ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்!

ஒரே மாதத்தில் கலைநயம் மிக்கதொரு நாட்டிய நாடகத்தை உருவாக்குவதற்கு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களால் எப்படி சாத்தியமாயிற்று... இந்த கேள்விக்கு விடையாய் இந்த பதிவு அமைகிறது!
ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham
 

மஹாசிவராத்திரி நாளில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 112 அடி உயர ஆதியோகியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தங்களை முழுமூச்சில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். சத்குருவின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதிலுமுள்ள நகரங்கள், ஊர்கள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று, ஆதியோகியை முன்னிறுத்தும் நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகின்றனர். இதில் ஆறு நிகழ்ச்சிகள் ஏற்கனவே வெகுசிறப்பாக முடிந்துள்ள நிலையில், அவர்களின் இந்த இடைவிடாத பயணத்தில் இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் நிகழ்ந்தேறக் காத்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் அபிமானங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த அற்புதமான கலைநிகழ்ச்சி உருவாவதற்கு பின்னாலுள்ள நிகழ்வுகளையும் சுவாரஸ்யங்களையும் சம்ஸ்கிருதி மாணவர்கள் வாயிலாகவே கேட்டு அறியலாம் இங்கே!

ஒரு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர் சொல்லும்போது:

ஒருநாள் எங்களது நடன ஆசிரியர் எங்களை அழைத்து, சத்குரு எங்களை ஆதியோகி பற்றிய ஒரு நாட்டிய நாடகத்திற்கு நடன வடிவமைப்பு செய்யும்படி சொல்லியிருப்பதாக கூறினார். ஆதியோகி யார் என்பதை பறைசாற்றும் வகையிலும், அவர் வழங்கியருளியது எது என்பதனை எடுத்துக்காட்டும் வகையிலும் மக்களிடத்தில் விழிப்புணர்வு உண்டாக்கும் விதமாக, தமிழகமெங்கும் நாங்கள் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளோம். இதைக் கேட்டவுடன் எங்களில் ஒருவர் ஆர்வம்பொங்க கேட்டார், “நம்மிடம் கதையமைப்பு ஏதும் உள்ளதா?” எங்களது ஆசிரியர் புன்னகைத்தபடியே “இல்லை!” என்றார். திறமைக்கு சவாலான இந்த சூழலை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் ஒருவரையொருவர் முகத்தில் ஆச்சரியக்குறிகளுடன் பார்த்துக்கொண்டோம். கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் நிகழ்ச்சிகளின் அனைத்து அம்சங்களையும் நாங்களே சுயமாக கையாள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறோம்.

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham

கன்னியாகுமரியின் கதை

ஆதியோகியைப் பற்றி சத்குரு பேசியுள்ளதைக் அடிப்படையாகக்கொண்டு எங்கள் நாட்டிய மாணவர்களில் ஏழுபேர் ஒரு கதைக்கருவை உருவாக்கினர். அதோடு, நாட்டுப்புற கதைகளில் அவரைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதையும் கவனத்தில்கொண்டனர். இப்போதும் தமிழ்நாட்டு மக்கள் கன்னியாகுமரியின் கதையைக் கேட்டுத்தான் வளர்கிறார்கள். எனவே நாங்கள் அந்த கதையை பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்தோம். சிவன் தென்கயிலாமான வெள்ளியங்கிரி மலைக்கு வந்தமர்ந்ததை விளக்கும் வகையில் அமைந்த எங்களது முந்தைய படைப்பான சிவகாமி நாட்டிய நாடகத்துடன் இதனை இணைத்தோம். நாங்கள் புதிய இசையையும் நடன அமைப்பையும் இதற்காக உருவாக்கினோம். சிவன் அனைத்து தளைகளிலிருந்தும் விடுவிக்கக்கூடியவர் என்பதை விளக்குவதாக இது அமையும் என நாங்கள் நினைத்தோம்.

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham

“துவக்கத்தில், நான் இது இன்னுமொரு ஈஷா செயல்பாடு என்று நினைத்தேன், ஆனால் இந்த நாட்டிய நாடகத்திறான பணியை துவங்கியதுமே, இரவும் பகலும், தூக்கத்திலும் விழிப்பிலும் ஆதியோகி என்னுடனேயே இருந்தார். நாங்கள் அனைவரும் பேசியதெல்லாம் இதைத்தான்: ‘ஆதியோகி நடனம் தயாராகிவிட்டதா? ஆதியோகி முகம் உருவாகிவிட்டதா? நீங்கள் ஆதியோகி பாடலுக்காகவா வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்?’ அது வெறும் ஒரு வேலையாக இல்லாமல், எனக்கு என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை விட மிகப்பெரியதாக மாறியுள்ளது.” -ரேஷிக்கா S

சவால்களை தாண்டிய விதம்

நாடகத்தின் முதல்பகுதி சிவகாமி நாடகத்துடன் நன்கு பொருந்தியிருந்ததால் அதனை மாற்றி இந்நாடகத்தில் பொருத்துவதற்கு எளிதாக இருந்தது. இரண்டாம் பகுதியில், புதிதாக நடன வடிவமைப்பு செய்யவேண்டியிருந்ததால் சற்று சவாலாக இருந்தது. முதலில் நாங்கள் பக்தி வழியில் வந்த தமிழ் அடியார்களின் பாடல்களை பயன்படுத்த முயற்சித்தோம். அவை மிகவும் அழகுணர்சியுடன் இருந்தபோதிலும், அவை ஏதோ ஒருவகையில் எங்கள் நடனத்தில் பொருந்தாததாக இருந்தது. எனவே எங்களது இரண்டாவது வாய்ப்பு நாங்களே சுயமாக பாட்டு எழுதுவது! மரபின் மைந்தன் முத்தையா அண்ணா அவர்கள் ஆபத்பாந்தவராக வந்து சில பாடல்களை எங்களுக்கு எழுதித் தந்ததார். விரைவிலேயே பாடல்கள் நல்ல உருப்பெற்று, நாடகத்திற்கான எங்கள் ஒட்டுமொத்த தேவைகளும் ஒருசில நாட்களில் தயாரானது! இறுதியாக, 112 அடி ஆதியோகி திருமுகத்துடன் நாடகத்தை தொடர்புபடுத்தும் வகையில் சத்குரு பேசிய வார்த்தைகள் மற்றும் உச்சாடனங்களை இதில் சேர்த்தோம். மாணவர்கள் ஒன்றாக ஓரிடத்தில் நடன அசைவுகளை செய்து எங்கள் நடன ஆசிரியர்கள் ஷிபி அண்ணா மற்றும் திவ்யா அக்கா ஆகியோரால் மெருகூட்டப்பட்டது. இந்த முழு நிகழ்ச்சியை முழுமையாக உருவாக்குவதற்கு எங்களுக்கு மொத்தமாக ஒரு மாதகாலம் எடுத்துக்கொண்டது.

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham

ஆதியோகிக்காக அவருக்கு தக்கவகையில் பாடல் எழுதுவதற்கு எனது மூளையை கசக்கிப் பிழிந்தேன். ஆனாலும் அவையெல்லாம் சரியாக வரவில்லை! ஒருகட்டத்தில் நான் மிகவும் சோர்வடைந்தேன். பிறகு நான் மனதிற்குள் நினைத்தேன், ‘சத்குரு இந்த நாட்டிய நாடகம் நடப்பதற்காக நீங்கள் எனக்கு பாடல் வரிகளைத் தாருங்கள்! என்னால் இதனை சுயமாக நிகழ்த்த இயலாது.’ ஆச்சர்யப்படும் விதமாக, அந்த நாளிலேயே வார்த்தைகள் சரியாக வந்து விழ எது மிகவும் கடினமாக தெரிந்ததோ அது ஒரு சில மணிநேரங்களில் பூர்த்தியாகி முடிந்தது.” -ஸ்வாமி தேஜஸ்

பரிட்சையம் இல்லாத அனுபவ தளம்

எங்களில் பலரும் இளம்வயதிலிருந்தே நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கி வந்திருக்கும்போதிலும், ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு ஊர் ஊராகச் சென்று பல்வேறு மேடைகளில் நிகழ்ச்சியை வழங்குவதென்பது புதிய ஒரு சூழலாக அமைந்தது. இவற்றிற்கெல்லாம் மேலாக, நாங்கள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்போம். உதாரணத்திற்கு, சேலத்தில் ஆதியோகியாக வேடம் ஏற்ற ஒருவர் கோபிச்செட்டிபாளையத்தில் ஆதியோகி பக்தராக இருப்பார். இதனால் நாங்கள் ஒவ்வொருவரும் கதையின் அனைத்து அம்சங்களையும் அனுபவித்து உணரும் வாய்ப்பை பெறுகிறோம். எங்களில் பலரும் இதுகுறித்து பயம்கொண்டனர், ஆனால் எங்களுடன் எப்போதும் இருந்த ஆசிரியர்களின் துணையும் மற்றும் சத்குருவின் அருளும் நாங்கள் எதை செய்தாலும் எங்களை சிறப்பாக வழிநடத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருக்கும் மக்கள் பக்தி பரவசத்தில் திளைப்பதை பார்ப்பது ஓர் அற்புத அனுபவமாகும்.

“ஒரு நிகழ்ச்சியில், நான் சிவனை மலையிலிருந்து கீழிறங்கி வரும்படி வேண்டும் ஒரு பக்தனாக இருந்தேன். அந்த தருணங்களில், நான் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன். என்னால் பக்தனின் அந்த வேதனையையும் வலியையும் உணரமுடிந்தது. சிவன் கதாபாத்திரத்தில் இருந்த அந்த நாட்டியமாடும் நபர் கீழிறங்கி வந்தபோது, நான் அவரை சக மாணவராக நினைக்கவில்லை. அது சிவனே கீழிறங்கி வருவதுபோல் இருந்தது. அந்த அனுபவம் எனக்குள் ஆனந்தத்தை நிறைப்பதாக இருந்தது.” -மா சந்தோஷியா

பார்வையாளர்களிடமிருந்து பகிர்வுகள்:

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham

“சம்ஸ்கிருதி மாணவர்கல் வழங்கப்பட்ட நாட்டியமானது சிறந்த பாவத்துடன் மட்டுமல்லாமல், ராகம்-தாளத்துடன் கச்சிதமாக ஒத்திசைவில் அமைந்திருந்தது. உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆகியவைகளுக்கிடையே இருந்த ஒருங்கிணைப்பு பார்ப்பதற்கு நல்ல விருந்தாக அமைந்தது. ஆதியோகி வெள்ளியங்கிரி மலைகளை வந்தடையும் அந்த கதை முழுவதையும் நம்மால் தொடர்ந்து பார்த்து ரசிக்கமுடிகிறது. அவர்கள் அனைவரும் நடனமாடிய விதத்தை சொல்வதற்கு வார்த்தை ஏதும் இல்லை! எனது குருவிற்கு நன்றி! இந்த சம்ஸ்கிருதி குழந்தைகளின் நிகழ்ச்சியின் மூலம், நீங்கள் மலைகளிலிருந்து வந்திறங்கி எங்களை அழைக்கிறீர்கள்” -Dr.கவிதா

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham

“புண்யாக்ஷியை திருமணம் செய்யும்பொருட்டு தான் அளித்த வாக்குறுதியை காக்க தவறியதால் மனமுடைந்த நிலையில் வெள்ளியங்கிரியை வந்தடைந்தார் சிவன். நாடகத்தில் ஆதியோகியின் முகத்தை தங்கள் பாவனைகளில் குழந்தைகள் வெளிப்படுத்தும் விதத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை! என் கண்களில் கண்ணீர்...” -சாந்தி ஜானகிராமன்

ஆதியோகிக்காக ஈஷா சம்ஸ்கிருதி வழங்கிய நாட்டிய நாடகம்... உருவான விதம்! , Adiyogikkaga isha samskriti vazhangiya nattiya nadagam uruvana vitham

குறிப்பு: ஈஷா சம்ஸ்கிருதி திருப்பூர் மற்றும் கோவையில் பிப்வரி 4 & 5ல் நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார்கள். உங்கள் உள்ளூர் ஒருங்கிணைப்பாளரிடம் தொடர்புகொண்டு இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்!

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரியில் 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு ஈஷா யோகா மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

மேலும் தெரிந்துகொள்ள: AnandaAlai.com/MSR

தொடர்ப்புக்கு: 83000 83111

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1