ஆயுஷ்மான் குரானா: நமஸ்காரம் சத்குரு. நான் ஆயுஷ்மான் குரானா. அரசியல் சூழ்நிலைகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன், இந்தியாவின் அரசியல் சூழ்நிலை பலவிதமான மாற்றங்களுக்குத் திறந்திருக்கிறது. நாம் பன்முகத் தன்மை கொண்டவர்கள், நம்மிடம் பல கலாச்சாரங்கள், மதங்கள், நிலப்பரப்புகள், ஜாதிகள், வண்ணங்கள், இனங்கள் இருக்கின்றன. நான் வலதுசார்பு, இடதுசார்பு, இரண்டுமே ஆபத்தானது என்றே உறுதியாக நம்புகிறேன். என்னுடைய அரசியல் சார்பை நடுநிலை என்று கூறலாம். எது சரியான நிலைப்பாடு என்று நீங்கள் கருதுகிறீர்கள்? நாம் இப்படியொரு திருப்புமுனையில் இருக்கும்போது, நாம் அடுத்து எங்கு செல்லவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

சத்குரு: ஆயுஷ்மான் என்றால் நீண்டகாலம் வாழும் ஒருவர். உயிருள்ள ஜனநாயகம் என்றால், நீங்கள் எப்போதும் எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காமல் இருப்பது. அமெரிக்காவில் இப்படி மிகவும் வலுவாக நிகழ்ந்துள்ளது, அங்கு இது இருவேறு மதங்கள் போலவே ஆகிவிட்டது - நீங்கள் ஜனநாயகக் கட்சியா, அல்லது குடியரசுக் கட்சியா? அங்கு "என் தாத்தா குடியரசு கட்சி ஆதரவாளர், என் அப்பா குடியரசு கட்சி ஆதரவாளர், அதனால் நானும் குடியரசு கட்சியை ஆதரிக்கிறேன்!" என்று ஆகிவிட்டது.

நான் இடதுசாரியா, வலதுசாரியா, நடுநிலையா? இப்படி ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டால், நீங்கள் ஜனநாயகத்தை அழிப்பதோடு, மீண்டும் ஆதிவாசி வாழ்க்கை முறைக்கு இட்டுச்செல்கிறீர்கள்.

ஒருமுறை அங்கு இப்படி நடந்தது. பிரதானமாக குடியரசுக் கட்சியை ஆதரித்து வாக்களிக்கும் மக்கள் வசித்த ஒரு மாகாணத்தில், ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒருவர், அங்கு வசித்த ஒருவரிடம், "நீங்கள் ஏன் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது?" என்று கேட்டார். அதற்கு அவர், "என் தாத்தாவும் தந்தையும் குடியரசு கட்சியை ஆதரித்தனர், அதனால் நானும் குடியரசு கட்சியை ஆதரிக்கிறேன்." என்றார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவருக்கு எரிச்சலாகிவிட்டது, "உங்கள் தாத்தாவும் தந்தையும் கழுதைகளாக இருந்தால் நீங்கள் என்னவாக இருப்பீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர் "நான் குடியரசு கட்சி ஆதரவாளராக இருப்பேன்" என்றார்.

அவர்கள் பயன்படுத்தும் குறியீட்டை கவனித்திருக்கிறீர்களா? உயிருள்ள ஒரு ஜனநாயகத்தில் நீங்கள் என்றுமே எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கக்கூடாது. இதை நாம் மறந்துவிட்டோம். நம் தேசமும் அந்த திசையில்தான் சென்றுகொண்டு இருக்கிறது. "நீங்கள் இந்தப்பக்கமா அல்லது அந்தப்பக்கமா?" நான் அடுத்த தேர்தல் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. யார் எப்படி செயலாற்றுகிறார்கள் என்று பார்ப்போம், யார் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள் என்று கவனிப்போம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் இடதுசாரியா, வலதுசாரியா, நடுநிலையா? இப்படி ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டால், நீங்கள் ஜனநாயகத்தை அழிப்பதோடு, மீண்டும் ஆதிவாசி வாழ்க்கை முறைக்கு இட்டுச்செல்கிறீர்கள். "நாங்கள் இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் இந்த கூட்டத்துக்குத்தான் வாக்களிப்போம்!" என்றால் அதற்குப்பின் அங்கு ஜனநாயகமே இருக்காது.

ஜனநாயகம் என்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுக்க விரும்பும் நிலைப்பாட்டை நீங்கள் மதிப்பிடுகிறீர்கள்.

ஜனநாயகம் என்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுக்க விரும்பும் நிலைப்பாட்டை நீங்கள் மதிப்பிடுகிறீர்கள். அது ஒரு நிரந்தரமான நிலைப்பாடு இல்லை. நான் கவனிப்பதில், இப்போது அமெரிக்காவில் யார் ஜெயிக்கிறார், யார் தோற்கிறார் என்பதை நிர்ணயிப்பது, வெறும் நான்கு முதல் ஐந்து சதவிகிதம் மக்கள்தான். மற்றவர்கள் தங்கள் அரசியல் சார்பில் முடிவாக இருக்கிறார்கள்.

இந்தியாவில் இது பத்து முதல் பன்னிரண்டு சதவிகிதமாக இருக்கிறது - அதிகபட்சம் பதினைந்து சதம் - ஆனால் வரும் தேர்தலுக்குப் பிறகு நாமும் அமெரிக்காவைப் போன்ற ஒரு சதவிகிதத்தை எட்டிவிடுவோம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் சூழ்நிலை அந்த அளவு பாழாகி வருகிறது. நீங்கள் ஏதோவொரு பக்கத்தை சேர்ந்தே ஆகவேண்டும், நான் எந்த நிலைப்பாடும் எடுக்கமாட்டேன் என்று சொல்லமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்!

ஜனநாயக செயல்முறையின் மிகப்பெரிய சாதனை என்னவென்றால், ஆட்சி கைமாறுவது ரத்தம் சிந்தாமல் நடக்கிறது. நான் சொல்வதை நம்புங்கள், ஒரு குடும்பத்திற்குள் கூட, அதிக சொத்துக்கள் இருந்தால், ஆட்சி கைமாறுவது ரத்தம் சிந்தாமல் நடக்காது. ஆனால் இன்று பெரிய தேசங்களில், ஆட்சியை ஒரு குழுவிடமிருந்து மற்றொரு குழுவிற்கு ரத்தம் சிந்தாமல் நம்மால் கைமாற்ற முடிகிறது.

நான்கரை வருடங்களின் முடிவில், நான்கு முதல் ஆறு மாதகாலம் எடுத்து, என்ன நடந்துள்ளது என்று மதிப்பீடு செய்யுங்கள். இவர்கள் இன்னுமொரு வாய்ப்பு கொடுப்பதற்குத் தகுதியானவர்களா? அல்லது வேறொருவரால் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியுமா? தேசத்தின் ஒவ்வொரு பிரஜையும் கடைசி மூன்று முதல் ஆறு மாதங்களில் இதை மதிப்பீடு செய்து முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் ஆதிவாசியைப் போன்ற மனப்பான்மைக்கு மாறினால், நீங்கள் இதை பின்நோக்கி எடுத்துச் செல்லப் பார்க்கிறீர்கள். அப்போது ஆட்சி கைமாறும் ஒவ்வொரு முறையும் இரு கூட்டங்களுக்கும் இடையே போர் வெடிக்கும். இது இப்போது எந்த நிலைக்கு வந்துவிட்டது என்றால், சமூக ஊடகங்களில் கூட ஒருவரோடு ஒருவர் இடைவிடாது சண்டை போட்டுக் கொள்ளும் இணையக் கூட்டங்கள் இருக்கிறார்கள். இது ஆதிவாசிகளின் போர் போலத்தான்.

இப்படியே நீங்கள் தொடர்ந்தால் - மாறி மாறி வசவு பாடிக்கொண்டே இருந்தால் - ஒருவர் கத்தியோ துப்பாக்கியோ எடுத்து எதிர்கூட்டத்தினரை கொன்று குவிக்கத்துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஏற்கனவே வாட்ஸாப் பயன்பாடு மூலம் உங்களால் ஒரு சமுதாயத்திற்கு எதிராக தாக்குதலோ, வன்முறையோ செய்யத் தூண்டக்கூடிய நிலை வந்துவிட்டது.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் - இப்படி நான் சொல்வது எனக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தலாம் - ஆனால் ஏதோவொரு கட்சியின் உறுப்பினராகும் முறையை ரத்துசெய்துவிட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் இது ஆதிவாசிக் கூட்டம் போல ஆகிவிடுகிறது. ஒரு ஜனநாயகமாக நாம் வளர்ந்து முதிர்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதனால் ஆயுஷ்மான், நீங்கள் எந்த நிலைப்பாடும் எடுக்கக் கூடாது. நான்கரை வருடங்களின் முடிவில், நான்கு முதல் ஆறு மாதகாலம் எடுத்து, என்ன நடந்துள்ளது என்று மதிப்பீடு செய்யுங்கள். இவர்கள் இன்னுமொரு வாய்ப்பு கொடுப்பதற்குத் தகுதியானவர்களா? அல்லது வேறொருவரால் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியுமா? தேசத்தின் ஒவ்வொரு பிரஜையும் கடைசி மூன்று முதல் ஆறு மாதங்களில் இதை மதிப்பீடு செய்து முடிவெடுக்க வேண்டும்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!