அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம்

2020ல் பல கோடி மக்கள் தொகைகொண்டதாக திகழப்போகும் இந்தியாவில் 363 மில்லியனும் மேற்பட்டோர் 15 வயதிற்கு உட்பட்டோராக இருப்பர். அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவுகளின்படி...

  • 35% மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியவில்லை.
  • 60% மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல் கணக்குகள் கூட தெரியவில்லை.
  • 65% மாணவர்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அரசுப் பள்ளிகளை ஈஷா தத்தெடுத்து, அங்கு பயிலும் ஏழை கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர துணைபுரிகிறது! இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
  • யோகா, விளையாட்டு, கலை, இசை போன்றவற்றில் ஈடுபடச்செய்தல்
  • மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வழங்குதல்
  • அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு குழந்தையிடமும் இயல்பான மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தூண்டுதல்
  • 31 பள்ளிகளைச் சேர்ந்த 28,000 குழந்தைகள் இத்திட்டத்தினால் பயனடைந்திருக்கிறார்கள்.
  • 170 ஆசிரியர்களை புதிதாக நியமித்ததன் மூலம் 70:1 என்ற மாணவர்கள்-ஆசிரியர் விகிதத்திலிருந்து 40:1 அளவிற்கு விகிதாச்சாரம் மேம்பட்டுள்ளது.
  • 71% (3,548 மாணவர்கள்) மெதுவாகக் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
  • தன்னம்பிக்கை உருவாக்குதல் மற்றும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவிரும்பக்கூடிய மற்றும் சமூகத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கக் கூடிய மாணவர்கள் சிறப்பாக செயல்படுதல்