சத்குரு:

இந்த உடல் என்பது இந்த பூமியின் ஒரு பாகம். அவ்வளவுதான். இந்த பூமிக்கு என்னென்ன அனுபவங்கள் ஏற்படுகிறதோ, என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதோ, அவை மனித உடலிலும் நிகழ்கிறது. நாம் எப்போதுமே யோக மரபில் கோடைக்கால கதிர்திருப்பத்தில் இருந்து குளிர்கால கதிர்திருப்பம் வரையிலான காலத்தை சாதனா பாதை என்போம். குறிப்பாக கோடைக்கால கதிர்திருப்ப நாளிலிருந்து வரக்கூடிய முதல் பௌர்ணமியான குருபௌர்ணமியில் இருந்து குளிர்கால கதிர்திருப்பத்திற்கு அடுத்த சில நாட்கள் வரை, உத்தேசமாக ஜனவரி 4 அல்லது 5 வரை உங்கள் சாதனா தீவிரமாக நடக்க வேண்டும். பூமியில், அதிலும் குறிப்பாக பூமியின் வட அரைக்கோள பாகத்தில் சாதனா சிறப்பான பலன்களை வழங்குகிறது.

ஆதிகுருவாக அமர்ந்த ஆதியோகி

isha-yoga-maiyathil-sadhana-pada2

தட்சிணாயணம் எனவும் அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில், பூமியின் வடஅரைக்கோளத்தில் இருந்து பார்க்கும்போது வானில் சூரியன் தென்திசையில் நகரத் துவங்குகிறது. சூரியனின் இந்த தென்திசை நோக்கிய நகர்வு, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று முதன்முதலில் கற்றுக் கொடுத்ததை குறிப்பதாக உள்ளது. தென்திசை நோக்கி அமர்ந்ததால் அவர் தட்சிணாமூர்த்தி என அழைக்கப்படுகிறார். ஆதியோகி தன் விருப்பத்தினால் தென் முகமாக அமரவில்லை.. சூரியன் தென்திசை நோக்கி நகர்வதால் இந்த நேரத்தில் செயல்களை சிறப்பாக செய்யவது சரி என உணர்ந்து, தென்திசை நோக்கி அமர்ந்த நிலை அவருடையது.

ஒருவர் எந்த வகையான யோகாவை பயிற்சி செய்பவராக இருந்தாலும், அவரது வாழ்க்கையின் முக்கியமான காலமாக இருப்பது சாதனா பாதை. எதாவது நிகழவேண்டும் என்றால், நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை கொண்டு சரியான செயல்களை செய்வது மிக முக்கியமானது தானே. நம் கையில் எதுவும் இல்லை எனும்போதுதான் நாம் காத்திருக்க வேண்டும். சாதனா என்று நாம் சொல்வது, நம் கையில் என்ன இருக்கிறதோ அதைத்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் கையில் இருப்பதில் முழுமையாக ஈடுபடுவதன் மூலம், நாம் அதை நிகழச்செய்கிறோம்.

ஆழமாக வேரூன்றுங்கள்

isha-yoga-maiyathil-sadhana-pada3

இந்த ஆறுமாத காலம் மிகமுக்கியமானது என்பதால், நீங்கள் இப்போது சரியான செயல்களை செய்வது அவசியமாகிறது. இப்போதைய உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அறுவடையின்போது நீங்கள் அனுபவிக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு செடியில் மொட்டு அரும்பும்போது, நீங்கள் செய்ய எதுவும் இல்லை. செடிக்கு தேவையானபோது தண்ணீரும் உரமும் கவனமாக வழங்கியிருந்தால், அதன் விளைவாக இயல்பாகவே செடி அரும்பு விட்டு மலராக மலரும்தானே... இதுவும் அப்படியேதான்.

நான் உங்களுக்கு உரமாக இருக்கிறேன். என்னுள் நீங்கள் ஆழமாக வேரூன்றுங்கள்.

நீங்கள் மலர்வது நிச்சயம் நடக்கும். உரத்திடம் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டாம் - அது வேலையும் செய்யாது. இறுக்கமாக உங்கள் வேர்களை பதியுங்கள். உரம் பார்ப்பதற்கு மலரைப்போல இருக்காது.. அதன் வாசமும் மலரைப்போல இருக்காது.. ஆனால், நிச்சயமாக செடியில் பூ பூக்கும். இதையே நீங்களும் செய்ய வேண்டும்.

சாதனா பாதையில் தன்னார்வத் தொண்டு ஏன்?

isha-yoga-maiyathil-sadhana-pada4

இதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும், கண்களை மூடி அமர்வது மட்டுமே சாதனா இல்லை. உங்கள் இயல்பில் நீங்கள் தியான நிலைக்கு வர, சில அம்சங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. உங்கள் கர்மவினை முடிச்சுகளை அவிழ்க்காத வரையில் உங்கள் வாழ்க்கையில் தியானம் என்பது நடக்கப்போவதில்லை. அதற்கான சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்களை சூழ்ந்திருக்கும் எல்லா சுவர்களையும் தகர்க்க, செயல் செய்வதே சிறந்த வழி. கண்களை மூடி அவற்றை தகர்க்க முயற்சி செய்வதைவிட, தீவிரமான, கவனத்துடன் ஈடுபடும் செயல், கர்மவினையின் சுவர்களை எளிதாக தகர்த்து விடும்.

ஆசிரம சூழலில் நாம் ஏன் சாதனா செய்யவேண்டும்?...

isha-yoga-maiyathil-sadhana-pada5

ஒரு சில மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் எங்கிருந்தாலும் வளர்ந்து விடுவார்கள். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் வளர சரியான சூழல் தேவையாக இருக்கிறது. உங்கள் வீட்டிலேயே அப்படி ஒரு சூழலை உருவாக்க முடிந்தால் அது அற்புதமானது. ஆனால் பெரும்பாலான வீடுகள் அப்படி இருக்கும் என்று நமக்கு நம்பிக்கையில்லை. கொஞ்சம் சாம்பார் வாசனை வந்தாலே போதும், உங்கள் சாதனாவை மறந்து விடுவீர்கள்! ஆசிரமத்தில் இப்படி கட்டமைப்பு வசதிகளை நாம் ஏற்படுத்துவது நீங்கள் இங்கே வந்து இந்த சூழலை நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.

நீங்கள் விழித்திருந்தாலும் சரி, உறக்கத்தில் இருந்தாலும் சரி, உணவு அருந்திக்கொண்டிருந்தாலும் சரி, கழிப்பறையில் அமர்ந்திருந்தாலும் சரி, உங்கள் ஆன்மீக செயல்முறை எப்போதும் உயிர்ப்புடன் நடப்பதை உறுதி செய்து கொள்ளவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் உருவாக்கப்படுகிறது. உங்கள் உடலுக்கு மட்டுமே ஓய்வுதேவை, மற்றவை எல்லாம், உங்கள் சாதனா உட்பட, எப்போதும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.

ஆசிரியர் குறிப்பு:

ஈஷா யோக மையத்தில் சாதனா பாதை பற்றிய மேலும் விவரங்களுக்குisha.sadhguru.org/sadhanapada என்ற வலைத்தளத்தை பார்க்கவும். அலைபேசி வழியாக தகவல் பெற 83000 98777 எண்ணில் அழைக்கவும்.