பிரசூன் ஜோஷி: சத்குரு, வாழ்க்கையில் எண்கள் இல்லாமல் இருந்திருந்தால், அது இன்னும் மேலான வாழ்க்கையாக இருந்திருக்குமா? வயது தெரியாது, நேரம் தெரியாது, எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று தெரியாது. அப்போது இயற்கையுடனும் வாழ்க்கையுடனும் இன்னும் சிறப்பாக இசைந்திருப்பேனா?

சத்குரு:

எண்கள் உங்கள் வயதைப் பற்றியது மட்டுமல்ல, நேரம் பற்றியதும், உறங்கி விழிப்பதும் பற்றியது மட்டுமல்ல - "நீங்கள்", "நான்" என்பதே இரண்டு எண்கள்தான்.

நமஸ்காரம் பிரசூன். நீங்கள் வார்த்தைகளில் மாயாஜாலம் செய்பவர், உங்களுக்கு எண்கள் பிடிக்காது! "நீங்களும் நானும்" என்று சொல்லிவிட்டாலே அதில் எண்ணிக்கை வந்துவிடுகிறது. "நான்" என்று சொன்னால்கூட, அதில் 'ஒன்று' இருக்கிறது. ஒன்று இருந்தால், பிறகு பத்தும் நூறும் ஆயிரமும் கோடியும் வருவது இயற்கையான விளைவே. எண்கள் உங்கள் வயதைப் பற்றியது மட்டுமல்ல, நேரம் பற்றியதும், உறங்கி விழிப்பதும் பற்றியது மட்டுமல்ல - "நீங்கள்", "நான்" என்பதே இரண்டு எண்கள்தான்.

"நான்" என்று சொல்லிவிட்டால், நீங்கள் ஏற்கனவே ஒரு எண்ணை உருவாக்கிவிட்டீர்கள். எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க ஒரே நிலை, "ஷூன்ய" என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் யோகநிலையில் இருந்தால், நீங்கள் "ஷி-வா"வாக இருக்கிறீர்கள், அதாவது "எது இல்லையோ அது"வாக, அல்லது "ஷூன்ய" நிலையில் இருக்கிறீர்கள், அதாவது நீங்கள் இல்லை என்பதே பொருள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"இருக்கும் ஒன்றிற்குத்தான்" எண்ணிக்கை இருக்கிறது, "எது இல்லையோ அதற்கு" எண்கள் இருக்கமுடியாது.

"யோகா" என்ற சொல்லுக்கு சங்கமம் என்று பொருள். உங்கள் தனிப்பட்ட தன்மையின் எல்லைகளை அழிப்பதற்கான வழிமுறைகளை வழங்கும் அறிவியலிது. அதாவது அடிப்படையான, முதல் எண்ணான ஒன்று, அதாவது "நான்" என்பது அழிக்கப்படுகிறது. ஒன்றை நீக்கிவிட்டால், லட்சமும், கோடியும், பல்லாயிரம் கோடியும் அர்த்தமில்லாமல் போகும் - எல்லாம் பூஜ்ஜியமாக இருக்கும். சங்கமம் என்றால் "நீங்களும் நானும்" என்பது இல்லை, "பல" என்பது இல்லை. எல்லாம் ஒன்றாக இருக்கிறது, ஆனால் உண்மையில் அந்த ஒன்றும் இல்லை! இதனை பலவிதங்களில் குறிக்கிறார்கள். இதனை "ஷ¨ன்யா" அல்லது "ஷி-வா" என்கிறார்கள். "இருக்கும் ஒன்றிற்குத்தான்" எண்ணிக்கை இருக்கிறது, "எது இல்லையோ அதற்கு" எண்கள் இருக்கமுடியாது.

பொருள்நிலையிலான இருப்பின் இயற்கையான விளைவே எண்கள், ஏனென்றால் பொருள்நிலையிலான இருப்பிற்கு எல்லைகள் இருக்கின்றன. "நீங்களும் நானும்" இருப்பது, எதை 'நீங்கள்' என்று கருதுகிறீர்களோ அதற்கு உடலளவிலும் மனதளவிலும் உள்ள எல்லையாலும், 'நான்' என்று நீங்கள் கருதும் எல்லையாலும்தான். இதில் இரண்டு எண்கள் உள்ளன. அதற்குமேல் இது வெறும் கூட்டலும் பெருக்கலும்தான்.

முழுமையான யோகநிலை அல்லது சங்கமத்தில் இருந்தால் மட்டுமே எண்களில்லா இருப்பு சாத்தியமாகும். எனது வாழ்க்கையின் முயற்சியே இதுதான் - எண்களில்லா அந்த அனுபவத்திற்கு மக்களை எடுத்துச்செல்வது!

பொருள்நிலையிலான இருப்பை ஒருவர் கடந்தால் மட்டுமே, எண்களில்லா இருப்பு இருக்கிறது. உண்மையான சங்கமம் நிகழ்ந்தால், அது எல்லாவற்றையும் ஒன்றாக்குவதில்லை, ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது. ஏதோவொன்று எல்லையில்லாமல் இருக்கிறது என்று நாம் சொன்னால், அது எண்களில்லாமல் இருக்கிறது என்றும் சொல்கிறோம். எல்லைகள் இல்லை என்றால் ஒன்றும் இல்லை, இரண்டும் இல்லை. முழுமையான யோகநிலை அல்லது சங்கமத்தில் இருந்தால் மட்டுமே எண்களில்லா இருப்பு சாத்தியமாகும். எனது வாழ்க்கையின் முயற்சியே இதுதான் - எண்களில்லா அந்த அனுபவத்திற்கு மக்களை எடுத்துச்செல்வது!

ஆன்மீகம் என்றால் எண்களில்லாத இருப்பு.

வார்த்தைகளின் மாயாஜாலம் போலவே, கணிதத்தின் வடிவிலான எண்களின் மாயாஜாலமும் அழகானதுதான். வார்த்தைகளும் எண்களும் இருவேறு விஷயங்களில்லை. ஒரு வார்த்தை இருப்பதால், பல வார்த்தைகள் இருக்கமுடியும். அதேபோல ஒரு எண் இருப்பதால், பல எண்கள் இருக்கமுடியும். இவை அனைத்தும் பொருள்நிலையிலான இருப்பின் விளைவுகளே. பொருள்தன்மையை ஒருவர் கடந்தால், அப்போது நாம் மிகவும் தவறாக பயன்படுத்தப்படும் சொல்லான "ஆன்மீகம்" எனும் சொல்லை பயன்படுத்துவோம். ஆன்மீகம் என்றால் எண்களில்லாத இருப்பு.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

 

YAT18_Newsletter-650x120