வாழ்வில் நடக்கும் பலவற்றிற்கு ஒரு பழமொழியை உதாரணமாகவோ, காரணமாகவோ சொல்வது நம் பழக்கத்தில் ஊறிய ஒன்று. பல நேரங்களில் இந்தப் பழமொழிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, நாம் வாழ்வை அணுகும் முறையும் தவறாகி விடுகிறது. இதற்கு ஒரு நற்சான்று இங்கே...

சத்குரு:

எதையாவது தவிர்க்கப் பார்த்தால், அதையே சந்திக்க நேரும் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தால், இதில் ஆழமான அர்த்தம் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆசைப்பட்டால், அது பிகு பண்ணிக் கொள்ளும். கவனிக்காமல் விட்டால் அது தானாகவே வந்து மடியில் விழும் என்பது தவறான சித்தாந்தம்.

பொதுவாகவே மனித மனம் விசித்திரமானது. எதையாவது நினைக்கக் கூடாது என்று கட்டளையிட்டால், அதையேதான் நினைத்துக் கொண்டிருக்கும். யாரையாவது மறந்துவிட வேண்டும் என்ற முயற்சி செய்தால், அவர் முகம்தான் மனம் முழுவதும் நிறைந்திருக்கும். எந்த விளக்குக் கம்பத்தில் மோதக்கூடாது என்று நினைத்து வண்டியை ஓட்டுகிறோமோ, அந்த கம்பத்தை நோக்கியே வண்டி போகும்.

கவனமாக செயல்பட்டால், இந்த நிலையை மாற்ற முடியும்.

அதே சமயம் ஆசைப்படுவது கிடைக்க வேண்டுமானால், அதை அலட்சியம் செய்ய வேண்டும் என்ற அர்த்தத்தில் இது சொல்லப்பட்டிருந்தால், மிகத் தவறானது.

ஆசைப்பட்டால், அது பிகு பண்ணிக் கொள்ளும். கவனிக்காமல் விட்டால் அது தானாகவே வந்து மடியில் விழும் என்பது தவறான சித்தாந்தம்.

வாழ்க்கையை அதன் போக்கில் விட்டால், உங்களுக்கு நிறைவு கிடைக்காது. ஆசைப்பட்டதை அலட்சியம் செய்துவிட்டு, கிடைத்ததை வைத்துக் கொண்டு திருப்தியடைய வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் ஆசைப்படாத ஒன்று கிடைத்தால் எப்படி உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும்? ஆசைப்படாதபோது, உலகின் மிகப் பெரிய பொக்கிஷம் கிடைத்தால்கூட அது உங்களுக்கு நிறைவைத் தராது. தேவையில்லை என்று நினைப்பது கையில் வந்து சேர்ந்தால், அது வேதனையைத்தான் தரக்கூடும்.

அநாவசியமாகக் குழப்பிக் கொள்ளாமல், கருத்தூன்றி உங்களால் தெளிவாக சிந்திக்க முடிந்தால், ஆசைப்பட்டதை அடையும் வழிமுறைகள் உங்களுக்குப் புலப்படும். அதை நோக்கிச் செயல்படும் திட்டங்கள் விரியும். அந்த முனைப்பு ஆசைப்படுவதைக் கொண்டு வந்து சேர்க்கும். மனதின் இந்த நிலையைத்தான் கல்பவிருக்ஷம் என்று சொல்வார்கள்.

ஆசைப்படுங்கள்; அடையுங்கள்.