அம்மான்பச்சரிசி கூட்டு
அம்மான்பச்சரிசி​ ​கூட்டு​ - கீரைகள் பல வகை, அதில் ஒன்றுதான் அம்மான்பச்சரிசிக் கீரை. இதை வைத்து கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்...​
 
அம்மான்பச்சரிசி கூட்டு, Ammanpacharisi koottu
 

ஈஷா ருசி

அம்மான்பச்சரிசி​ ​கூட்டு​ - கீரைகள் பல வகை, அதில் ஒன்றுதான் அம்மான்பச்சரிசிக் கீரை. இதை வைத்து கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்...​

தேவையான பொருட்கள்:

அம்மான்பச்சரிசி கீரை - 1 கப்
பாசிப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு, உளுந்து, சீரகம் - தாளிக்க

செய்முறை:

 • இந்த கீரையை குச்சி இல்லாமல் பறித்து அலசி வைத்துக்கொள்ள வேண்டும்.
 • பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பாசிப்பருப்பை போட்டு சிறிது நேரம் வெந்தவுடன் கீரையை சேர்த்து வேகவிடவேண்டும்.
 • அதில் உப்பு மஞ்சள்தூள் சேர்க்க வேண்டும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி வேகும் கீரையில் சேர்த்து கிளற வேண்டும்.
 • நன்கு வெந்தவுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

பயன்கள்:

 • பொதுவான வயிறு உபாதைகள் தீரும்.
 • இது மூலிகை மருந்துகளில் வெள்ளி பஸ்பம்.
 • தாதுக்கள் பெருகும், முகப்பருக்கள் மறையும்.
 • இதன் பாலைத் தொடர்ந்து தடவ மருக்கள் மறையும். இலையை அரைத்து மோருடன் கலந்து குடிக்க நாவறட்சி தீரும்.
 • தொண்டைப்புண் வயிற்றுப்புண் ஆறும். இருமல், ஆஸ்துமா குறையும். தாய்பால் பெருகும்.
 • பெண்களுக்கு உதிரப் போக்கு, கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல் சரியாகும்.
 • மாத்திரையாய் சாப்பிட உஷ்ணம் குறையும்.
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1