ஆதியோகியால் முதல் முதலில் பரிமாறப்பட்ட யோக விஞ்ஞானம் பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்றும் இந்த மண்ணில் உயிருடன் இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காடுகளிலும் மலைக்குகைகளிலும் ஒரு சில யோகிகளால் மட்டுமே வழி வழியாய் பரிமாறப்பட்டு வந்த இந்த ஞானம் இப்போது சர்வதேச அரங்கில்!

“நம் நாட்டில் தோன்றியவை அனைத்தும் மூடநம்பிக்கை, மேற்கில் தோன்றுவது மட்டுமே விஞ்ஞானம்,” என்ற வாதம் மெல்ல மறைந்து வருகிறது.

ஜுன் 21ம் தேதி, உலக யோகா தினத்தன்று யோகா எனும் அற்புத ஞானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சத்குரு அவர்கள் வழங்கவிருக்கிறார். உலக யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்துகிறார்.

இந்த கலாச்சாரத்தின் ஒவ்வொரு நம்பிக்கைக்குப் பின் இருக்கும் அறிவியல் உண்மையை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் அனுபவப்பூர்வமாக தனக்குள் உணரச் செய்து கடந்த 25 ஆண்டுகளாக மாபெரும் ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது ஈஷா யோகா மையம்.

இதோ, சர்வதேச அரங்கில் ஒரு இந்தியனின் குரல்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் விதமாய் சத்குரு அவர்களின் கம்பீரக் குரல் உலகெங்கும் ஒலிக்கவிருக்கிறது. ஜுன் 21ம் தேதி, உலக யோகா தினத்தன்று யோகா எனும் அற்புத ஞானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சத்குரு அவர்கள் வழங்கவிருக்கிறார். உலக யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்துகிறார். நியூயார்க் நகரில் நிகழவிருக்கும் இந்நிகழ்வு உலக வரலாற்றில் முக்கியமான ஒரு நாள்.

உலகம் முழுவதும் ஆன்மீகத் தேடல் கொண்ட மனிதர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் நாள்.

25 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஏழு பேரைக் கொண்டு துவங்கிய சத்குரு அவர்களின் யோக வகுப்புகள் இன்று உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களைத் தன்பால் ஈர்த்துள்ளது. எந்த விளம்பரமும் இல்லாமல் வாய்வழிச் சொல்லால் இன்று உலகெங்கிலும் பல கோடி பேருக்கு யோகப் பாதையை வழங்கியிருக்கிறது ஈஷா.

“உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது ருசித்திட வேண்டும்,” என்பதே சத்குரு அவர்களின் கனவு.

இதனால், இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக யோகப் பயிற்சியை ஜுன் மாதம் முழுவதும் ஈஷா வழங்கவிருக்கிறது.

இந்த பிரம்மாண்ட நிகழ்விற்குப்பின் யோகா ஒரு சிலர் வாழ்வில் மட்டுமே இல்லாமல், பல லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்களது வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அம்சமாக, கலாச்சாரமாக மாறிடும்.

ஈஷா யோகா தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பரவியுள்ளது. யோக விஞ்ஞானத்தை ஒரு உடற்பயிற்சியாக இல்லாமல் அதன் சாரம் மாறாமல் உயிருடன் அளித்திடும் ஈஷா யோகா உலகெங்கிலும் உள்ள யோகா ஆர்வலர்களை ஈர்த்து வருகிறது.

ஈஷாவில் ஏற்பாடு செய்திருந்த 8 நாள் ஹடயோகா வகுப்பிற்கு 39 நாடுகளைச் சேர்ந்த 2000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரோமேனியா, லெபனான், ஹிகிணி, லாட்வியா, இலங்கை, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பூட்டான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், ஹாங்காங், ஸ்வீடன், சவுதி அரேபியா, ரஷ்யா, பின்லாந்து, செக் குடியரசு, பெல்ஜியம், கனடா, பர்மா, போலந்து, பங்களாதேஷ், நைஜீரியா, பல்கேரியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, பஹ்ரைன், போட்ஸ்வானா, நேபாளம், ஆப்கானிஸ்தான் என உலகின் பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும், மத நம்பிக்கைகளை மேற்கொண்டு வரும் நாட்டின் பிரஜைகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, சீன, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழிகளில் உடனுக்குடன் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

தன்னை மென்மேலும் ஆக்கப்பூர்வமாக, தேசத்திற்காக தன்னை அர்ப்பணித்திட, ஒரு மாநில முதல்வர் ஒரு குருவின் முன் அமர்ந்து தியானத்திற்கான தீட்சை பெற்றது மிகுந்த பாராட்டுக்களுக்கு உரியது. ஆந்திர மாநில முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கேபினட் உறுப்பினர்கள், அதிகாரிகள், மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் சத்குரு அவர்களிடம் யோக வகுப்பு பயின்று, பயனடைந்துள்ளனர்.

ஆந்திராவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில முதல்வர் திருமதி. வசுந்தரா ராஜேவும், ராஜஸ்தான் மாநில மத்திய மற்றும் மாநில அமைச்சர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் சத்குருவின் இன்னர் இஞ்சினியரிங் நிகழ்ச்சியில் மே மாதம் துவக்கத்தில் பங்குகொண்டு பயன்பெற்றனர்.

ஏழைகள், கிராமத்துவாசிகள், விவசாயிகள், நடுத்தரவர்க்கத்தினர், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசாங்கத்தில் பணி செய்பவர்களிலிருந்து மாநில முதல்வர் வரை அனைத்து தர மக்களும் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகாவை பயிற்சி செய்து பயன்பெற்று வருகின்றனர்.

சத்குரு சொல்வதுபடி, “அந்த ஒரு சொட்டு” வெறும் ஒரு சொட்டாய் அல்லாமல், பிரவாகமாய் செல்வதைக் காண்பதில் பெருமை கொள்வோம்.