நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 23

'கிணற்றைக் காணவில்லை' என்ற அந்த நகைச்வைக் காட்சியில் கூறுவதைப்போல், இனி நம்மை ஆற்றைக் காணவில்லை எனச் சொல்ல வைப்பதாக இருக்கும் நமது எதிர்காலம். இந்த அவலத்தை உணர்த்துவதாக உள்ளது நம்மாழ்வாரின் இந்தக் கட்டுரை.

நம்மாழ்வார்:

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் இப்படிப் பாடினார்.

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு!”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்றோ,

“எங்கும் கிளைமேட் சேஞ்ச் என்பதே பேச்சு - நாம்
எல்லார்க்கும் பசி, பிணி என்பது உறுதியாச்சு!”

“மண்ணும், இமயமலை எங்கள் மலையே!
இன்னரும் நீர்க் கங்கை ஆறு எங்கள் ஆறே!”
என்று பெருமை பொங்கப் பாடினான்.

இன்று, சுந்தர்லால் பகுகுணா,
“இமயமலையைக் காப்பாற்றுங்கள்!
கங்கை நதியைக் காப்பாற்றுங்கள்!”
என்று அறைகூவல் விடுக்கிறார்.

தென்னிந்திய ஆறுகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி நதிகளில் மலையில் மழை பெய்வதால் தண்ணீர் ஓடுகிறது. ஆனால், ‘வெள்ளிப் பனிமலை’ என்று பாரதி பாடிய இமயமலையில் கோடையில் பனி உருகுவதால் கங்கையில் தண்ணீர் ஓடுகிறது. அந்த கங்கைக்கு வந்த ஆபத்துபற்றி எச்சரிக்கவே சுற்றுச்சூழல் போராளி சுந்தர்லால் பகுகுணா, ‘இமயமலையைக் காப்போம்! கங்கை நதியைக் காப்போம்!’ என்று தூங்கும் மக்களைத் தட்டி எழுப்புகிறார்.

தமிழ்நாட்டின் பருவமழை தவறிப் பெய்வதால் நிலம் தரிசாகக் கிடக்கிறது அல்லது அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்கள் நீரில் மூழ்கி சேற்றில் புதைகின்றன.

கோடையில் உருக வேண்டிய இமயமலைப் பனி குளிர்காலத்திலேயே உருகி கங்கையில் வெள்ளமாகப் பாய்கிறது. ஆதலால், கோடையில் உருக வேண்டிய பனி காணாமல் போகிறது. கிலோ மீட்டர் கணக்கில் பனிப் பாறைகள் கரைந்து மறைகின்றன. சீனப் பகுதியில் உள்ள ‘திபெத்’திய மலைப்பகுதியிலும் பனிப் பாறைகள் கரைந்து மறைவதாகச் சீன நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். புவிக் கோளத்தின் இரு துருவங்களான ஆர்டிக், அன்டார்டிக் பகுதியிலும் பனிப் பாறைகள் கரைந்து, இடிந்து விழுந்து ஆறாகப் பெருகி கடற்கரையை நோக்கிப் பாய்வதை சின்னத்திரையில் காட்சியாகக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டின் பருவமழை தவறிப் பெய்வதால் நிலம் தரிசாகக் கிடக்கிறது அல்லது அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்கள் நீரில் மூழ்கி சேற்றில் புதைகின்றன. கடலோரம் வாழும் மக்களை ஆழிப்பேரலையும், குடிநீர்ப் பற்றாக்குறையும் அச்சுறுத்துகின்றன.

காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கிருஷ்ணசாமி, வளர்ந்த நாடுகளுக்கு உரிய அடையாளம் பற்றி தெரிவித்த கருத்து எல்லாரும் அசைபோடுவதற்கு ஏற்றது. வளரும் நாடுகளுக்கு அடையாளம் அவர்கள் எவ்வளவு பேப்பர்களைக் கழிக்கிறார்கள் என்பதைக்கொண்டே அளவிடப்படுகிறது. அணுகுண்டு வெடிப்பு, ஆயுதம் பரவலில் இருந்து கழிவறைப் பயன்பாடு வரை எவ்வளவு காகிதத்தை வீணடிக்கிறான் என்பதைக் கொண்டு ஒருவனின் நாகரிக வளர்ச்சி அளவிடப்படுகிறது.

பட்டணவாசிகள் அன்றாடம் காலைப் பொழுதில் தன் வீட்டுக் குப்பையை அருகில் உள்ள காலிமனையில் கொட்டுகிறார்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் லாரியைக்கொண்டு குப்பையைப் பல கிலோ மீட்டர் தூரம் கடத்திச் செல்ல வேண்டியுள்ளது. அந்த வாகனங்கள் புகையைக் கக்குகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. குப்பையைக் கொண்டுபோய்க் கொட்டுகின்ற இடத்தைச் சுற்றி வாழ்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. குப்பையை அப்புறப்படுத்தவே அதிகமாக நிதி தேவைப்படுகிறது. உலக வங்கியிடம் கை ஏந்த வேண்டியுள்ளது.
1

மாறாக, செறிக்கக்கூடிய குப்பைகளை (எஞ்சிய அல்லது கெட்டுப் போன உணவு, கனி, காய், தாள்கள்) நாம் தக்கவைத்து எருவாக (கம்போஸ்ட்) மாற்றிக்கொண்டால், பூமித்தாயின் காய்ச்சல் குறைப்பதற்கு நமது பங்கை ஆற்றியவர்களாவோம்.

இந்தியா முழுக்க, ஈஷா தொண்டர்கள் போன்று தன்னார்வம் மிக்க பொதுநலத் தொண்டர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படி ஓர் எதிர்காலம் அமையுமேயானால், நாம் இந்தியாவில் மன்னர்களாகவே வாழப்போவது நிச்சயம்!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!