2018 மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்?
வரும் பிப்ரவரி 13ல் நிகழவிருக்கும் ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் காத்திருக்கும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு கண்ணோட்டம் இங்கே!
 
 

மஹாசிவராத்திரி ஸ்பெஷலாய் ஆதியோகி அணிந்துள்ள ருத்ராட்சம் இந்த முறை நேரில் வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

 

இந்தியாவில் கும்பமேளாவிற்கு கூடும் பல லட்சம் மக்கள் கூட்டத்திற்கு அடுத்தபடியாக ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில்தான் மக்கள் பெரும் திரளாகக் கூடி கொண்டாடி மகிழ்கிறார்கள் என பிரபல பத்திரிக்கையான Harper’s Bazaar India பதிவு செய்துள்ளது.

 

ஈஷா மஹாசிவராத்திரி தமிழக அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துவரும் ஒரு ஒப்பற்ற கொண்டாட்டமாக திகழ்கிறது. இந்தியாவில் கும்பமேளாவிற்கு கூடும் பல லட்சம் மக்கள் கூட்டத்திற்கு அடுத்தபடியாக ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில்தான் மக்கள் பெரும் திரளாகக் கூடி கொண்டாடி மகிழ்கிறார்கள் என பிரபல பத்திரிக்கையான Harper’s Bazaar India பதிவு செய்துள்ளது.

இவ்வாண்டு மஹாசிவராத்திரி கொண்டாட்டம் குறித்து சத்குரு சொல்லும்போது, “என்னிடம் பலரும் கேட்கிறார்கள்… கடந்த ஆண்டு பாரத பிரதமர் மஹாசிவராத்திரி விழாவிற்கு வருகை தந்தார், இந்த ஆண்டு யார் வரவிருக்கிறார்கள் என்று! இந்த ஆண்டு அந்த ஆதியோகியே வரப்போகிறார் என்று அவர்களுக்கு சொன்னேன்!” என்று குறிப்பிடுகிறார்.

கடந்த ஆண்டு 112 அடி உயர ஆதியோகி திருமுகப் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி ஈஷா மஹாசிவராத்திரி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது! 2018 மஹாசிவராத்திரியிலும் அதற்கு நிகரான சிறப்பம்சங்கள் காத்திருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தொடர்ந்து படித்து அறியுங்கள்!

 

மஹாசிவராத்திரி கொண்டாட்டம் எதற்காக?

 

புண்ணிய பூமியாம் பாரதம், ஒருவரின் ஆன்ம வளர்ச்சிக்காக பல்வேறு கொண்டாட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவை அனைத்திலும் மஹாசிவராத்திரி திருவிழா சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது! ஆதியோகியான சிவனின் அருளைப்பெற, மஹாசிவராத்திரியை நாம் கொண்டாடுகிறோம். மனித விழிப்புணர்வை மேலெழச் செய்ததில் ஆதியோகியின் பங்கு மகத்தானது. கோள்களின் அமைப்பும் சாதகமாய் இருப்பதால், மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வரும் வருடத்தில் பிப்ரவரி 13ம் தேதியன்று தெய்வீக இரவான மஹாசிவராத்திரி, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், 112 அடி ஆதியோகியின் திருவருளுடன் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு முழுக்க நிகழும் இந்தத் திருவிழாவில், பிரபல இசைக் கலைஞர்களும் நடன கலைஞர்களும் பல்துறை விற்பன்னர்களும் தங்கள் நிகழ்ச்சிகளை வழங்கி நம்மை உற்சாகத்தில் திளைக்கச் செய்ய உள்ளனர்.

மேற்கூறிய வழக்கமான கொண்டாட்ட நிகழ்வுகளுடன் மஹாசிவராத்திரி 2018ல் இன்னும் சில ஸ்பெஷல்கள் காத்திருக்கின்றன. பிரத்யேகமாக நிகழவுள்ள அந்த நான்கு சிறப்பம்சங்கள், மக்கள் அனைவரையும் கொண்டாட்டத்தில் நேரடியாக கலந்து கொள்வதற்கு உந்தச் செய்பவையாக அமைகின்றன. வருகின்ற மஹாசிவராத்திரி இன்னுமொரு வெகுவிமரிசையான கொண்டாட்டமாக அமைவதற்காக சத்குருவின் வழிகாட்டுதலில் இவை நிகழ்த்தப்படுகின்றன!

சரி; அவை என்னென்ன சிறப்பம்சங்கள்?

 

சிறப்பு 1:

அனைவருக்கும் ஆதியோகியின் ருத்ராட்சம் வரப்பிரசாதமாக கிடைக்கும்!

 

கடந்த (2017) மஹாசிவராத்திரியில் 112 அடி ஆதியோகி திருமுக பிரதிஷ்டையின்போது, தன்னார்வத் தொண்டர்களால் கோர்க்கப்பட்டு ‘லட்சத்து எட்டு’ ருத்ராட்சம் கொண்ட மாலை ஆதியோகிக்கு அர்ப்பணையாக அணிவிக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலம் அந்த மாலை ஆதியோகியின் உடலை அலங்கரித்து வருகிறது! அந்த மாலையிலுள்ள ருத்ராட்ச மணிகள் அனைத்தும் இவ்வருட மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரடியாக வருகைதரும் அனைவருக்கும் ஆதியோகி பிரசாதமாக வழங்கப்பட உள்ளது!

தமிழ் மக்கள் அனைவரும் இதனை பெறவேண்டும் என்பது சத்குருவின் பெரும் விருப்பமாக உள்ளது! ஆதியோகி ருத்ராட்ச பிரசாதத்தைப் பெற முன்பதிவோ அல்லது நன்கொடையோ தேவையில்லை!

 

சிறப்பு 2:

 

‘ஆதியோகி பிரதட்சினை’ எனும் செயல்முறை

 

குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இந்த பிரதட்சினை (வலம் வருதல்) ஆதியோகி திருமுகம் முதல் மந்திர உச்சாடனையுடன் தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை வலம்வந்து தீர்த்த குண்டங்களில் தீர்த்தம் அர்ப்பணித்துவிட்டு (பெண்கள் – சந்திரகுண்டம், ஆண்கள் – சூரியகுண்டம்) மீண்டும் ஆதியோகி திருமுகத்தை வந்தடைவதில் முடிகிறது! இது 1 பிரதட்சினை ஆகும்! ஒருவர் ஒரு வருடத்திற்குள் 1, 3, 7, 21 அல்லது 112 ஆகிய எண்ணிக்கைகளில் பிரதட்சினை’ செய்யலாம்!

நோயிலிருந்து விடுதலை, ஆன்மீகத்தில் மேன்மை, தடைகள் அகலுதல் போன்ற பல்வேறு பலன்களுக்காக வெவ்வேறு முறைகளில் இந்த பிரதட்சினை செயல்முறையை சத்குரு வடிவமைத்து வழங்கவுள்ளார்!

 

சிறப்பு 3:

 

கூடுதல் சிறப்பில் லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலம்!

 

வழக்கமாக பௌர்ணமி தினங்களில் லிங்கபைரவிக்கு அர்ப்பணிப்பாக தியானலிங்க பரிக்கிரமத்தை சுற்றி நிகழும் லிங்கபைரவி உற்சவ மூர்த்தி ஊர்வலமானது இந்த ஆண்டு மஹாசிவராத்திரியன்று, கூடுதல் சிறப்பாக ஆதியோகி திருமுகம்வரை நிகழவுள்ளது! இந்த ஊர்வலத்தில் அனைவருமே பங்கேற்கும் வாய்ப்புள்ளது!

 

சிறப்பு 4:

 

ஆதியோகிக்கு அர்ப்பணிப்பு வழங்கலாம்!

 

ஆதியோகி திருமுகத்திற்கு அருகே சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஷ்வர லிங்கத்திற்கு மஹாசிவராத்திரி நாளன்று தங்கள் கரங்களால் சில வகை (நீர், வேப்பிலை) அர்ப்பணிப்புகளை வழங்கிட முடியும்!

சத்குருவுடன் இணைந்து, 2018 மஹாசிவராத்திரியின் சிறப்பான நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொண்டு அருளையும் மகத்துவத்தையும் உணர்ந்திட அனைவரும் வாருங்கள்!

 

மஹாசிவராத்திரிக்கு சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த சாதனாக்கள்!

 

சிவாங்கா சாதனா

 

ஆண்களுக்கான சக்திவாய்ந்த ‘சிவாங்கா’ விரதத்திற்கான தீட்சை, ஆங்கிலப் புத்தாண்டு துவக்கமும் பௌர்ணமி நாளுமான ஜனவரி 1 அன்று சாதகர்களுக்கு வழங்கப்படுகிறது! சாதகர்கள் மஹாசிவராத்திரி வரை 42 நாட்கள் விரதமிருந்து வெள்ளியங்கிரி மலைக்குப் புனித யாத்திரை மேற்கொள்வர்.

விரத நிறைவு: மஹாசிவராத்திரி இரவில் தியானலிங்கத்திற்கு தங்கள் அர்ப்பணைகளைச் செய்தல், சத்குருவின் சத்சங்கம் மற்றும் ஈஷா மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுதல்.

இதில் பங்கேற்பதற்கான தீட்சை உங்கள் உள்ளூர் ஈஷா மையங்களிலேயே வழங்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொண்டு விபரத்தை அறியலாம்!

 

மஹாசிவராத்திரி சாதனா

 

மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40, 21, 14, 7 அல்லது 3 நாட்களுக்கு மேற்கொள்ளக்கூடிய சாதனா. இதனை ஆண்-பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம்! மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் நேரடியாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ கலந்துகொண்டு சாதனாவை நிறைவு செய்யலாம்.

தொடர்புக்கு:

தொலைபேசி எண்: 83000 83111

மின்னஞ்சல்: info@mahashivarathri.org

இணையதளம்: tamil.sadhguru.org/MSR

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1