்லது இரத்த சோகை போன்றவை உண்டாகிறது. உடல் பருமனும் சிலருக்கு வரலாம்.

‘அடேங்கப்பா! இவ்ளோ விஷயம் இதுல இருக்கா. ஆமா! உங்களுக்கு ஜீரணம் நல்லா இருக்கான்னு எப்படித் தெரிஞ்சுக்குறது?’

சரியான கேள்வி. ஒரு கண்ணாடிய எடுத்துக்கோங்க. உங்க நாக்கை நீட்டி கண்ணாடில பாருங்க. வெள்ளையா, மாவு பூசுனாப்ல இருந்தா, ஜீரணக் குறைவு இருக்குனு அர்த்தம். சத்துக்களை உள்வாங்குற தன்மை கம்மினு எடுத்துக்கலாம்.

உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகள்:

 • அன்றாட வாழ்க்கையில் ஓடியாட முடியாமல், உடல் சோர்ந்து போய் விடக் கூடும். சோம்பலாக இருக்கும்.
 • சின்ன வயதிலேயே இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்கள் வரக் காரணமாகிவிடுகிறது.
 • முக்கியமாக ஆண், பெண் இரு பாலருக்குமே இல்லற வாழ்க்கையில் நாட்டம் குறையலாம். குழந்தையின்மைக்கும் உடல் பருமன் ஒரு காரணமாக அமையலாம்.

‘நம்ம ஈஷா லைஃப் உடல் எடைக் குறைப்பு முறை பத்திச் சொல்லுங்களேன்?’

 • இது ஒரு மாத கால நிகழ்ச்சி. சிலருக்கு நீண்ட நாட்களுக்குத் தேவைப்படலாம்.
 • உங்களை சித்த, ஆயுர்வேத பாரம்பரிய முறைப்படி பரிசோதித்து, முடிவுகளின் அடிப்படையில் உங்களது ஜீரண நிலை, சத்துக்களை உள்வாங்கும் தன்மை, உடற்கழிவு சரியாக வெளியேறும் தன்மை என பல நிலைகளில் உங்களைச் சரிசெய்யும் நிகழ்ச்சியாக இது அமையும்.
 • சிலருக்கு தைராய்டு பிரச்சனை, சர்க்கரை நோய், PCOD போன்றவற்றாலும் உடல் எடை அதிகமாக இருக்கலாம். இதுமாதிரி, அடிப்படைப் பிரச்சனைகளும் சரிசெய்யப்படுகிறது.
 • உடல் செல்களின் சுவாசத்தை சீராக்கவும், உடலின் நோய்க்கான அடிப்படைக் காரணங்களைச் சரிசெய்யவும் குறிப்பிட்ட சில யோகப் பயிற்சிகள் உள்ளன. அவற்றை இந்நிகழ்ச்சியில் கற்றுக் கொள்ளலாம்.
 • சரியான பயிற்சிகள் மூலமாக உடல் அடிப்படை சரிசெய்யப்படுவதால், எடை குறைவதோடு, கொழுப்பும், (fat loss) உடல் அளவும் (inch loss) குறைகிறது.
 • முதல் மாதத்தில், குறைந்தது 5 கிலோ குறையும்.
 • இங்கே பரிந்துரைக்கும் பிராணசக்தி உணவுகள் உங்கள் உடலையும், மனதையும் ஊட்டமாக்கும்.
 • ஆயுர்வேத தெரப்பிகள் (therapy) எடை குறைய ஊக்குவிக்கிறது.
 • சரியான சரிவிகிதப் பயிற்சிகள், உடல் எடையைக் குறைத்துக்கொண்டே செல்வதோடு, பழையபடி எடை கூடிவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

யாரெல்லாம் இந்தப் பயிற்சியில் சேரலாம்?

ஆரோக்கியமான விதத்தில் உடல் எடை குறைந்து, சிறப்பான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம்.