என் வாழ்நாள் பயணம்: சம்யமா

கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும், எனது குருவுக்கும் வழிகாட்டிய எனது பல பயணங்களுடன் தொடர்புபடுத்தி, சம்யமா என்னை எப்படிப் பாதித்தது என்பதைத்தான் உண்மையில் நான் கூற முடியும். "கோபத்தை உணருங்கள், ஆனால் கோபத்தோடு எழுகின்ற செயல்களை நீக்கிவிடுங்கள்." இது பல வருடங்களுக்கு முன்னால்,மிச்சிகனில் ஒரு சத்சங்கத்தில் சத்குருவால் வழங்கப்பட்ட மேற்கோள். அதை இன்னமும் நான் நினைவுபடுத்திக் கொள்கிறேன், ஏனென்றால் இத்தனை வருடங்களாக எனது சோதனையான காலங்கள் மற்றும் துன்பங்களுடன் அது நேரடியாக என்னிடம் தொடர்பு கொண்டது என்பதே உண்மை. எனது வாழ்க்கை முழுவதும் கோபத்தின் பல வடிவங்களுடன் நான் சம்பந்தப்பட்டுள்ளேன். நானும் மிக மோசமாகக் கூச்சலிடும் குடும்பத்திலிருந்து வந்ததால், நானே கத்திக் கூப்பாடு போடும் ஒரு நபராக மாறிப்போயிருந்தேன். மேலும், நான் ஒரு சட்ட வல்லுனர், இப்படியாக எல்லா இடங்களிலும் "சட்டப்படி" பயனற்ற வாதங்களை "சா¢யான" விதத்தில் மிகவும் இலாபகரமாகச் செய்ய முடிந்ததில் எனது கோபம் நன்றாகப் பட்டை தீட்டப்பட்டிருந்தது. ஒரு வக்கீலாகவும் மற்றும் எனது இயல்பின் காரணமாகவும், நான் சத்குரு அடங்கலாக,எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தினேன். உலகத்தைப் பற்றி குற்றம் குறைகளையே காணும் எனது கண்ணோட்டத்தின் மூலம், எனது கோபம் வெளிப்படையாகவே கட்டிக்காக்கப்பட்டும், செழுமையோடும் வளம் பெற்றது. அப்பட்டமாகச் சொல்லவேண்டுமென்றால் - என்னை ஒருவரும் குறுக்கிட்டது கிடையாது, மீறினால் பிரச்சனைதான் அங்கே வெடிக்கும். நல்லதுதான், சத்குரு எனக்குக் குறுக்கே வந்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருந்தேன். ஏனென்றால் அவர் என் பாதையில் அதிக தொந்தரவை ஏற்படுத்தினார். அமொ¢க்காவில்,ஏப்ரல் 2004-ஆம் வருடம் எனது கணவருடன் சத்குருவின் ஏழு நாள் ஈஷா வகுப்பில் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு, உண்மையிலேயே நான் என் கோபத்தைப் பேணிக்காக்கவில்லை. வகுப்பில் கலந்து கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு நான் பயிற்சிகளைச் செய்வதையும் அறவே நிறுத்திவிட்டேன். அந்த வகுப்பின்போது எனக்குள் நான் தொடப்பட்டிருந்தாலும், சத்குரு கூறியிருந்த வழிமுறைகளை ஏற்கவோ அல்லது முழுமையாகச் செய்யக்கூடிய தன்மையிலோ இல்லை. என்னுடைய பயிற்சிகளை நான் மறுபடியும் தொடங்குவதற்கு துன்பமான தருணங்களும், எனது தனிமை ஆழங்களிலிருந்து என்னைக் கைகொடுத்து எழுப்பவேண்டிய அவசியங்களும் தேவைப்பட்டன. இருப்பினும், அவர் வழங்கிய கிரியாக்களின் மூலம் நான் கைதூக்கிவிடப்பட்டிருந்தாலும், அவர் தொடர்பான ஒவ்வொன்றைக் குறித்தும் நான் இன்னமும் அதிகசந்தேகத்துடன் தான் இருந்துகொண்டிருந்தேன். என் வாழ்க்கையின் எதைப்பற்றியும் எனக்கு உண்மையிலேயே நன்றியுணர்வோ அல்லது உள்ளுணர்வோ இருந்ததில்லை. அதில் சத்குருவும் அடக்கம். 2004, நவம்பா¢ல் சத்குரு நடத்திய பாவஸ்பந்தனாவில் எனதுகணவருடன்கலந்துகொண்டேன். அது..... சுவாரஸ்யமாகத்தான் இருந்தது - ஆனால் பலரும் விவா¢ப்பதைப் போல அது மனதில் உத்வேகமூட்டும்படி பதியவில்லை, ஆனால் நிச்சயமாக என்னில் "சுருதி" ஏற்படுத்தியது. எனது முதல் சம்யமா 2007-ல் நடந்தது, உண்மையைக் கூறவேண்டுமென்றால், நான் அதற்கான தயார் நிலையிலேயே இல்லை. எனக்கு பல பிரச்சனைகளும், சாக்குப்போக்குகளும் - நல்லவிதமாகத்தான்- இருந்தன. ஆனால் இறுதியில் என்னுடைய முதல் சம்யமாவிற்கு நான் தயாராகவில்லை. அது என்னை அழுத்தியது. என்னுடைய முதல் சம்யமா, எனக்கான பாவஸ்பந்தனா போல, எல்லாவிதத்திலும் மிக வலிமையாக எனக்குள் இறங்கியது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட என் உறவுக்காரப் பெண்ணிடம் பேசியபோது, அவள் தனது குண்டலினியை உணர்ந்ததாகக் கூறியிருந்த நிலையில், நான் உணர்ந்ததெல்லாம் தொண்டை மற்றும் முழங்கால்களில் பின்னியெடுத்த வலியைத்தான். என்னுடைய முதல் சம்யமாவின் விளைவுகள் உடனடியாக இல்லையென்றாலும், மெல்ல மெல்ல இனிமையாக வெளிப்பட்டன. அடுத்து வந்த வாரங்களில், என்னைச் சுற்றி நிகழும் விஷயங்களை மிகவும் தீவிரமாகப் பார்க்கவும், உணரவும் தொடங்கினேன் என்பதுடன் எனது கோபம் மெதுவாக, மிக மிக மெதுவாக சூட்சுமமாகத் தேய்ந்துகொண்டிருப்பதை சட்டென்று நான் உணரத் தொடங்கினேன். எதுவுமே பொ¢ய விஷயமில்லை என்பதாகத் தோன்றியது, இருப்பினும் ஒவ்வொன்றையும் பொருட்படுத்த நேர்ந்தது.அதன் பிறகு எதிலிருந்தும் விலகி நிற்க விரும்பாமல் அல்லது முடியாமல், ஒவ்வொன்றுடனும், ஒவ்வொருவருடனும் முழுமையாகப் பிணைந்துவிட்டேன்.இந்த உணர்வு மிகவும் புதியதாக இருந்தது, மிகவும் இனிமையாக இருந்தது, எனினும் என்னை வேரறுப்பதாக இருந்தது. நான் கூறவருவது என்னவென்றால், கோபவயப்பட்ட, சுயச்சார்புடைய நான், இப்போது, மென்மையாக மாறுதலுக்குள்ளாகும் எனது ஆளுமையைக் காண்பது எனக்கு அச்சமூட்டுகிறது. ஏனென்றால் இந்த விதமான மாற்றத்துக்கு உண்மையில் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தேன் - எனக்காக யாரோ ஒருவர் அதைச் செய்திருக்கிறார். ஒரு "கடவுள்" சக்தியுடைய நடமாடும் மனிதராக அவர் இருக்கிறார் அல்லது இப்படித்தான் என்னால் நினைக்க முடிந்தது. நான் இன்னமும் அதையே நம்புகிறேன். ஆனாலும், அந்தோ பா¢தாபம், மறுபடியும் அவர் கூறியவாறு நான் சம்யமா பயிற்சிகளைச் செய்யாமலிருந்துவிட்டேன். அவரால் எனது வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருந்த எந்த நல்ல விஷயமும், அவர் கூறவந்ததை உண்மையாகவே கவனித்துப் பின்பற்றுவதற்கு என்னை உற்சாகப்படுத்தவில்லை. உண்மையில் என்னை முழுமையாக்கவும், சந்தோஷப்படுத்தவும் கூடிய அந்த விஷயங்கள் என்ன என்பதற்கான எந்தக் குறிப்பும் என்னிடம் இல்லாதபோது,மனதிற்குப்பட்ட விஷயங்களை நான் விரும்பிக்கொண்டு, என் பழைய கோட்பாடுகளிலேயே தடைப்பட்டு, மூளையில் தேங்கியிருந்தேன் - ஆனால் அவர் உணரச் செய்துவிட்டார். மூன்றாவது சம்யமாவுக்கான எனது தயா¡¢ப்பு, முதல் இரண்டிலிருந்தும் மிகவும் வேறுபட்டது. இன்னமும், சோம்பல் நிறைந்த மனிதப்பிறவியாகிய நான், சம்யமா தொடங்குவதற்கு ஆயத்தமாகவேண்டியதற்கு முந்தைய நாற்பதாவது நாள் வரை காத்திருந்தேன், ஆனால் வெளிப்படுத்த முடியாத ஏதோஒன்று என்னை ஆக்கிரமித்தது. நாற்பது நாட்கள் முடியும் தருவாயில், இந்தியாவில் உள்ள ஈஷா ஆசிரமம் செல்வதற்கான நாள் நெருங்கும்போது, உற்சாகமான மன நிலையில் என் மாமியாரிடம்கூட நான் நட்புடன் பழகத் தொடங்கியிருந்தேன். இறுதியாக, எனது இலக்கை நோக்கிய பயணத்திற்காக விமானத்தில் ஏறுவதற்குள், நான் சம்யமாவுடன் இணைவதற்கு முழுவதுமாகத் தயாரானதுடன் அதற்குப் பிறகு அதை என்னுடனேயே அமொ¢க்காவுக்குத் திரும்ப எடுத்துச் செல்வதற்கும் விருப்பமாக இருந்தேன். இந்த முறையும், எனது சம்யமா அனுபவம் கிளர்ச்சியூட்டுவதாக இல்லை, ஆனால் ஒவ்வொரு விதத்திலும் அது நம்ப முடியாத அற்புதமாக இருந்தது. இந்த முறை, அந்த நிகழ்வின் ஒவ்வொரு வழிமுறைக்குள்ளும், சத்குரு எங்களை அவரது குழந்தைகளைப் போலவே, சொல்லுக்குச் சொல் செயலுக்குச் செயல் இம்மி பிசகாமல் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். என்ன செய்யவேண்டும் என்று கணத்துக்குக் கணம் கூறப்படும் அதே நேரத்தில், எல்லா தன்னர்வத் தொண்டர்களாலும் முழுமையாகக் கவனிக்கப்பட்டும், சத்குருவின் நேரடிக் கண்காணிப்பிலும், நான் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல் உணர்ந்தேன். எந்த விதத்திலும் எனக்கான தனிமை இல்லாததுடன் ஒவ்வொரு புள்ளியிலும், நான் சாப்பிட்ட உணவிலிருந்து, எனக்கான இடைவேளைகள் மற்றும் எனது குளியலறையை நான் பயன்படுத்தும் நேரங்கள் வரை என்னுடைய நாள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. சம்யமா என்ற ஒன்றுமட்டும்தான் பொ¢தாக இருந்தது. அந்த உணர்தலுக்கு நான் வந்தபோது, அதற்கு முழுமையாக என்னை ஒப்புக்கொடுத்துவிட்டேன். இந்தப் பு¡¢தலை எட்டுவதற்கு எனக்கு இரண்டு சம்யமாவும், அளவற்ற மனப்போராட்டமும் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு வழியாக நான் இங்கே வந்தடைந்துவிட்டேன். இதுவரை அறிந்திராத மிதமிஞ்சிய களைப்பையும் அதே நேரம் குதூகலமான பெருமையையும் அனுபவித்தேன் இது எனது கடைசி சம்யமாவாக இருக்காது என்று இப்போது நம்புகிறேன். ஏனென்றால் அவர் அனுமதித்தால் நான் திரும்பவும் வரும் திட்டத்தில் இருக்கிறேன் - ஒவ்வொரு வருடமும் நான் தேறும்வரை. அவரது பெரும்பேறுடைய பேருந்தில் நான் இருக்கிறேன். எதற்காகவும் நான் என் இடத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை. அவருடைய சவா¡¢யை அனுபவிப்பதற்கு யார் விரும்பினாலும்,அதிர்ஷ்டவசமாக, அதற்கான ஏராளமான இடங்களை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.