இதோ வந்து விட்டது மஹாசிவராத்திரி.. நமது ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு இன்னும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதில் கலந்துகொண்டு யோகத்தின் மூலமான ஆதியோகி சிவனின் திருமுகத்தை திறந்து வைக்கிறார்.

ஆதியோகிக்கு நாம் அர்ப்பணமாக வழங்கக்கூடிய வகையில், சத்குரு வடிவமைத்துள்ள மஹாயோக வேள்வியை பிரதமர் அவர்கள் புனித தீ ஏற்றி துவக்கி வைக்க இருக்கிறார்.

இந்த ஆண்டு மஹாசிவராத்திரி திருவிழா மிகுந்த சிறப்புடன் நடைபெற இருக்கிறது. ஒரு மனிதன் தன் ஆற்றலின் உச்சத்தை அடைய, ஆதியோகி 112 வழிகளை யோக விஞ்ஞானமாக வழங்கினார். மனிதகுலத்திற்கு ஆதியோகி வழங்கியுள்ள இணையற்ற பங்களிப்பிற்கு நமது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக 112 அடி உயரத்தில், ஆதியோகி சிவனின் திருமுகத்தை சத்குரு அவர்கள் பிரதிஷ்டை செய்கிறார்.

ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, நம் வாழ்நாளில் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாக ஆதியோகி சிவனின் பிரதிஷ்டை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி அன்று நிகழவுள்ளது. நம் பாரத கலாச்சாரத்தில், விஞ்ஞானமாக வழங்கிவரும் ஆன்மீக செயல்முறைகளின் சக்தியை அனைவரும் உணர வேண்டும் என விரும்பி சத்குரு இந்த வாய்ப்பை அனைவருக்கும் வழங்கியுள்ளார்.

தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களில் இருந்தும் மஹாசிவராத்திரிக்காக சிறப்பு பேருந்து வசதிகள் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஆதியோகிக்கு நாம் அர்ப்பணமாக வழங்கக்கூடிய வகையில், சத்குரு வடிவமைத்துள்ள மஹாயோக வேள்வியை பிரதமர் அவர்கள் புனித தீ ஏற்றி துவக்கி வைக்க இருக்கிறார்.

ஒரு எளிய யோக பயிற்சியை 10 லட்சம் பேர், ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு கற்றுத்தரும்போது, அடுத்த மஹாசிவராத்திரிக்கு முன்பாக 10 கோடி மக்களுக்கு யோகாவை கொண்டு சேர்த்துவிட முடியும். உலக மக்கள் அனைவரையும் சென்றடையும் ஒரு வேள்வியாகவே இது நிகழ உள்ளது.. இந்த புனிதவேள்வியில் "யோக வீரர்"களாக இருந்து உலக மக்களுக்கு யோகாவை கொண்டு செல்லும் வாய்ப்பை தன்னார்வத் தொண்டர்களுக்கு சத்குரு ஏற்படுத்தியிருக்கிறார்.

“உலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு அற்ற நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், விழிப்புணர்வுடன் தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இறந்த பிறகே செல்லக்கூடிய, கற்பனை சொர்க்கத்தை அடைய விரும்புபவர்களாக, அடுத்த தலைமுறையினர் இருக்கக்கூடாது.
உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக் கூடியதாக மாறும். இன்று பெரும்பான்மையான மனிதர்களுக்கு, பல் தேய்ப்பது தெரிந்திருப்பதுபோல, தங்களை எப்படி அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களுக்குத் தங்கள் உடலையும், மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது நிகழ்ந்தால், மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாகவும், சாத்தியமாகவும் மாறுவார்கள்.” என்று ஆதியோகி மூலமாக நமது வருங்காலத்திற்கு தேவையான அடிப்படை நம்பிக்கையை வழங்குகிறார் சத்குரு.

இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம், ஆதியோகியின் திருமுகத்தை தன்னுடைய "இன்கிரெடிபிள் இந்தியா" பிரச்சார திட்டத்தில் இணைத்துக்கொண்டு, அதிகாரபூர்வ சுற்றலா தலமாக அறிவித்துள்ளது.

ஒருவரின் உள்நிலை நல்வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம், ஆதியோகியின் திருமுகத்தை தன்னுடைய "இன்கிரெடிபிள் இந்தியா" பிரச்சார திட்டத்தில் இணைத்துக்கொண்டு, அதிகாரபூர்வ சுற்றலா தலமாக அறிவித்துள்ளது. நமது அன்பான அமைதியான உலகை காணும் கனவுக்கு இது மேலும் உற்சாகம் ஊட்டுவதாக அமைந்துள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷாவில் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள், பிப்ரவரி 24 மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6 மணிவரை நடக்க இருக்கிறது. மஹாசிவராத்திரி இரவன்று இயற்கையாகவே நிலவும் கோள்களின் நிலைப்பாட்டால் மனித அமைப்பின் சக்திநிலையில் ஆற்றல் இயல்பாகவே மேல் நோக்கி எழுகிறது. ஒருவர் அன்றைய இரவு முழுவதும் விழிப்புணர்வான நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்திருந்து கண் விழித்திருப்பாரேயானால், அவர் உடல் மற்றும் உள்நிலையில் முழுமையான நலனைப்பெற முடியும்.

இயற்கையாகவே அமைந்திருக்கும் இந்த சிறப்பான நாளில் சத்குருவின் அருளுரை, மந்திர உச்சாடனம், சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம் என ஈஷா யோக மையம் ஒருவருக்கு பெரும் ஆன்மீக வாய்ப்பை உணர வைக்கக்கூடிய இடமாக அமைந்துள்ளது.

திரு. கைலாஷ் கேர், ராஜஸ்தான் ரூட்ஸ், சவுன்ட்ஸ் ஆப் ஈஷா மற்றும் நிருத்தருத்யா நாட்டிய குழுவினர், இரவு முழுவதும் நாம் உற்சாகத்துடன் கண்விழித்திருக்க கலை நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார்கள். மஹாசிவராத்திரி அன்று நாள் முழுவதும் அனைவருக்கும் ‘மஹா அன்னதானம்’ வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் வண்ணம் நேரலையாக 7 மொழிகளில் 23 டிவி சேனல்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் ஒளிபரப்பாக உள்ளது.

பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் நடன வடிவங்களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும், மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக யக்ஷா திருவிழா நடத்தப்படுகிறது.

இதில் புகழ்பெற்ற கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றனர். இந்த ஆண்டு பங்கேற்கும் கலைஞர்கள்:

பிப்ரவரி 21
வயலின் இசை
டாக்டர். மைசூர் மஞ்சுநாத் & டாக்டர். மைசூர் நாகராஜ்

பிப்ரவரி 22
பரதநாட்டியம்
பத்மஸ்ரீ ஸ்ரீமதி மீனாட்சி சித்ராஞ்சன்

பிப்ரவரி 23
ஒடிசி நடனம்
ஸ்ரீமதி. பிஜாயினி சத்பதி மற்றும்
ஸ்ரீமதி. சுரூபா சென்

நம் வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி நிகழ்வில், ஆதியோகி சிவனின் திருமுக திறப்பினை காணும் வாய்ப்பை அனைவருக்கும் வழங்கியிருக்கிறார் சத்குரு. ஆன்மீக அலையின் துவக்கமாக இருக்கப்போகும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.

குறிப்பு:

பிப்ரவரி 24, மஹாசிவராத்திரி அன்று 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை சத்குரு அவர்கள் ஈஷா யோக மையத்தில் பிரதிஷ்டை செய்கிறார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அனுபவத்தில் எங்களுடன் இணையுங்கள்!

மேலும் விவரங்களுக்கு: 83000 83111


ஈஷாவில் இவ்வருட மஹாசிவராத்திரி பற்றி மேலும் தெரிந்துகொள்ள:
AnandaAlai.com/MSR

யக்ஷா -பாரம்பரிய இசை நாட்டிய திருவிழா
இலவச நேரலையில் இணைந்திடுங்கள்!
isha.sadhguru.org/LIVE

பிப்ரவரி 21-23, 2017
மாலை 6.50 – 8.30