மனிதன் முதலில் தாவரமாகவும் பூச்சி இனமாகவும், விலங்குகளாகவும் இருந்து பல நிலைகளையும் கடந்துதான் மனதனாகப் பிறப்பெடுக்கிறான் என சொல்லப்படுகிறது. இப்போது மனித எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கிறதே, அப்படியானால் பூச்சிகள்-விலங்குகள் எண்ணிக்கை குறைந்துவிடுமோ? இது புத்திசாலித்தனமான கேள்வியாகத் தோன்றலாம்! ஆனால், இயற்கையின் கணிதமே வேறு! ஆம், சத்குருவின் இந்த பதில் அதனை தெளிவுபடுத்துகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question:
கடந்த அரை நூற்றாண்டாக ஜனத்தொகை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. மறுபிறப்பு என ஒன்று இருந்தால், எண்ணிக்கை எவ்வாறு கூட முடியும்? அதுபோல், மனிதர்கள் மனிதர்களாக மட்டும்தான் மறுபிறப்பு எடுப்பார்களா அல்லது பிற உயிர்களாகவும் பிறப்பார்களா?

சத்குரு:

பூச்சிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படியென்றால், அவர்களில் பல பேர் தனக்கு அருகதையே இல்லாவிட்டாலும் மனிதர்களாக பதவி உய்ர்வு பெற்றுவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்? நம்மில் பலர் கொசுவைப் போல் பிறரைக் கடித்துக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கிறோம். யாரைப் பார்த்தாலும் அவர்களது இரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்ற ஆசை. பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து அவர்கள் மனிதர்கள் ஆனது தான் இதற்குக் காரணமோ? (கூட்டத்தில் சிரிப்பலை)

மனித உயிரோ அல்லது வேறு எந்த ஒரு உயிரோ எண்ணிக்கைகளின்படி நடக்கவில்லை.

மனித உயிரோ அல்லது வேறு எந்த ஒரு உயிரோ எண்ணிக்கைகளின்படி நடக்கவில்லை. ஒரு உயிரைக் கொண்டு பலகோடி உயிர்களை செய்ய முடியும். அல்லது பலகோடி உயிர்களை ஒன்றாகச் செய்துவிட முடியும். பலகோடி உயிர்களைச் செய்ய பலகோடி உயிர்கள் வேண்டும் என்ற அவசியம் இல்லை. எளிமையான கணக்குகளுக்குள் உயிரை நீங்கள் அடக்கிவிட முடியாது.

பலகோடி பக்கெட் நீரினை மானசரோவர் ஏரியிலிருந்து இறைத்தாலும் மானசரோவர் மாறாது, அதே பலகோடி பக்கெட் நீர் அங்கே இருக்கும். அந்த பலகோடி பக்கெட் நீரினை மீண்டும் மானசரோவரில் திரும்ப ஊற்றினாலும் மானசரோவர் அப்படியேதான் இருக்கும். தனித்தனி மனிதர்கள் என்பது உங்கள் மனதில் உருவாகியிருக்கும் பிரமை. இங்கிருக்கும் உடல்களை வேண்டுமானால் நீங்கள் கணித எண்ணில் அடக்கலாம், ஆனால் உயிர்களைக் கணக்கிட முடியாது... அது அப்படி வேலை செய்யாது!