சத்குரு: யோக பரம்பரையில், சிவனை கடவுளாக வழிபடுவதில்லை, ஆனால் யோக விஞானத்தை உருவாக்கிய ஆதியோகி – முதலாவது யோகி எனவும், ஆதி குரு – முதல் குருவாகவும் from whom the yogic sciences originated. பார்க்கப்படுகிறார். சிவா யோக, விஞ்ஞானத்தை பரிமாறும் பொழுது, அவர் வெவ்வேறு மொழிகளில் பேசியதால், என்ன, ஏது என்பது புரியாமல், மக்கள் குழம்பிப் போனார்கள்.

பார்வதிதான் அவருடைய முதல் சீடர். பார்வதிக்கு ஞான உபதேசம் செய்யும் பொழுது, அவளுக்கு யோகத்தை ஒரு விதமாக பரிமாரினார். பார்வதி மிகவும் தீவிரமாக, எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதைக் கற்றுக்கொள்ள நினைத்தார். அதனால் அது என்ன விதம் என்று கேட்டார். அவர் சிரித்த படி, “வா, வந்து என் மடியில் உட்கார்” என்றார். இதை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு பெண்ணை மடியில் உட்கார வைக்க ஒரு ஆணின் தந்திரமாகத் தெரியலாம், ஆனால் அவர் மடியில் மட்டும் இடம் தர வில்லை, தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டார்.

ஒருவரை தன்னுள் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், உங்களில் ஒரு பாதியை விட வேண்டும். ஒருவர் அப்படியே இருந்து கொண்டு, மற்றொருவரை ஏற்றுக்கொள்வது கஷ்டம். ஆனால் சிவா பார்வதியை தன்னுள் பாதியாக ஏற்றுக்கொண்டதால், அவளால் முக்தி அடைய முடிந்தது.

ஆனால் சப்தரிஷிகள் என இன்றும் அழைக்கப்படும் அந்த ஏழு சீடர்கள் வந்த பொழுது, உண்மையை உணர்வதென்பது ஏதோ மிக கடினமான, வெகு தூரத்தில் உள்ள ஒரு விஷயம் போல பேசினார் அவர். நுணுக்கமான அப்பியாசங்கள், விதவிதமான சாதனைகள் என்று ஆச்சரியகரமான விஷயங்களை வெளிப்படுத்தினார்.

சிவாவின் நெருங்கிய நண்பர்களான ‘பூதகணங்கள்’ வந்த பொழுது, அவர்களை மடியில் உட்காரவோ, அல்லது சாதனைகளையோ சொல்லிக் கொடுக்கவில்லை. மாறாக எல்லோருமாக சேர்ந்து பருகலாம் வாருங்கள் என்றார். எல்லோரும் சேர்ந்து பருகி, ஒருவித மயக்க நிலையில், ஆடி பாடி, ஒன்றாக மகிழ்ந்திருந்தார்கள். யோகம் என்பதே இதுதானே?

சிவா யோகத்தை பரிமாறும்பொழுது வெவ்வேறு விதமான மொழிகளில் பேசினார் ஏனென்றால் உண்மையை நேரடியாக யோகத்தினால் புரிய வைக்க இயலாது. யோகம் என்பது எதிரே அமர்ந்திருக்கும் நபரை பொறுத்தது. கடவுளை நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது, மனிதனைத்தான் புரிந்து கொள்ள முடியும், ஏனென்றால் அவன்தான் பிரச்சினை.

உங்களால்தான் எந்த ஒரு சாத்தியக் கூற்றையும், சிறு சிறு தன்மைகளையும் ஒரு பெரிய சோகமாகவோ அல்லது மிகப் பெரிய கொண்டாட்டமாகவோ மாற்ற முடியும். ஒரு பார்வை - கோணத்தின் சிறிய மாற்றத்தால், ஒரு விஷயத்தில் பெரும் மாற்றத்தை உணர முடியும்.

அதனால்தான் மேலே பார்க்காமல் உள் நோக்கி பார்க்க வேண்டும். யோக வழியை பின்பற்றி, ஒரு வழிமுறையை கையாண்டால், மனிதனால் தனது சக்தியை ஒருமுகப்படுத்தி, தன்னுடைய முழு ஆற்றலை உணர முடியும்.