உலக சுகாதார தினம் என்பது நல்வாழ்வு, ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, இவை குறித்த உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய பிரச்சாரமாகும். இதனை சாத்தியமாக்க ஈஷா அறக்கட்டளை பல்வேறு நிகழ்ச்சிகளை உலக சுகாதார தினத்தன்றும் அதற்கு முன்னரும் ஏற்பாடு செய்துள்ளது.

சுகாதார விழிப்புணர்வு பேரணி மற்றும் தியான வகுப்புகள் மூலம் உலக சுகாதார தினத்தை, ஈஷா அறக்கட்டளை கொண்டாடவுள்ளது.

உலக சுகாதார அமைப்பானது, 2014ம் ஆண்டு கிருமி மூலம் தொற்றும் நோய்களில் கவனம் செலுத்தவுள்ளது. "சிறிய கடி, பெரிய கேடு" என்பதே அவர்களின் கோஷம். இதை மையமாக வைத்து ஈஷா அறக்கட்டளை குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விழிப்புணர்வு பேரணி:

ஏப்ரல் 7ம் தேதி மாலை 5 மணிக்கு கோவை ரேஸ் கோர்ஸில் கிருமி மூலம் தொற்றும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது. KMCH மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி அவர்கள் தலைமை ஏற்க, நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இலவச நில வேம்பு குடிநீர் கஷாய விநியோகம்:

நகரங்கள் மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரணியின் போது நிலவேம்பு குடிநீர் கஷாயம் விநியோகிக்கப்படும். 9 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த கஷாயம் ஒரு மூலிகை சித்த மருந்தாகும். கிருமி மூலம் தொற்றும் நோய்களை தடுக்கவும், குணப்படுத்தவும் இது பயன்படும். ஒரு மருத்துவர், நர்ஸ், அடிப்படை மருத்துவ பரிசோதனை கருவிகள், மருந்தகம் அடங்கிய ஈஷாவின் 14 நடமாடும் மருத்துவமனைகள், தாங்கள் செல்லும் தொலைதூர கிராமங்களில் இந்த நோய்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இந்த தொலைதூர கிராம மக்கள் இவ்விதமான நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். குறைந்த செலவில், உயர் ரக மருத்தவ வசதி வழங்கும் ஈஷாவின் கிராமப்புற மருத்துவமனைகள் இந்த நோய்கள் பற்றிய கையேடுகள் மற்றும் நிலவேம்பு குடிநீர் கஷாயம் இவற்றை இலவசமாக வழங்கும்.

ஈஷா கிரியா தியான வகுப்புகள்:

ஏப்ரல் 6ம் தேதியான இன்று, கோவையில் நான்கு இடங்களில் இலவசமாக ஈஷா கிரியா கற்றுத்தர ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் வகுப்பில் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்பவர்களுக்கு இலவசமாக ஈஷா கிரியா டி.வி.டி வழங்கப்படும்.


வகுப்பு நடைபெறும் இடங்கள்:

  • KMCH தியான மண்டபம், சிவில் ஏரோ ட்ரோம் போஸ்ட், பீளமேடு
  • ஈஷா யோகா மையம், அனையங்காடு தெரு, கூட்டுறவு சங்கம் எதிர்புறம், சிங்காநல்லூர் (94878 95043)
  • ஈஷா யோகா மையம், எண் 20, 9 தெரு, டாடாபாத் (89035 02000)
  • அருணா திருமண மண்டபம், கட் ரோடு, P & T quarters பஸ் நிறுத்தம், NSR ரோடு, சாய்பாபாகாலனி (94443 46459)

யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் சத்குருவால் உருவாக்கப்பட்ட ஈஷா கிரியா ஒரு எளிமையான, சக்தி வாய்ந்த தியானமாகும். ஈஷா கிரியாவின் நோக்கம் ஒரு மனிதன் தன் உயிரின் ஆதாரத்தோடு தொடர்பு கொள்வதும், வாழ்க்கையை தன் விருப்பத்தின்படி அமைத்துக் கொள்வதுமாகும். ஒரு மனிதனை மன அழுத்தமற்ற வாழ்வுக்கும், மேம்பட்ட தெளிவுக்கும், உயர் சக்தி நிலைக்கும் ஈஷா கிரியா எடுத்து செல்கிறது. தினமும் பயிற்சி செய்வது ஆரோக்கியம், அமைதி, நல்வாழ்வு இவற்றை அளிக்கிறது. வாழ்க்கையின் தடைகள் கடந்து, வாழ்வை அதன் முழு ஆற்றலை அனுபவிக்க உதவுகிறது. இதுபோன்ற முயற்சிகளால் ஈஷா கிரியா மற்றும் ஈஷாவின் ஆரோக்யா வகுப்புகள் மாநிலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்திருக்கிறது.