பில்வா – சிவபக்தன்

சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின் சட்டதிட்டங்களுக்கு சிறிதும் உட்படாதவன். அவன் வாழ்க்கை முற்றிலும் வேறு விதமானது. நம் பாரம்பரியத்தில் ஒரு பழக்கம் உண்டு. விடிகாலை வேளையில் இருட்டு முழுவதுமாய் கலைந்திராத நேரத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நம் ஊரின் வழியே மத்தளம் அடித்து மக்களை எழுப்பியவாறு சும்மா நடந்து செல்வார்கள். அப்படிச் செல்லும்போது, உள்ளுணர்வில் அவர்கள் ஏதேனும் உணர்ந்தால் அதை சொல்லிச் செல்வார்கள். இல்லையெனில் கடவுளைப் போற்றிப் பாடியபடி சென்று விடுவார்கள். சைவ மரபில் வந்த இவர்களில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்தவர்கள் பாம்பாட்டியாகவும் இருந்தார்கள்.

சமுதாயத்தின் கட்டமைப்பிற்குள் அவனால் பொருந்த முடியவில்லை என்பதால், அவனை கலகக்காரன் என்று முத்திரை குத்தினர். இப்படி அவன் செய்த பல கலகங்களில் ஒன்று, ஜாதி-மத பிரிவினையை ஏற்க மறுத்தது. ஜாதி-மத பிரிவினையை சட்டை செய்யாமல் அவன் செய்த ஒரு செயலுக்கு, இளைஞன் என்றும் பாராமல், மரத்தில் கட்டி வைத்து பாம்பை கொத்தச் செய்து அவனைக் கொன்றனர்...

இப்பழங்குடி இனத்தில் தோன்றிய பில்வா ஒரு கைதேர்ந்த பாம்பாட்டி. அதில் அவனுக்கு அதீத விருப்பமும் ஆழமான ஈடுபாடும் இருந்தது. வாழ்வை முழுமையாக நேசித்து, முழுமையாய் வாழும் மனிதர்கள் இவர்கள். பணம், பொருள் என எதையும் இவர்கள் சேர்த்துவைக்க மாட்டார்கள். செல்வம், சொத்து போன்றவை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதைப் பற்றிய எண்ணமே அவர்களுக்கு இருக்காது. "வாழ்வதே போதும்" என்று அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள். ஆனால், அவர்கள் வாழ்வில் "சிவன்" மிக முக்கியமான அங்கமாக இருப்பார். பில்வாவிற்கு பாம்பு என்றால் உயிர். விஷப்பிராணிகளை நேசிக்கவேண்டும் என்றால், நீங்கள் மிக வித்தியாசமான மனிதராக இருக்கவேண்டும். பாம்பை முத்தமிட வேண்டுமெனில், அதற்கு அதீத மனோதைரியம் வேண்டும். அன்புதான் எல்லாம் என்றிருப்பவருக்கு, மற்றவை அனைத்தும் இரண்டாம் பட்சம்தான். அவ்வளவு ஏன், உயிரோடு இருப்பதும் கூட அவருக்கு இரண்டாம் பட்சம்தான். பில்வாவும் அப்படிப்பட்ட மனிதன்தான். சமுதாயத்தின் கட்டமைப்பிற்குள் அவனால் பொருந்த முடியவில்லை என்பதால், அவனை கலகக்காரன் என்று முத்திரை குத்தினர். இப்படி அவன் செய்த பல கலகங்களில் ஒன்று, ஜாதி-மத பிரிவினையை ஏற்க மறுத்தது. ஜாதி-மத பிரிவினையை சட்டை செய்யாமல் அவன் செய்த ஒரு செயலுக்கு, இளைஞன் என்றும் பாராமல், மரத்தில் கட்டி வைத்து பாம்பை கொத்தச் செய்து அவனைக் கொன்றனர்.

விஷம் அவன் உடல் முழுவதும் பரவிவிட்ட நிலையில், மரணத்திற்கு சில நிமிடங்களே மீதமிருந்தது. மரத்தோடு கட்டப்பட்டு வேறெதுவும் செய்யமுடியாத அந்த சூழ்நிலையில், "மூச்சை கவனிப்பது" தானாகவே நடந்தது. இதை விழிப்புணர்வோடு அவன் செய்தான் என்பதைவிட, இது தன்னிச்சையாக நடந்தது என்றே சொல்லவேண்டும். இதை ஆன்மீக சாதனா என்று சொல்வதை விட, அருள் என்றே சொல்லவேண்டும். குறைந்த நேரம்தான் என்றாலும், அந்த மூச்சு-கவனிப்பில் ஒரு புதிய ஆன்மீக செயல்முறை துவங்கியது.

பில்வா ஒரு தீவிர சிவபக்தன். இங்கு நாம் பயன்படுத்தும் ‘ஷம்போ’ மந்திரம் அக்காலகட்டத்தில் வழக்கத்தில் இருந்த ஒன்று. அக்காலத்தில் அவனை ஆன்மீகவாதி என்று சொல்லியிருக்க முடியாது. அவன் ஒரு பக்தன், பக்தனாக வாழ்ந்தான். ஆனால் நிஜத்தில் அவனுக்கு ஆன்மீகத்தேடுதல் இருந்ததில்லை. அவ்வாறு இருந்தும், வாழ்வின் அந்தக் கடைசி சில நொடிகளில் அவன் தன் மூச்சை கவனித்தான். நல்லபாம்பின் விஷம் இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும். இதனால் இரத்த சுழற்சி பாதிக்கப்படுவதோடு, மூச்சுத்திணறலும் ஏற்படும். இரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்க அதிகரிக்க, இரத்த ஓட்டம் மெதுமெதுவாக தடைபட்டு, பின் முழுவதுமாக நின்றுவிடும். விஷம் அவன் உடல் முழுவதும் பரவிவிட்ட நிலையில், மரணத்திற்கு சில நிமிடங்களே மீதமிருந்தது. மரத்தோடு கட்டப்பட்டு வேறெதுவும் செய்யமுடியாத அந்த சூழ்நிலையில், "மூச்சை கவனிப்பது" தானாகவே நடந்தது. இதை விழிப்புணர்வோடு அவன் செய்தான் என்பதைவிட, இது தன்னிச்சையாக நடந்தது என்றே சொல்லவேண்டும். இதை ஆன்மீக சாதனா என்று சொல்வதை விட, அருள் என்றே சொல்லவேண்டும். குறைந்த நேரம்தான் என்றாலும், அந்த மூச்சு-கவனிப்பில் ஒரு புதிய ஆன்மீக செயல்முறை துவங்கியது. அது அம்மனிதனின் எதிர்காலத்தை பலவிதங்களில் மாற்றியது. அவனின் அடுத்த பிறவியில், மிகமிகத் தீவிரமான ஆன்மீகத் தேடுதல் உடையவராய் அவர் ஆனார். சிவனே அவரின் பாதை என்றானது.