வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக் கூடாது, தலை சீவக்கூடாது என்று நம் வீட்டின் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது வெறும் போதனையா அல்லது இதற்கு ஏதேனும் கலாச்சாரப் பின்னணி உள்ளதா? இதை சத்குருவிடம் கேட்டபோது...

Question: உண்மையில் நான் வளரும் பருவத்தில் என்னுடைய பெற்றோர், வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக்கூடாது, சனிக்கிழமையில் புதியதாக எதுவும் வாங்கக்கூடாது போன்று பலவற்றை சொல்லிக்கொண்டிருப்பர். அவர்கள் சொன்னவை சரியா தவறா என எனக்குத் தெரியாது. சில சமயம் நான் அவற்றை பின்பற்றுவேன். ஆனால் இங்கு வந்த பின்பு சிலவற்றை என்னால் தொடர முடியவில்லை. மாலை 6 மணிக்கு பின்பு நண்பருக்கோ மற்றவருக்கோ பால் அளிப்பது போன்ற சிலவற்றை தவிர்க்க முடியவில்லை, அப்போது எனக்குள் குற்றவுணர்வு மற்றும் பயத்தை உணர்வேன். அவை சரியா தவறா என எனக்குத்தெரியவில்லை. எனக்கு அவற்றை குறித்த பயம் தெளிய வேண்டும். அவற்றிலிருந்து நான் வெளியே வரவேண்டும்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சனிக்கிழமைகளில் கடைக்குச் செல்லாதீர்கள் (சிரிப்பு)

நீங்கள் தான் இக்கிரகத்தில் திடீரென்று காலூன்றிய முதல் மனிதர் என்று வைத்துக்கொள்வோம் அப்படியென்றால் உங்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கும். திடீரென்று சூரியன் மறைந்துவிட்டது, ஒரே இருட்டு. உங்களுக்கு ஏன் என்று தெரியவில்லை, உங்களுக்கு பூமிசுற்றுகிறது எனத்தெரியவில்லை, சூரியன் கீழே இறங்கும், மீண்டும் திரும்பி வரும் என்ற விவரமெல்லாம் உங்களுக்கு தெரியாது. நீங்கள் சும்மா சுற்றி பார்க்கும்போது திடீரென்று இருட்டாகிவிட்டது. உங்களால் பார்க்க முடியவில்லை, பார்க்கமுடிந்த மற்ற உயிரினங்கள் உங்கள் மீது ஊர்கின்றன, திடீரென்று மழையும் வருகின்றது. வானத்தில் திடீரென்று “டமால், டமால்” என சப்தம் கேட்கிறது. திடீரென்று பனிப்பொழிவு.

மாந்திரீகம் பெரியளவில் கையாளப்படும் இடங்களில் நீங்கள் இருந்தால், நகங்களைப்பற்றி மிக கவனமாகவே இருக்கவேண்டும்.

இத்தனை விஷயங்களுக்கும் அப்போது உங்களிடம் விளக்கமோ, புரிதலோ இல்லை. பொதுவாக அப்போது உங்களுடைய உணர்வு என்னவாக இருக்கும். பயம், இல்லையா? இயல்பாக அதுவாகத்தான் இருக்கமுடியும்.

எனவே, எவையெல்லாம் உங்களை பயமுறுத்தியதோ அது மழையோ அல்லது சூரிய ஒளியோ அல்லது நீரோ அல்லது காற்றோ எல்லாவற்றையும் நீங்கள் வணங்குவீர்கள், “தயவு செய்து என்னை இந்த பெருங்கடலில் தள்ளிவிடாதே, தயவுகூர்ந்து என்னை கங்கையில் சேர்த்து விடாதே”.

ஆனால் இன்று 25வது மாடியில் அமர்ந்து கொண்டு ஓ! இப்போது மழைபெய்கிறதே? (சிரிப்பு) ஓ! நான் எப்படி கடைக்குச்செல்வேன், மழைபெய்கிறதே! (சிரிப்பு).

வாழ்க்கை அது போன்று இப்போது இல்லை. மழைபெய்யும் போது நீங்கள் சரியான இடத்தில் அமராவிட்டால் ஆற்றுக்குள் அடித்துச்செல்லப்படுவீர்கள்.

இயற்கையில் அப்படித்தான் இருக்கிறது இல்லையா? எனவே நிலைமை அப்படி இருந்தபோது எதைப்பார்த்தாலும் பயம் தான் வந்தது.

மெதுவாக மனிதன் எல்லாவற்றுடனும் இயைந்து என்ன செய்யலாம் என்று முயன்றான் அவனுடைய புரிதல் வளர்ந்ததால் அனைத்தையும் பற்றிய அறிவும் மலரத் தொடங்கியது, பயம் குறையத்தொடங்கியது. எதைப்பற்றி குறைவான அறிவு இருக்குமோ அதைப்பற்றி அதிகமான பயம் இருக்கும். அறிவும் பயமும் ஒன்றுக்கொன்று எதிர்மறை விகிதமுடையவை. எதைப்பற்றி அதிகமாக தெரியுமோ அதைப்பற்றி பயம் குறைவாக இருக்கும். குறைவாக அறிந்திருந்தீர்களானால் பயம் அதிகமாக இருக்கும்.

எனவே நீங்கள் சனிக்கிழமை பற்றி குறைவாகவே அறிந்துள்ளீர் (சிரிப்பு). ஆகவே தான் சனிக்கிழமைகளில் எதையும் வாங்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இவைகளுக்கு காரணங்கள் உள்ளன. சிலவற்றிற்கு அறிவியல் பூர்வமான அடித்தளமும் உள்ளது. சிலவற்றிற்கு தான். நீங்கள் பயத்துடன் கையாண்டால் ஏன் அறிவியலும் கூட முட்டாள் தனமான ஒன்று தான். பயத்துடன் கையாளும் பொழுது சில பொருத்தமானவை கூட அற்பத்தனமானவையாக ஆகிவிடும். அந்த சிற்றறிவினால் சிறு நன்மையிருப்பினும் பயத்திலிருந்து வெளிவர அதை தியாகம் செய்வது கூட நன்மையே என நான் சொல்லுவேன்.

ஆகையால் எதை பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, குற்றவுணர்ச்சியும் தேவையில்லை. ஆனால் அறிவு பூர்வமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தினமும் கடைக்குச்செல்ல வேண்டாம் (சிரிப்பு). உங்களுடைய நகத்தை எல்லா நேரமும் பற்களால் கடித்து வெட்டவும் வேண்டாம். இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது அது கெட்ட சகுணம் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதைச்செய்ய வேண்டாம். காரணம், இந்த வெள்ளிக்கிழமை நகம் வெட்டும் வேலை.... ஓ, நான் அதைப்பற்றி விவரமாக சொல்ல விரும்பவில்லை.

அதில் மாந்திரீகம் தொடர்பான காரணம் உள்ளது. மாந்திரீகம் பெரியளவில் கையாளப்படும் இடங்களில் நீங்கள் இருந்தால், நகங்களைப்பற்றி மிக கவனமாகவே இருக்கவேண்டும். நகம், முடி குறித்து மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

இந்தியாவின் சில பகுதிகளில், நீங்கள் அடுத்தவர் வீட்டிற்கு செல்லும் போது உங்கள் தலை முடியை சீவ அனுமதியில்லை. ஏனென்றால் தலைமுடி உதிரும், சிலர் இதற்காக காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அதை எடுத்து உங்களுக்கு சிலவற்றை செய்துவிடுவார்கள். பெண்கள் வெளியிடங்களில் தலைசீவ அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் வெளியில் செல்லும் போது தலையில் நன்றாக எண்ணெய் தடவி இறுக்கமான பின்னலிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைகளும் பிரச்சனைகளும் உள்ள போது இது போன்ற கவனம் மேற்கொள்ளப்பட்டது. இன்று, நீங்கள் யாருடைய வீட்டிற்கோ சென்றால் அங்கே தண்ணீர் பருகுவதில்லை, மாறாக கையில் தண்ணீர் பாட்டிலுடன் செல்கிறீகள். ஆம், இன்று நீங்கள் மாயமந்திரங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாக்டீரியா, வைரஸ் மற்றும் பலவற்றைக் கண்டு கவலை கொள்கிறீர்கள். ஆகையால் அதைப்பற்றி நீங்கள் கவனம் கொள்கிறீர்கள். சில வகையான சமூகத்திலோ, உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளிலோ நீங்கள் இல்லையென்றால் பழங்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற கவனங்கள் இன்று பொருத்தமானவை அல்ல.