TiE உலகளாவிய உச்சி மாநாடு 2020ல் சத்குரு

TiE உலகளாவிய உச்சி மாநாடு 2020ன் போது, "நல்வாழ்விற்கான தொழிற்நுட்பங்கள் எனும் தலைப்பில் சத்குருவுடன் கலந்துரையாடிய பிரமள் குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர்.சுவாதி பிரமள் அவர்கள் சத்குருவிடமிருந்து உள்நிலை தொழிற்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றார்.

TiE உலகளாவிய உச்சி மாநாடு என்பது தொழில்முனைவோருக்கான வருடாந்திர மாநாடு ஆகும். ஒவ்வொரு ஆண்டும், பேச்சாளர்களின் அமர்வுகள், வழிகாட்டுதல் அமர்வுகள் மற்றும் புதிய வணிக போக்குகள் மற்றும் தொழில்முனைவோர் குறித்த சிந்தனையைத் தூண்டும் விவாதங்கள் இதில் இடம்பெறுகின்றன.

திரு.நெல் ஜெயராமன் நினைவாக காவேரி கூக்குரலின் மரம் நடும் நிகழ்வு

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த திரு.நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி டிசம்பர் 6ம் தேதியன்று சிறப்பாக நடைபெற்றது.

மொடக்குறிச்சி வட்டம், குளூர் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில், விவசாயி திரு. கே.எஸ்.ராஜேஸ்வரன் அவர்களுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் சுமார் 3,500 மரங்களை நடும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் திரு.நல்லசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை துவங்கி வைத்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
— IshaFoundation Tamil (@IshaTamil) December 7, 2020

அமெரிக்காவில் சத்குருவின் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் துவக்கம்

உலகப் புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center - BIDMC) சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.

'Sadhguru Center for a Conscious Planet' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் எப்படி மேம்படுகிறது என்பதை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்ய உள்ளது.

ஐஐடி டெல்லியில் சத்குரு கலந்துரையாடல்

ஐ.ஐ.டி-டெல்லி மற்றும் கல்வி அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நயா பாரத்' தொடர் உரையாடல் நிகழ்ச்சியை சத்குரு ஆன்லைனில் துவங்கி வைத்தார். கடந்த நவம்பர் 29 அன்று இந்தியாவின் கல்வித் துறையின் எதிர்காலம் குறித்து நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சத்குருவுடன் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர் திரு.சஞ்சீவ் சன்யால் மற்றும் ஐஐடி டெல்லியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நொமேஷ் போலியா ஆகியோர் கலந்துரையாடினர்.

வியாபாரத்தில் தலைமைப் பண்பை வளர்க்கும் ஈஷா இன்சைட் 2020

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் CEOக்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை கடந்த நவம்பர் 27 அன்று சத்குரு துவங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.

வணிகத்தில் புதிய சிந்தனைகளையும் வழிமுறைகளையும் அறிமுகம் செய்வதோடு, நிகழ்கால பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வான வகையில் தீர்வு காண்பதற்காக ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் நிகழ்ந்தது. துவக்க நாளன்று பிக்பாஸ்கெட் (Bigbasket) நிறுவனத்தின் CEO திரு. ஹரி மேனன் சிறப்புரை ஆற்றினார். நவம்பர் 29 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அடுத்தடுத்த அமர்வுகளில் மேலும் பல வணிக தலைமைகள் கலந்துரையாடி நிகழ்ச்சிக்கு சிறப்புசேர்த்தனர்.

சத்குருவுடன் இன்டெல் நிறுவன தலைவர் கலந்துரையாடல்

இன்டெல் நிறுவனத்தின் மண்டல தலைவர் நிவ்ருதி அவர்கள் சத்குருவுடன் 'நல்வாழ்விற்கான தொழிற்நுட்பங்களில் முதலீடு செய்தல்' (Investing in technologies of Wellbeing) என்ற தலைப்பில் கலந்துரையாடினார். அறிவியல் தொழிற்நுட்பங்கள், ஆன்மீகம், சமூகம், அமைதி, வெற்றி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து சத்குருவிடம் அவர் முன்வைத்து கலந்துரையாடினார்.

நிறைவடைந்தது 2020ன் சத்குரு தரிசனம் நேரலை

தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும், சத்குரு தரிசனம் சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதன் மூலம், சவாலான இந்நேரத்தில் மக்கள் தங்கள் உள்நிலை சமநிலையையும் வளர்ச்சியையும் மேம்படுத்திக்கொள்ளும் விதமாக தொடர்ந்து நம்முடன் இணைந்திருந்தார் சத்குரு. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த சத்குரு தரிசன நேரலை நிகழ்ச்சி, கடந்த டிசம்பர் 13, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றுள்ளது.

ஈஷாவிற்குத் திரும்பினார் சத்குரு...!

கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் கலந்துரையாடல்கள், வட அமெரிக்க பைக் பயணம் என அமெரிக்காவிலிருந்து நம்முடன் இணைந்திருந்த சத்குரு, டிசம்பர் 15ம் தேதி நள்ளிரவில் கோவையிலுள்ள ஈஷா யோக மையத்திற்கு வந்துசேர்ந்தார். சத்குருவை வரவேற்க மலைவாசல், ஆதியோகி மற்றும் ஆசிரம வளாகங்களில் ஆசிரமவாசிகள் தங்கள் கைகளில் தீபங்களை ஏந்தியபடி காத்திருந்து சிறப்பான வரவேற்பளித்தனர். சத்குரு ஆதியோகி வந்தடைந்த அந்த நிகழ்வின் காணொளியைக் கீழே காணுங்கள்.