“நம்பிக்கை முறைகள், மதங்களிலிருந்து பொறுப்புணர்விற்கு மக்களை நகர்த்துவதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம். இந்த தலைமுறையிலேயே இதனை நிகழச் செய்வோம்.”
– சத்குரு
isha.sadhguru.org இணையதளத்திலிருந்து சத்குருவின் வீடியோக்கள் மற்றும் podcastகளை தற்சமயம் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். டவுன்லோட் செய்யலாம், காணலாம், மறுபதிவு செய்யலாம், பலவிதங்களில் உலகிற்கு கொண்டு சேர்க்கலாம்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் உள்ள விநியோக வழிகளில் (distribution channels) நீங்கள் பயன்படுத்தி, அதன்மூலம் பொருள் ஈட்டிக்கொள்ள முடியும். சில வழிகாட்டுதல்கள் உள்ளன. முக்கியமான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, விரிவான குறிப்புகள் கீழுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
பல தலைப்புகளைச் சேர்ந்த மேலும் பல பதிவுகள் விரைவில் இங்கு சேர்க்கப்படும். தொடர்பில் இருங்கள்!
பதிவுகளை தேடுவதற்கு கீழுள்ள பொத்தானை க்ளிக் செய்யவும். Wisdom பக்கத்தில், பதிவுகளை வடிகட்டுவதற்கு “பதிவுகளின் வகை ” / “content type” என்பதற்கு கீழ் “வீடியோ” என்று மாற்றி, பின்னர் அங்கே தேடல் தேர்வினை பயன்படுத்தவும்.
சில குறிப்புகள்
ஒரு பதிவை எப்படி டவுன்லோட் செய்வது
பயன்பாட்டு விதிமுறைகள்
சத்குருவின் வீடியோக்களை எந்த மொழியிலும் டப் (dub) செய்யவேண்டாம்.
சத்குருவின் வீடியோக்கள் மற்றும் podcastகளை மட்டுமே தாங்கள் பயன்படுத்த முடியும். எழுத்துப்படிகளையோ (transcripts), சத்குருவின் கட்டுரைகளையோ அல்லது பிற பதிவுகளையோ பயன்படுத்தக் கூடாது.
கருத்துப் பிறழ்வு ஏற்படுத்தாமல், வழிப்பொருள் உருவாக்காமல்:
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோக்கள், podcastகள் ஆகியவற்றை கருத்துப் பிறழ்வு ஏற்படுத்தாமல், வழிப்பொருள் உருவாக்காமல் நீங்கள் எடிட் செய்யலாம், பயன்படுத்திக் கொள்ளலாம்.
விரிவான விதிமுறைகளும் நிபந்தனைகளும் கீழே இருக்கின்றன