"தானத்தில் சிறந்தது அன்னதானம்" என்ற கூற்றை அனைவரும் கேட்டிருப்போம். குறிப்பாக ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. இங்கே அன்னதானம் பற்றி சத்குருவின் பார்வையில்...

"நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும்போது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் பசியில் இருப்பவருக்கு வழங்கினால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதைக் காட்டிலும் அதிகமாகும்" என்று புத்தர் தன் சீடர்களுக்கு கூறினார். உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். நாம் பிறருக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும்போது கிடைக்கக் கூடிய அற்புத உணர்வினை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதிலும் உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது. நாம் பிறருக்கு வழங்கும் உணவு, அவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை அவருக்கு வழங்குகிறது. அன்னதானம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதத் தன்மையாகும். இது நம் கலாச்சாரத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையாகப் பார்க்கப்படுகிறது.

அன்னதானம் குறித்து சத்குரு பேசுகையில்...

"நாம் பெற்றுள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த வளமைக்கு, ஆன்மீகப் பாதையில் நடந்து வந்த எண்ணற்ற முனிவர்கள், ரிஷிகள், ஞானிகள் மற்றும் குருமார்களுக்கு மட்டும் நன்றியை வெளிப்படுத்தினால் போதாது. அவர்களையெல்லாம் பேணி வளர்த்த ஒட்டுமொத்த நம் சமுதாயத்திற்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்."

நீங்களும் பங்குகொள்ளலாம்

ஈஷா யோகா மையம், தனிமனித நல்வாழ்விற்காக செயல்படக்கூடிய, ஒரு லாப நோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். கிராமப்புறங்களில் ஆரோக்கியம் (கிராமப் புத்துணர்வு இயக்கம்), கல்வி (ஈஷா வித்யா பள்ளி மற்றும் அரசு பள்ளி தத்தெடுப்பு திட்டம்) மற்றும் சுற்றுப்புறச் சூழல் (பசுமைக் கரங்கள் திட்டம்) ஆகியவை ஈஷா ஆசிரமவாசிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

ஈஷாவில் அன்னதானத் திட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், மையத்திலுள்ள ஆசிரமவாசிகள், ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலத் திட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவது சாத்தியமாகிறது. ஈஷா யோகா மையத்தில் சந்நியாசிகள், பிரம்மச்சாரிகள், ஆசிரமவாசிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் என 1000 பேருக்கும் அதிகமானோருக்கு, தினமும் இரு வேளைகள் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்தப் புனிதக் கலாச்சாரம் தொடர்ந்து நடைபெறும் பணியில் நீங்களும் பங்குகொள்ளலாம். உங்கள் பிறந்தநாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள், உங்களுக்குப் பிரியமானவர்களின் நினைவு நாட்களில் நீங்கள் அன்னதானம் வழங்கலாம்.

நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் மதிப்புமிக்கது!

தொடர்புக்கு:
தொ.பே: 094425 04672 / 0422 2515378
மின்னஞ்சல்: annadanam@ishafoundation.org

மேலும் தகவல் அறிய