2018ஆம் ஆண்டு முழுவதும் சுற்றிச் சுழலும் பம்பரமாக நாடுவிட்டு நாடு இடையறாது உலகமுழுக்க பயணித்த சத்குரு அவர்கள், தனது பயணத்தில் ஐநா சபையில் உலக தண்ணீர் தினத்தில் ஒரு குழு விவாதத்திலும், வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டோல் ஹில் எனும் இடத்தில் அமெரிக்க-இந்திய கூட்டு தொலைநோக்கு திட்டத்திற்கான மாநாட்டிலும் கலந்துகொண்டார்; உலக யோகா தினத்தன்று உறைபனி நிறைந்த சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். மாஸ்கோ செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற உலக கால்பந்து போட்டியும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டது. Youth &Truth எனப்படும் இளைஞர்களுக்கான முன்னெடுப்பில் ஒரு மாதகால தொடர் பயணத்தில் இந்தியா முழுக்க பல்வேறு கல்வி நிறுவனங்களில் உரையாற்றினார். பாரிசிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் அமைதி, நரம்பியல் அறிவியல் மற்றும் கல்வி ஆகிய விஷயங்கள் குறித்து சிறப்புரையாற்றுதற்காக சத்குரு அழைக்கப்பட்டிருந்தார். மேலும், அஸர்பைஜான் மற்றும் உக்ரைன் நாட்டிற்கு முதன்முதலாக சத்குருவின் வருகை அமைந்திருந்தது! இவ்வாறு இங்குமங்கும் எங்கெங்குமென இடைவெளியில்லாமல் சத்குருவின் விஜயம் தொடர்ந்தது.

உங்கள் நேரத்தின் அருமை கருதி நாங்கள் இங்கே 2018ன் சில முக்கிய பதிவுகளைத் தொகுத்து வழங்குகிறோம். இதில் நீங்கள் பல்வேறு வகையிலான கோணங்களில் சத்குரு வழங்கியுள்ள ஆழமிக்க கருத்துக்கள் அடங்கிய ஒரு கலவையான பதிவுகளை படித்து பயன்பெறலாம்...

டாப் 10 கட்டுரைகள்

"உடலுறவு பற்றி அதிகம் சிந்திப்பது சரிதானா?" - சத்குரு பதில்

உடலுறவு பற்றிய சிந்தனையிலேயே இருப்பது குறித்து கேட்கப்பட்ட போது, மனிதகுலத்தின் பெரும்பகுதி உடலுறவைத் தேடிச்செல்வதும் தவிர்ப்பதுமான போக்கில் ஏன் இருக்கிறது என்று சத்குரு விளக்குகிறார்.

நான் மறைந்த பிறகு..

சத்குரு தன் உடலை விட்டபின் என்ன நடக்கும் என்ற ஐயத்தைக் களைவதோடு, சத்குருவுடன் தொடர்பில் வந்தவர்கள் நிலை குறித்த ஐயத்தையும் களைகிறார். சத்குரு சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.

குரு பௌர்ணமி - உலகின் முதல் குரு உருவான திருநாள்

முழுமதி வானில் தவழும் நாளான குரு பௌர்ணமி நாள், ஆதியோகி ஆதிகுருவாக அமர்ந்து முதன்முதலில் சப்தரிஷிகளுக்கு ஞானத்தைப் பரிமாறிய நாளாக கொண்டாடப்படுகிறது.

கடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்!

கடுக்காய் எனும் அற்புத மூலிகையை அன்றாடம் உட்கொன்டு, வயோதிகம் தாண்டியும் இளமைத் துடிப்போடு ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை உமையாள் பாட்டியிடம் கேட்டறியலாம் வாங்க!

தினமும் யோகா செய்ய போராட்டமா?

தினமும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் செய்யவேண்டிய எளிய காரியம் என்ன? சத்குருவிடம் கேட்டபோது...

சர்க்கரை வியாதிக்கு மருந்து இனி தேவையில்லை!

இரு தோழிகள் பேசுகின்ற உரையாடல், ஈஷா லைஃப் மூலமாக ஆரோக்கியமான வழியில் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் வழியை நமக்கு அறிவிவிக்கிறது!

ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்கிறீர்கள் சத்குரு?

சத்குருவிடம் அவர் ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்கிறார் என்று மாணவர்கள் கேட்டதற்கு சத்குரு விளக்கமளித்தார்.

யோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்!

சொகுசு காரின் சஸ்பென்ஷனுடன் முதுகுத்தண்டை ஒப்பிட்டு, ஹட யோகாவில் முதுகுத்தண்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை பேசும் சத்குரு, மேலும் பல சூட்சும விஷயங்களையும் விளக்குகிறார்!

அகஸ்தியர் அதிசய மனிதரா? உங்களைப் போன்றவரா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு தமிழராக தென்னகத்தில் ஆன்மீக வளம்சேர்த்த அகஸ்தியரைப் போல் ஒருவர் ஆக நினைத்தால், அது சாத்தியமா?

புலியின் பாதங்களை வேண்டிய சிவ பக்தர்!

புலிப்பாதர் என்ற யோகி சிவனிடம் தனக்காக ஒரு விநோத வேண்டுதலை முன்வைக்கிறார்…! தான் கொண்ட சிவபக்தியின் காரணமாக அவர் வேண்டியது என்ன என்பதை இங்கே படித்தறியலாம்!

டாப் 10 வீடியோக்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

டாப் 10 குரு வாசகங்கள்

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal

 

2018-top10-guruvasagangal-11

ஆசிரியர் குறிப்பு : சத்குரு App இன்னும் டவுன்லோட் செய்யவில்லையென்றால் இப்போதே டவுன்லோட் செய்யுங்கள். வழிகாட்டுதலுடன் கூடிய யோகப் பயிற்சிகள் மற்றும் தியானங்கள், ஈஷா நிகழ்வுகள் மற்றும் யோகா நிகழ்ச்சிகளின் பட்டியல் ஆகிவற்றோடு சத்குருவின் அனைத்து கட்டுரைகள் குரு வாசகங்கள் வீடியோக்கள் மற்றும் ட்வீட்டுக்குள் ஆகியவற்றை இதன்மூலம் பெற முடியும். இந்த App உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பயன்படும் என நீங்கள் நினைத்தால் அவர்களுக்கும் Linkஐ அனுப்பலாம்!