அதிமதுரம் டீ!
மார்கழியில் குளிரும் பனியும் இருக்க அத்துடன் சளி சம்பந்தப்பட்ட உபாதைகளும் சேர்ந்தே நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலையில் எழுந்தவுடன் சூடான, ஆரோக்கியமான பானத்திற்காக ஏங்குவோர், இங்கே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை ட்ரை செய்து பாருங்களேன்...
 
ஈஷா ருசி

அதிமதுரம் டீ

தேவையான பொருட்கள்

அதிமதுரம் தூள் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 200 மில்லி
தேன் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - சுவைக்கேற்ப

செய்முறை

அதிமதுரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி நிழலில் காய வைத்து, சுத்தம் செய்து பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். பொடியை நீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து வடிகட்டி பருகவும். இது தீராத தாகத்தை தணிக்கவல்லது, சளிக்கு நல்லது. தொண்டை புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.

இஞ்சி கசாயம்

தேவையானவை

இஞ்சி சாறு - 4 ஸ்பூன்
தேன் - 4 ஸ்பூன்
லெமன் ஜுஸ் - 2 ஸ்பூன்
தண்ணீர் - ¾ டம்ளர்

செய்முறை

இஞ்சி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். தேன், லெமன் ஜுஸ் மற்றும் தண்ணீரோடு கலந்தால் கசாயம் தயார். இது அஜீரணக் கோளாறுக்கு நல்ல மருந்து.

Login / to join the conversation1
 
4 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

Enaku thevaiyaana baabathai sonnatharku mikka nandri.