Contribute for Mahashivratri and Maha Annadanam at Isha Yoga Center.
Contribute for Mahashivratri and Maha Annadanam at Isha Yoga Center.
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி திருவிழாவில் இரவு முழுக்க நிகழும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. இது உடல் ஊட்டத்திற்காக மட்டும் வழங்கப்படும் உணவு என்ற அளவில் இல்லாமல், தங்கள் விருப்பத்துடன் பல தன்னார்வலர்கள் வழங்கும் உதவியால் வழங்கப்படும் ஒரு புனித அர்ப்பணிப்பாக உள்ளது. 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மகத்தான நிகழ்வை பல லட்சம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், இந்த இரவை அனுபவித்து உணர்ந்திட அழைக்கும் விதமாகவும் அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பு, நிகழ்வுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படுகிறது. ஈஷா யோக மையத்தில் நிகழும் மஹாசிவராத்திரி விழாவின் நேரடி ஒளிபரப்பு பல பிரபல தொலைக்காட்சி சேனல்களிலும், இணைய தளங்களிலும் காணக் கிடைக்கும். அன்பர்கள் இந்த மகத்தான சாத்தியங்களை அனுபவித்து உணர்ந்திடும் வகையில் தேவையான வசதிகளும் மற்ற ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
தென்கயிலாய பக்தி பேரவை என்பது, வெள்ளியங்கிரி மலைகளின் அற்புத அனுபவத்தை, அதிகமான ஆன்மீக அன்பர்களுக்கு கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள ஓர் ஆன்மீகம் சார்ந்த அறக்கட்டளை. மஹாசிவராத்திரி இரவை சத்குருவின் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்திட, ஈஷா யோக மையத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான ஆன்மீக சாதகர்களுக்கு இந்த பேரவை தனது சேவைகளை வழங்கி வருகிறது.