கேள்வி: யோகாவை வலுக்கட்டாயமாகத் திணிக்கலாமா?

சத்குரு: இதற்கு முந்தைய அரசாங்கம் இதை அமல்படுத்தியிருந்தால் யாரும் இதை இவ்வளவு எதிர்த்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் இருப்பதால்தான், அந்தக் கட்சியை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் மக்கள் தொடர்பு படுத்தி பார்ப்பதால்தான், இந்தப் பிரச்சனைகளே வருகின்றன. 1947லேயே ஒவ்வொருவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தால் எல்லோரும் சந்தோஷமாக யோகா கற்றிருப்பார்கள். மக்கள் அரசியல் நிலைப்பாடு எடுத்துவிட்டார்கள் என்றே சொல்வேன். மக்களின் பிரச்சனையே ஒவ்வொன்றிலும் முன்முடிவு கொள்வதுதான். இது நீங்க வேண்டும். அறிவுள்ள மனிதர் ஒவ்வொருவருமே உள்ளதை உள்ளவாறு பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும். எது உங்களுக்கு நன்மை தரும் என்று தோன்றுகிறதோ அதை செய்யும் உறுதி உங்களுக்கு வேண்டும்.

கேள்வி: யோகா என்பது இந்து மதத்திற்கு தொடர்பில்லாத ஒன்று என்று நீங்கள் சொல்கிறீர்களா?

சத்குரு: பாருங்கள், யோகா என்பது இந்து மதம் என்றால் புவியீர்ப்பு என்பது கிறித்துவ மதத்தைச் சார்ந்ததாக இருக்கவேண்டும், இல்லையா? அப்படியென்றால் மற்றவர்கள் எல்லோரும் மிதந்து கொண்டும் புவியீர்ப்புக்கு வசப்படாமலும் இருந்துவிடலாமா? அப்படியொரு வாய்ப்பே இல்லை. மனித அமைப்பு என்பது எப்படி வேலை செய்கிறது, தெரியுமா? மனித அமைப்பு என்பது முதலில் நீங்கள் உருவாக்கியதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அது இயற்கையின் உருவாக்கம். அந்த மனித இயந்திரத்தை ஆழமாகப் புரிவதும், அதை எப்படி உச்சத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைக் கற்பதுமே யோகா. ஒவ்வொரு மனிதனுமே, அவர் யாராக இருந்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கேள்வி: யோகாவை ஈஷா பள்ளிகளில் கற்பிப்பதாக அறிகிறேன். பள்ளிப் பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாயமாகத் திணிப்பது சரியா?

சத்குரு: பௌதீகத்தையும், இரசாயனத்தையும் வலுக்கட்டாயமாகக் கற்றுத் தருவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

கேள்வி: ஆனால் யோகா என்பது வேறு விஷயம் அல்லவா? அது ஒரு உடற்பயிற்சி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: இல்லை, இல்லை. அது உடற்பயிற்சி இல்லை. கட்டாயப்படுத்தி ஒரு தாவரத்தைப் பற்றி, அதன் இரசாயனத்தைப் பற்றி உங்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். அதை உயிரியல் என்று கற்கிறீர்கள். மிக மோசமாக கொடுமைப்படுத்தி, ஒரு தவளையை அறுத்து கட்டாயப்படுத்தி உங்களைக் கற்கப் பணிக்கிறார்கள். அதை விலங்கியல் என்று கற்பீர்கள். தாவரம் பற்றியும் விலங்குகள் பற்றியும் கற்பீர்கள், ஆனால் உங்களைப் பற்றி, உங்கள் உள்தொழில்நுட்பத்தைப் பற்றி கற்றுக்கொள்ளுங்கள் என்று நான் சொன்னால், அதை வலுக்கட்டாயம் என்கிறீர்கள். அதனால்தான் நான் சொல்கிறேன், நாம் நமது மூளையை ஆங்கிலேயருக்கு அடகு வைத்துவிட்டோம், இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்கிறேன். மனிதனின் உள் அமைப்பு என்பது ஒரு விஞ்ஞானம். அதை அடிப்படையாக வைத்துதான் இந்த நாடு ஒரு காலத்தில் உலகிலேயே உயர்ந்த நிலைக்கு வளர்ந்தது. நாம்தான் பொருளாதாரத்தில் மிக உயரத்தில் இருந்தோம், அதிகமாக ஏற்றுமதி செய்தோம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே விஞ்ஞானத்தில் வளர்ந்திருந்தோம். ஏனெனில் அப்போது மக்கள் மனித தொழில்நுட்பத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். ஆனால் இன்று மிகவும் கீழ்நிலையில் இருக்கிறோம். இப்போது மீண்டும் மேல் எழுவதற்கான தருணம். ஒரு நாடு உயர வேண்டுமானால், அதன் குடிமக்கள் உயர வேண்டும், அல்லவா? தனிமனிதர்கள் தங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட சமநிலையை அடையவில்லை என்றால், பிறகு இந்த நாட்டை எப்படி மேல்நிலைக்கு உயர்த்தமுடியும் என்று நினைக்கிறீர்கள்? அது ஒரு வெற்றுக்கோஷமாக மட்டுமே இருக்கும். அப்படி நடக்கவே நடக்காது. அதனால்தான் ஒவ்வொரு குழந்தையும், அது எந்த சமூகத்திலிருந்து வந்தாலும் சரி, யோகா கற்க வேண்டும் என்று சொல்கிறேன். எல்லா குழந்தைகளும், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இதில் பயனடைய வேண்டும் என்று சொல்கிறேன்.

கேள்வி: ஆனால் அப்படி செய்வது தனிமனித சுதந்திரத்திற்கும், மத நம்பிக்கைக்கும் எதிரானதாக ஆகாதா?

சத்குரு: நீங்கள் முன்னே குனியும்போது, உங்கள் மத நம்பிக்கைகள் உங்களை விட்டுப் போய்விடுகிறதா? நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் மத நம்பிக்கைகள் உங்களை விட்டுப் போய்விடுகிறதா? என்ன மாதிரியான மத நம்பிக்கை இது? நான் எந்த கடவுளையும் வழிபட உங்களுக்கு சொல்லவில்லை. நம்பிக்கைகள் என்பது அரசியல் விஷயம், அவ்வளவுதான். அதுதான் நான் சொன்னேனே, வேறு அரசு இதைக் கொண்டு வந்திருந்தால் யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்து சார்பு என்று அறியப்படுகிற அரசால் கொண்டு வந்ததால்தான் இது பிரச்சனையாகிறது.

கேள்வி: நீங்கள் விஞ்ஞானம் என்கிறீர்கள், ஆனால் பெரும்பாலான மக்கள் அதை ஆன்மீகப் பயிற்சியாகத்தானே பார்க்கிறார்கள்?

சத்குரு: யார் அந்த பெரும்பாலான மக்கள்?

கேள்வி: நானே அப்படித்தான் பார்க்கிறேன்.

சத்குரு: அப்படியென்றால் நீங்கள் யோகாவை கற்கவில்லை என்றே நினைக்கிறேன்

கேள்வி: சரியாக சொன்னீர்கள்

சத்குரு: ஓ, அப்படியென்றால் நான் என்ன செய்வது?

கேள்வி: சூரிய நமஸ்காரத்தில் உச்சாடனம் இருக்கிறதே?

சத்குரு: சூரிய நமஸ்காரத்தில் உச்சாடனம் எதுவும் கிடையாது. அதை யார் சேர்த்திருந்தாலும் சரி, அப்படி எதுவும் கிடையாது.

கேள்வி: ஆனால் நான் இங்கு ஆசிரமத்தில் காலை உணவு சாப்பிட்டேன். எல்லோரும் சாப்பிடுவதற்கு முன் உச்சாடனம் செய்தார்களே!

சத்குரு: உங்களுக்கு அதன் அர்த்தம் தெரியுமா? சரி, நானே சொல்கிறேன். கூடியிருப்போம், கூடியிருந்து உண்போம், கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம், நம்மிடையே தீய உணர்வு இல்லாதிருக்கட்டும், இப்படித்தான் சொல்கிறது, அந்த உட்சாடனம். உங்களுக்கு இது ஒரு பிரச்சனையா? இந்த நாடு பல கலாச்சாரங்களைக் கொண்டது. அனைவரும் 100 விதங்களில் கலாச்சார ரீதியாக பிரிந்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது, இது மிகவும் முக்கியம் அல்லவா? சேர்ந்திருப்போம், சேர்ந்து உருவாக்குவோம் என்பது மிகவும் முக்கியம் இல்லையா? அது ஏன் உங்கள் அல்லது எனது நம்பிக்கைக்கு எதிராக இருக்க வேண்டும்? எனவே ஏதாவது ஒன்று நமக்கு நன்மை தருமா என்றுதான் பார்க்க வேண்டும், நன்மை தருவதாக இருந்தால் அதைத் தேர்வு செய்யும் உறுதி வேண்டும்.

உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.​