சும்மா விளையாடுகிறேன்...

தேசத்து இளைஞர்களை விறுவிறுப்பான விவாதத்தில் ஈடுபடுத்தும் சத்குரு, விவாதமும் வித்தியாசமும் இருமையும் கடந்த ஒரு பரிமாணம் தனக்குள் பொதிந்திருப்பதை தான் இயற்றியுள்ள இந்த அழகிய கவிதையின் மூலம் உணர்த்துகிறார். "என் ஆழத்தில் நீங்கள் - நான் என்பதே இல்லை. சும்மா விளையாடுகிறேன்..."
 
Sadhguru showered in rose petals, welcoming him in Kashi | Just Playing...
 
 
 

சும்மா விளையாடுகிறேன்…

நான் எல்லாவற்றையும் இன்னபிறவற்றையும்

ஏற்கும் தனியிடங்கள் என் மனதில் உள்ளன.

ஆனால் என் மனதில்

எவரும் சொல்லும் எதையும் எதிர்க்கும் பொதுவிடங்களும் உள்ளன.

இது முன்னுக்குப்பின் முரணான இருத்தலல்ல,

என் ஆழங்களில் நான் எந்தப்பக்கமும் சாய்ந்ததில்லை.

எனினும் நான் கையிலெடுக்கும் எதற்காகவும்

உறுதியாக நிற்கிறேன்.

நான் உங்களிடம் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டேன் என நினைக்காதீர்,

உங்களுடன் சும்மா விளையாடுகிறேன்,

ஏனெனில் என் ஆழத்தில் நீங்கள் - நான் என்பதே இல்லை.

சும்மா விளையாடுகிறேன்...

 

அன்பும் அருளும்,

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1