நமது பாரம்பரியத்தில் புனித யாத்திரை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. உள்நிலை ஆனந்தத்தையும் உயிரின் மூலத்தை உணர்வதற்காக பல யோகிகள், ரிஷிகள், முனிகள் விட்டுச்சென்ற சுவடுகளை நாம் தேடிச்சென்று உணர்வதற்காகவுமே இந்தப் புனித யாத்திரைகள் நமது கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. பயணம் செய்ய சரியான வழிமுறைகள், தங்கும் வசதிகள் இல்லாத முந்தைய காலத்திலேயே மக்கள் இதை மிக உயரிய நிலையில் கையாண்டு வாழ்நாளில் ஒருமுறையேனும் புனித யாத்திரை மேற்கொண்டனர்.

இந்தியாவில் பல புனித யாத்திரை ஸ்தலங்கள் இருந்தாலும் கைலாயம், காசி மற்றும் தென்கைலாயம் என்றழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை மிக முக்கிய இடங்களாகும். எங்கெல்லாம் சிவன் மூன்றரை மாதங்களுக்கு மேல் தங்கினாரோ அவை கைலாயம் என்றழைக்கப்படும். சிவனின் பாதச்சுவடுகள் பட்ட தென்கைலாயத்திற்கு நடந்து சென்று அவரின் அருள்வேண்டி ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை சென்ற வண்ணமுள்ளனர்.

தொன்றுதொட்டு நடந்து வரும் இந்த யாத்திரைக்கு மேலும் மெருகுசேர்க்கும் விதமாக தென்கைலாய பக்திப் பேரவை வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று யாத்திரை அழைத்துச் செல்வது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலிருந்தும் பலர் இதில் பங்கெடுத்து வருகின்றனர்.

சிவாங்கா சாதனா

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் சிவாங்கா சாதனாவிற்கான தீட்சை தமிழகம் 150 இடங்களில் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 42 நாட்கள் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். சிவராத்திரி தினத்தன்று ஈஷா யோக மையம் வருகை தந்து தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவியை தரிசித்துவிட்டு அடுத்த நாளான அமாவாசை தினத்தன்று வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்வர்.

சிவாங்கா குறித்து சத்குரு

சிவன் என்றால் ஒன்றுமில்லாதது, எல்லை இல்லாதது என்று பொருள். எதுவாக இருந்தாலும் சரி எல்லாமே அந்த ஒன்றுமில்லாததிலிருந்து வந்த அங்கம்தான், நாம் அனைவரும் சிவனின் அங்கம்தான், ஆனால் நமக்கு உணர்வுப்பூர்வமாக அது புரியவில்லை. உணர்வுப்பூர்வமாக நீங்கள் இந்த ஒன்றுமில்லாததின் அங்கம் என்று புரிந்துவிட்டால் வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு. அங்கு போராட்டம் இருக்காது. உணர்வுப்பூர்வமாக அதை புரியவைக்கத்தான் இந்த 42 நாள் சாதனா. இந்த 42 நாள் சாதனா ஆரோக்கியம், வெற்றி, செல்வம் என ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் நடைபெறுகிறது.

வாழ்க்கை ஒரு முழுமையான தன்மையில் நடக்க வேண்டுமென்றால் நாம் இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக இருந்தால்தான் நடக்கும். எதற்கு நாம் சிவம் என்று சொல்கிறோமோ அதற்கு எதிர்மறையாக எது செய்தாலும் போராட்டம்தான். எப்போது நாம் சிவத்தின் அங்கமாக இருக்கிறோமோ அப்பொழுதுதான் வெற்றி, ஆரோக்கியம் எல்லாம் இயற்கையாகவே நடக்கும். புரிந்தாலும் புரியாவிட்டாலும் நாம் சிவனின் அங்கம்தானே, அதை உணர்வுப்பூர்வமாக புரியவைக்கவே இந்த 42 நாள் சாதனா.

மஹாசிவராத்திரியில் சிவாங்கா சாதனா

ஒவ்வொரு ஆண்டும் மஹாசிவராத்திரிக்கு ஈஷா யோக மையத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிவாங்கா சாதனாவிற்கு தீட்சை பெறுவர். இந்த ஆண்டு மஹாசிவராத்திரிக்கான சிவாங்கா சாதனா தீட்சை ஜனவரி 20-ம் தேதி நடக்கவுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிவாங்கா சாதனாவிற்கான வழிகாட்டுதல்கள்

  • பௌர்ணமி தினத்தன்று துவங்கி 42 நாட்களுக்கு பின்னர் சிவராத்திரி தினத்தன்று நிறைவடையும்.
  • சிவாங்காக்களுக்கு சிவ நமஸ்காரம் மற்றும் அதன் மந்திரங்களுடன் தீட்சை வழங்கப்படும்.
  • ஒரு நாளைக்கு 21 முறை பக்தியுடன் சிவ நமஸ்காரம் செய்து அதற்கான மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
  • 21 முறை பக்தியுடன் காலி வயிற்றில் சிவ நமஸ்காரம் செய்ய வேண்டும், காலை சூரிய உதயத்திற்கு முன்னால் அல்லது மாலை சூரியன் அஸ்தமித்த பிறகு செய்ய வேண்டும்.
  • சிவாங்காக்கள் கண்டிப்பாக மஹாசிவராத்திரி தினத்தன்று கோவை தியானலிங்கத்தில் இருக்க வேண்டும்.
  • இரண்டு முறை குளித்தல் அவசியம். சோப் உபயோகிப்பதற்கு பதிலாக ஸ்நானப்பொடி உபயோகிக்கலாம்.
  • கண்டிப்பாக குறைந்தபட்சம் 21 பேரிடமிருந்தாவது பிக்‌ஷை பெற்றிருக்க வேண்டும்.
  • விரதம் இருக்கும் காலகட்டத்தில் புகை பிடிப்பது, மது அருந்துவது மற்றும் அசைவ உணவு உண்பதை தவிர்க்கவும்.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். முதல் உணவு நண்பகல் 12 மணிக்குமேல் உட்கொள்ள வேண்டும். சாதனா செய்யும் காலகட்டத்தில் வெண்மை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணியவும்.

சிவாங்கா சாதனாவில் ஈடுபட்டு யாத்திரை சென்றுவந்த சிலரின் பகிர்வுகள்

ashish-shivanga-sadhana-picஆஷிஷ் குமார் : நான் பலமுறை "சிவாங்கா சாதனா" செய்துள்ளேன், முதல் முறை வெள்ளியங்கிரி மலையேறியபோது கடுமையான மூட்டு வலியால் தவித்தேன். பின்னர் வழிமுறைகளை பின்பற்றி "ஆஉம் நம ஷிவாய" உச்சாடனத்தை உச்சரித்தவாறு ஏறினேன். பின் எவ்வாறு கடைசி மலையை அடைந்தேன் என்று எனக்கு புரியவில்லை. மூன்று முறை சிவாங்கா சாதனா செய்த பிறகு இப்பொழுது வானத்தையோ, மலையையோ அல்லது மரத்தையோ எதைப் பார்த்தாலும் எனக்கு தெரியாமலேயே என் கண்களில் கண்ணீர் வருகிறது அதனுடன் ஆழமான தொடர்பு இருப்பதை உணர்கிறேன்.

கார்த்திகே சௌத்ரி : இந்த மலையேற்ற அனுபவத்தை வார்த்தைகளாshivanga-sadhana-karthickல் கூற இயலாது. இந்த மலையேற்றம் மற்றும் விரதத்தால் நான் அடைந்த சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மை விவரிக்க முடியாதது. விரதம் துவங்கிய நாட்களில் மதியம் 12 மணி வரை உணவை தவிர்ப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அதுபோல் தினமும் மிளகு மற்றும் வேப்பிலை உண்பது எனது தொண்டைக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. சீக்கிரமே அது எனது தினசரி வாழ்வில் அங்கமாகிவிட்டது. எப்போதும் சமநிலையில்லாமல் இருக்கும் எனது சாதனா களை கட்டியுள்ளது, இப்போது என்னுள் பல மாற்றங்களை உணர்கிறேன்.

நான் பலமுறை மலையேற்றம் செய்துள்ளேன், என் முந்தைய மலையேற்றங்களில் இல்லாத தீவிரத்தனமையை இதில் உணர்ந்தேன். அந்த இடத்தின் சுற்றுச்சூழல், சக்தி, அழகு எல்லாம் கனவு போல இருந்தது. பயணம் சற்று தொய்வாகும்போது "ஆஉம் நம ஷிவாய" மந்திரத்தை உச்சரிப்பேன் உடனே அங்கு ஒருவித உந்துதல் சக்தி என்னை மலை உச்சியை நோக்கி இழுத்துச்செல்லும். நான் ஆறாவது மலையிலுள்ள புல்வெளிகளில் நடக்கும்போது ஏழாவது பெரிய மலையின் கம்பீரத் தோற்றத்தைக் காண நேர்ந்தது. அப்போதுதான் ஏன் இதை தென்கைலாயம் என்றழைக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. மலையின் தோற்றம் கம்பீரமாகவும் சக்தி மிக்கதாகவும் இருந்தது. மலை உச்சியை அடைந்தபின் எனது உடலின் முழு சக்தியும் உச்சத்தில் இருந்ததை உணர்ந்தேன். திரும்பி வருவதற்கு மனமில்லாமல் திரும்பி வந்தேன். கால் சற்று வலித்தாலும் பயண அனுபவம் வேறு பரிணாமத்திற்கு என்னை அழைத்துச் சென்றது.

சுவப்னில்.M : வெள்ளியங்கிரிநாதர் அருளில்லாமல் சிவாங்கா விரதமிருந்து மலையேறுவது swapnil-shivanga-sadhana-picமுடியாத காரியம். உங்கள் இதயத்தில் ஒருமுறை மலை உச்சியை அடைய வேண்டும் என்று பதிவு செய்துவிட்டால் உடல் தானாக அங்கே சென்றடையும். மனதை உபயோகப்படுத்தி சிவாங்காவுக்கு பதிவு செய்து மலையேற வேண்டிய அவசியமில்லை. நமது உள்வாங்கும் தன்மை மற்றும் மலையின் சக்தியினால் எல்லா தடைகளும் நீங்கி தானாகவே மலை உச்சியை அடைய முடியும். மலை உச்சியில் சிவன் கோவில் மற்றும் சத்குரு ஸ்பாட் உள்ளது. அங்கிருக்கும் அதிர்வலை மிக அதிகம். அது உங்களின் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். கடைசி மலையேறுவது என்பது கொஞ்சம் சிரமமான ஒன்று. ஒரு அடி சறுக்கினாலும் பேராபத்தில் போய் முடியும். அந்த மலையின் சக்தி நம்மை தாங்கிப்பிடித்து எடுத்துச்செல்லும். மொத்தத்தில் முழு அனுபவமும் அருமை, வாழ்நாளில் ஒருமுறையேனும் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலையேறுவது நன்மை தரும்.

கிருஷ்ண சைதன்யா: எனது நண்பர்கள் எனக்கு தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகள் krishanchaitanya-shivanga-sadhana-picதரு ம்போது அதை வேண்டாம் என தவிர்ப்பது சற்று சிரமமாக இருக்கும். காலையில் சிவ நமஸ்காரம் செய்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அதனால் கிடைக்கும் பக்தி மற்றும் அமைதிநிலை அற்புதமானது. பிக்‌ஷாந்திக்கு சென்றது எனது அகந்தையை விடச்செய்து வாழ்க்கையை உணர்த்தியது அது ஒரு அருமையான அனுபவம். யாத்திரைக்குச் செல்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு சிவாங்கா குடிலில் குருபூஜை மற்றும் பஜனைகள் நடைபெற்றது அது எங்களைத் தீவிரமடையச் செய்தது மற்றும் குருவின் கருணையைப் பெற வழிவகுத்தது. அவரின் கருணையினால் மட்டுமே இந்த 42 நாள் விரதம் சாத்தியமானது. வெள்ளியங்கிரி ஒரு தெய்வீகமான இடம், ஏழாவது மலையைத் தொட்டபோது சொர்க்கத்தை அடைந்ததைப் போல் உணர்ந்தேன். மலையேற்றத்தை முடித்து கீழிறங்கியபோது மலையேற்றத்தின்போது ஏற்பட்ட சோர்வு சற்று இருந்தாலும் அதனால் கிடைத்த பலன் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.

தொடர்புக்கு

இமெயில்: info@shivanga.org

அலைபேசி: +91-83000 30666

உங்களின் கேள்விகளை இங்கே சமர்பிக்கவும்

தீட்சை நாள்: ஜனவரி 20, ஞாயிற்றுக் கிழமை

நிறைவு நாள்: மார்ச் 04, திங்கள் கிழமை