கடந்த சில வருடத்தில் இந்தியா சிறப்பான மாற்றங்களைக் கண்டு வளர்ந்துவந்தாலும், தேசத்தின் பெரும்பாலான நிலையில் அடிப்படையான விஷயங்களில் இன்னும் வளர்ச்சி என்பது நிகழவில்லை என்பதே நிதர்சனம். இந்தியாவின் பெரும்பாலான மக்களின் கண்களின் வழியாக எதிர்கால நிலையை நாம் உற்றுநோக்கும்போது அங்கு மகிழ்ச்சிகரமான அறிகுறிகள் எதுவும் புலப்படுவதில்லை! இந்நிலை மாற வேண்டுமென்றால், நல்வாழ்வும் வளமும் தேசத்திலிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தாக வேண்டுமென்றால், தரமான கல்வி என்பது அவசியமான ஒன்றாகும். இதுதான் முன்னேற்றமான இந்தியாவின் துருப்புச் சீட்டு!

நல்வாழ்வும் வளமும் தேசத்திலிருக்கும் கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தாக வேண்டுமென்றால், தரமான கல்வி என்பது அவசியமான ஒன்றாகும். இதுதான் முன்னேற்றமான இந்தியாவின் துருப்புச் சீட்டு!

நமது இந்திய கல்விமுறையானது இந்த குறிக்கோளில் இருந்து விலகி வெகுதூரத்தில் உள்ளது. மாணவர்களை மதிப்பெண் வாங்கும் எந்திரமாக மாற்றி, மற்ற திறமைகளை மழுங்கடிக்கும் இந்த கல்விமுறை மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் கூட்டம் இருந்தும், அதற்கேற்ற விதத்திலான வேலைத் திறமும் ஆற்றலும் மிக்க படையை உருவாக்குவதில் போராடி வருகிறோம். இது மிகவும் மோசமான நிலை. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் இவ்வளவு பெரிய மக்கள் சக்தியானது ஒரு ஆபத்தான சக்தியாக உருமாறக்கூடும்.

இப்போது சத்குருவின் வழிகாட்டுதலில் இங்கே ஒரு புதிய வாய்ப்பு திறக்கவுள்ளது!

மாற்றத்தைக் கொண்டு வரும் கலந்துரையாடல் கூட்டம்!

“Innovating India’s Schooling” எனும் இந்த கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம் ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சில தனிநபர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த சந்திப்புக் கூட்டம் நிகழவுள்ளது. சிறந்த கல்விமுறையை வகுப்பதில் புதிய சிந்தனைகளை வழங்குவது, தங்களுக்குள் இருக்கும் பார்வைகளை முன்வைத்து வழிகாட்டுவது மற்றும் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வது போன்றவற்றிற்கு ஒரு தளமாக இது அமையும். தொடர்ச்சியாக நடைபெறும் உரைகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் ஆகியவற்றால் கல்வி குறித்த பொதுவான பார்வைக் கோணத்தை இது மாற்றியமைப்பதாய் அமையும். கல்வி என்றால் அதிக வேலைசெய்யக் கூடிய திறம்படைத்த ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கும் கருவி மட்டுமல்ல, கல்வி என்பது முழுமையான பொறுப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை வடிவமைப்பதற்கானது என்ற சிந்தனையை இது உருவாக்கும். இந்த நிகழ்ச்சி கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா வித்யாவின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான அடையாளமாகவும் நிகழ்கிறது.

ஈஷா யோகா மையத்தில் துவக்க விழா!

நவம்பர் 5ஆம் தேதி நிகழ்வுள்ள இதன் துவக்க விழா நிகழ்வில், சத்குருவோடு மாண்புமிகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கான அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் உட்பட பல முன்னணி தனியார் கல்வி நிறுவன தலைவர்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக தலைவர்கள் மற்றும் துணைவேந்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க துவக்கத்தில் கலந்துகொள்ள துறைசார்ந்த ஆர்வம் மிக்க அனைவரையும் ஈஷா அழைக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கலந்துரையாடல் கூட்டத்தில் இவர்கள் கலந்துகொள்ளலாம்!

பள்ளிகளின் தலைவர்கள்

இந்த கலந்துரையாடலில் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்வதால் துறைசார்ந்த பல ஆளுமைகளோடு கலந்துரையாடும் வாய்ப்பு அமைவதோடு, இதன்மூலம் செயல்வழி கல்விமுறைகள், கல்வி சார்ந்த புதிய பார்வைகள் மற்றும் சிந்தனைகளைப் பெறமுடியும்!

CSR நிர்வாகிகள்

கடந்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் CSRன் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. CSR நிர்வாகிகள் இதன்மூலம் தற்போதைய வழிமுறைகள் மற்றும் புதிய வழிமுறைகளைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெறமுடியும். அதோடு, CSRன் புதிய துவக்கங்களுக்காக புதிய சிந்தனைகளாலும் அணுகுமுறையாலும் தங்களை சிறப்பாக தயார்ப்படுத்திக்கொள்ளலாம்.

அரசு சாரா நிறுவனங்கள் (NGOs)

கடந்த சில வருடங்களாக கல்வித்துறையில் NGOக்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இவர்களும் இந்த கலந்துரையாடல் மூலம் புதிய சிந்தனைகள் மற்றும் வழிமுறைகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பை பெறமுடியும். இதன்மூலம் தங்களின் புதிய துவக்கங்களுக்கு தங்களை கூடுதலாக மேம்படுத்திக்கொள்ளமுடியும்!

அரசுத்துறை

அரசின் கல்வித்துறையானது சிறந்த கல்வித் தரத்தோடு விளங்கும் இந்திய பள்ளிகளின் திறம்வாய்ந்த, அனுபவம் மிக்க பல குழுக்கள் மற்றும் தனியார்களோடு கலந்துரையாடும் வாய்ப்பை இங்கே பெறமுடியும். இதன்மூலம் அரசு கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் புரிந்துகொள்ளும் நல்லதொரு வாய்ப்பாக இது அமையும்!

நிகழ்ச்சிக்கு இங்கே பதிவு செய்யலாம்.

தொடர்புக்கு:

இ-மெயில்: conference@ishavidhya.org
அல்லது அழையுங்கள் +91 9489045115, +91 9489045225

நிகழ்ச்சியை வழங்குபவர்:
karadi-path-company-logo-single-line-bold