29ம் நாள். 15வது மாநிலம். உத்திரகாண்ட். நேற்றிரவு பதஞ்சலி யோகபீடத்தில் சத்குருவை வரவேற்றனர். இன்று காலை 8 மணிக்கு ஹரித்வார் கங்கை நதிக்கரையிலே பேரணி நடக்கிறது. நாளை மாலை புதுடில்லியில் இப்பேரணி நிறைவுக்கு வருகிறது.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

காலை நேர ஹரித்வார்

haridwar-5
haridwar-45-1

haridwar-6-1   haridwar-7

haridwar-46-1
haridwar-8-1

ஹரித்வாரில் பேரணி விளம்பரங்கள்

haridwar-3-1   haridwar-4

கங்கை நதிக்கரையில் காலை வேளையில் சத்குரு

haridwar-47-1

haridwar-48-1

Rally-for-rivers-at-Haridwar-11

Rally-for-rivers-at-Haridwar-10-1

பேரணியில் பொதுமக்கள்

Rally-for-rivers-at-Haridwar-18-1

Rally-for-rivers-at-Haridwar-20

Rally-for-rivers-at-Haridwar-26-1

பேரணிக்கு ஆதரவாக திரண்ட சாதுக்கள்-சந்நியாசிகள்

Rally-for-rivers-at-Haridwar-13   Rally-for-rivers-at-Haridwar-9

Rally-for-rivers-at-Haridwar-4   Rally-for-rivers-at-Haridwar-2

haridwar-63   haridwar-44-1

haridwar-62

சிறப்பு விருந்தினர்கள்

உத்திரகாண்ட் மாநில முதல்வர் மாண்புமிகு த்ரிவேந்திர சிங் ராவத் அவர்கள்,
பதஞ்சலி யோகபீடம், யோகரிஷி சுவாமி ராம்தேவ் அவர்கள்,
ரிஷிகேஷ் பரமார்த நிகேதன், சுவாமி சித்தானந்த சரஸ்வதி அவர்கள்,
ஹரிசேவா ஆசிரமம், சுவாமி ஹரிசேத்னானந்த் அவர்கள்,
நிர்மல் சாந்தி ஆசிரமம், இக்பால் சிங் மஹராஜ் அவர்கள்,
பதஞ்சலி யோகபீடம், பாலகிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள்

haridwar-49

haridwar-50

Rally-for-rivers-at-Haridwar-12

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

haridwar-52

haridwar-53

Rally-for-rivers-at-Haridwar-14

Rally-for-rivers-at-Haridwar-16

haridwar-56

Rally-for-rivers-at-Haridwar-27

ஓவியர் விலாஸ் நாயக்

ஹரித்வாரின் சித்தரிப்பு:
haridwar-51

இன்றைய நிலை: நீர் பற்றாக்குறையால், நாம் கைகள் ஏந்தி நிற்க, சொட்டு சொட்டாக மட்டுமே நீர் கிடைக்கிறது.
haridwar-39

“நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரை படிப்படியாக அமலாக்கம்:
haridwar-40

haridwar-41

படிப்படியாக பசுமைப் பரப்பு அதிகரித்து, நீர்வளம் பெருகி, நம்மை வாழவைக்கும் நதிகள் மீண்டும் பழைய அழகுடன், பொலிவுடன் ஓடத்துவங்குகிறது

haridwar-42

சுவாமி ஹரிசேத்னானந்த் அவர்கள் பேச்சு

haridwar-57

ஹரிசேவா ஆசிரமம், சுவாமி ஹரிசேத்னானந்த் அவர்கள்:

  • சத்குருவின் இப்பேரணி பற்றி எல்லோரும் அறியச் செய்யுங்கள். அப்போது நம் நதிகள், காடுகள், மரம் அனைத்தும் காப்பாற்றப்படும்.
  • இது சத்குரு அவர்களின் வேலை மட்டுமல்ல. நம் ஒவ்வொருவரின் வேலை. நாம் எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம்.
  • சத்குருவுடன் சேர்ந்து இத்திட்டப் பரிந்துரை நிறைவேற ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் செயல்படுவோம்.

இக்பால் சிங் மஹராஜ் அவர்கள் பேச்சு

haridwar-59

நிர்மல் சாந்தி ஆசிரமம், இக்பால் சிங் மஹராஜ் அவர்கள்:

  • நம் நாட்டைக் காக்கவேண்டும் என்றால், நம் இயற்கை வளங்களைக் காக்க வேண்டும். அதற்கான இந்த மாபெரும் வேள்வியை சத்குரு துவக்கி வைத்திருக்கிறார்.
  • இப்பணியில் நம் இந்திய தேசத்து சீக்கியர்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து நிற்போம். இப்போது மட்டுமல்ல, இதை நிறைவேற்றும் வரை நாங்கள் நிச்சயம் உங்களுடன் சேர்ந்து நிற்போம்.

பாலகிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் பேச்சு

haridwar-60

பதஞ்சலி யோகபீடம், பாலகிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள்:

  • சத்குரு இந்த மாபெரும் வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். இது அவருடைய பொறுப்பு மட்டுமல்ல. நம்முடையதும்தான்.
  • நமக்கு வாழ்வாதாரமான நதிகள் தாமாக அழியவில்லை, நாம்தான் அழித்திருக்கிறோம்.
  • அதனால் இதை நம் வாழ்வின் நோக்கமாக ஏற்று, நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இந்நதிகளை மீட்க வேண்டும்.
  • இந்தப் புண்ணிய பூமியில் நாம் அனைவரும் நிச்சயம் இந்த உறுதியை ஏற்கவேண்டும்.
  • அதுமட்டுமல்ல… நாங்களும், யோகபீடத்தின் குடும்பமாக இருக்கும் பல கோடி மக்களும் உங்களுடன் சேர்ந்து நிற்போம்.
  • இப்பேரணிக்கு மட்டுமல்ல, இப்பேரணியின் நோக்கம் நிறைவேறும் வரை நாங்கள் உங்களுடன் சேர்ந்து நிற்போம்.

சுவாமி சித்தானந்த சரஸ்வதி அவர்கள் பேச்சு

haridwar-61

ரிஷிகேஷ் பரமார்த நிகேதன், சுவாமி சித்தானந்த சரஸ்வதி அவர்கள்:

  • எந்த நதியின் கரையிலே நம் கலாச்சாரம் பிறந்ததோ, எதன் கரையிலே நாம் செழித்து வளர்ந்தோமோ, எதன் உபயத்தால் நமக்கு வரலாறு என்று ஒன்று இருக்கிறதோ, எதன் புண்ணியத்தில் பேச்சு, கற்றல், வளர்ச்சி என எல்லாம் பெற்றோமோ, அந்த நதி இன்று வற்றியிருக்கிறது.
  • கங்கை நதி புனிதமானது. அது தன் புனிதத்தை இழக்காது. ஆனால் நாம் அதை அழுக்காக, அசுத்தமாக்கி விட்டோம். அதனால் அதன் கரைகளிலே இன்று நாம் உறுதியேற்க வேண்டும்.
  • கங்கை அழிந்தால், இந்நாட்டு நதிகள் அழிந்தால், இந்தியாவும் அழிந்துவிடும். நதிகள் தழைத்து வளர்ந்தால், நம் நாடும் வளரும்.
  • நதியைக் காக்க, இமயத்தை காக்கவேண்டும், நம் நிலத்தைக் காக்க வேண்டும். அதற்கு மரங்கள் நடவேண்டும்.
  • இப்பேரணியின் செய்தி, இனி பிறந்தநாள் என்றாலும், வேறு விழாவாக இருந்தாலும், பண்டிகைகள் என்றாலும், எல்லாம் “பச்சை” நிறமேற்க வேண்டும். மரம் நட்டு அவற்றைக் கொண்டாடுவோம்.
  • இப்பேரணிக்குத் தேவையான உத்வேகம் உருவாகிவிட்டது. இனி தேவை தீர்வு. அந்தத் தீர்வு – நாம்தான்.
  • ஒன்றாக, ஒரே நோக்கத்தோடு, ஒற்றுமையாக நாம் ஒரே திசையில் பயணித்தால், நம்மால் முடியாதது எதுவுமில்லை.

முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் அவர்கள் பேச்சு

Rally-for-rivers-at-Haridwar-28

உத்திரகாண்ட் மாநில முதல்வர் மாண்புமிகு த்ரிவேந்திர சிங் ராவத் அவர்கள்:

  • இன்று நம் நாட்டில் மட்டும் அல்ல உலகின் பல இடங்களிலும் இருக்கும் பெரிய பிரச்சினை தண்ணீர் பற்றாக்குறை.
  • இப்பேரணி மக்கள் பேரணியாக மாறி வருகிறது. இது ஆரம்பம்தான். இதை முழு உத்வேகத்தோடு முன்னெடுத்துச் சென்று, இது நிறைவேற நாம் செயல்பட வேண்டும்.
  • எப்பொழுது நம் நாட்டின் ரிஷிகளும், முனிவர்களும் இதைக் கையில் எடுத்துவிட்டார்களோ, இனி இது நிறைவேறும் வரை அவர்கள் அதைக் கைவிட மாட்டார்கள்.
  • நாமும் இடைவிடாது அவர்கள் பின்னே சென்று, அவர்களுடன் சேர்ந்து இதை செயல்படுத்த வேண்டும்.
  • 2-3 வருடங்களில் இது நடந்துவிடாது. நாம் தினமும் உண்கிறோம், தினமும் உறங்குகிறோம். அதேபோல் அயராது தினமும் இதற்காக நாம் செயல்பட வேண்டும்.
  • நதி என்றால், நதி மட்டுமல்ல, அதன் கிளைநதிகளையும் நாம் காக்க வேண்டும்.
  • அதுமட்டுமல்ல, இன்னும் சிறிது கவனத்தோடு நாம் தண்ணீர் செலவுசெய்தால், தினம்தினம் பலகோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

யோகரிஷி சுவாமி ராம்தேவ் அவர்கள் பேச்சு

haridwar-64

பதஞ்சலி யோகபீடம், யோகரிஷி சுவாமி ராம்தேவ் அவர்கள்:

  • இந்தியாவை ஆரோக்கியமான, வளமான, செல்வச்செழிப்பு நிறைந்த பூமியாக மாற்ற சத்குரு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
  • தேசத்தை பற்றி சிந்திக்கும் சிலர் சில மணி நேரம் சிந்தித்துவிட்டு தூங்கச் செல்வர் 1-2 ஆண்டுகளுக்கு மட்டும் திட்டம் தீட்டிவிட்டு. ஆனால் சத்குரு பல நூறு ஆண்டுகளுக்கு சிந்தித்து, அதற்குத் தேவையான செயல்களிலும் இறங்குகிறார்.
  • பலரும் மரம் நடுகின்றனர், ஆனால் அதில் எத்தனை வாழ்கிறது என்று தெரியாது. இவர் 3.2 கோடி மரங்களை நட்டு அவற்றை பராமரித்து வளர்த்தும் இருக்கிறார்.
  • மரங்கள் நடுவதும், நதிகளைக் காப்பதும், இயற்கையின் ரூபத்தில் இருக்கும் அந்த தெய்வீகத்தை, சிருஷ்டிக்கும் சக்தியை ஆராதிப்பதற்கு சமானம்.
  • அடுத்த 20-25 ஆண்டுகள் நாங்களும் இதில் உங்களுடன் முழுமையாக இணைகிறோம்.
  • இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் விளைவிக்கப்போகும் நெல்லி, விளச்சி (லிச்சி), மாம்பழம், வேம்பு மற்றும் ஆயுர்வேத மூலிகை மரங்கள் ஆகியவற்றை அடிப்படை விலை கொடுத்து பதஞ்சலி நிறுவனம் பெற்றுக்கொள்ளும். இதன்மூலம் விவசாயிகளும், நம் நாடும் நிச்சயம் பெருமளவில் வளர்ச்சி பெறுவார்கள்.
  • நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த வேலை இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். நம் பாரத கலாச்சாரத்தை வளர்க்கவும் இது வழிவகுக்கும்.
  • பண்டிகைகள் அன்று, பிறந்த நாள், கல்யாண நாள் அன்று மரம் நடுங்கள் என்றார் சித்தானந்த சுவாமிகள். நாம் சாதுக்கள் என்ன செய்வது? நதியின் மீது, பூமித்தாயின் மீது, இயற்கையின் மீது அன்பு கொண்டு, ஞானிகளின் ஜயந்தி, தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளில் நாமும் மரம் நடுவோம்.
  • இங்கு நதிகளின் கரைகளில் இருக்கும் அரசாங்க நிலங்களில், (நாமும் அரசாங்க சாதுக்கள் தானே), நாம் மரம் நடுவோம், இந்த இமய மலையிலே 1 லட்சம் மரம் நடுவோம், சத்குருவிற்கும் ஹரித்வார் புண்ணிய பூமிக்கும் தக்ஷிணமாக.
  • நம் நாட்டை பசுமையாகவும், வளமாகவும் மாற்றுவோம். நம் பாரதம் முழுவதும் பழமரங்களும், மூலிகைகளும் நிறைந்திருக்கும்.
  • எங்கள் முகநூல், டிவிட்டரில் எங்களை 2 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். அதனால் அடுத்த 1-2 நாட்களில் 2-3 கோடி மிஸ்டு-கால் எளிதாக எட்டிவிடுவோம். இது தவிர்த்து, ஆஸ்தா, சன்ஸ்கார், சத்சங் என பல சேனல்கள் நம்மிடம் உள்ளன. அதுமட்டுமல்ல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் எங்கள் பதஞ்சலி பொருட்களில் "80009 80009" எண்ணைப் பதித்து, அதன்மூலமும் மிஸ்டு-கால் கிடைக்க வழிசெய்வோம்.

சத்குரு அவர்கள் பேச்சு

Rally-for-rivers-at-Haridwar-34
சத்குரு:

  • இன்றோடு 9100 கி.மீ பயணித்திருக்கிறோம். 125 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். வயது முதிர்ந்த ஒருவருக்கு, நான் நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
  • காலம் காலமாக உயிர்களை வளர்த்த மாபெரும் நதி,
    காடு, இயற்கைக்கு மருத்துவ உதவி தேவை என்பதுபோல் ஆக்கிவிட்டோம்.
  • நதி என்றால், 8 - 10 நதிகளையே மக்கள் நினைக்கின்றனர். நதிகளை பார்த்தால் மட்டும் போதாது. கிளைநதிகளை முதலில் மீட்க வேண்டும்.
  • பெங்களூருவில் 1000 ஏரிகள், 3 ஆறுகள் இருந்த காலம் போய், இன்று 81 ஏரிகள்தான் மீதமுள்ளன. அதிலும் 40 கழிவுநீரும், இரசாயனக் கழிவுகளும் நிரம்பியுள்ளது. ஆறுகள் இருந்தனவா? என்று கேட்கும் நிலையில் இருக்கிறது.
  • நம் கங்கை நதியின் 800 கிளைநதிகளில் 470 பருவகால நதியாக, வருடத்திற்கு 4 மாதங்கள் மட்டுமே ஓடுகிறது. நம் விவசாயத்தின் 33%, நம் நிலப்பரப்பில் 25% வடிநிலமாகக் கொண்ட இந்த மகத்தான நதி 44% வற்றியுள்ளது. இதன் வடிநிலத்தில் பசுமைப்பரப்பு 79% குறைந்துள்ளது. சுந்தர்லால் பஹூகுணா போல் பலரும் முயன்றும் இதைத் தடுக்க முடியவில்லை.
  • "கங்கை" என்று சொன்னாலே உணர்ச்சிவசப் படுபவர்கள் இங்கு நிறைய பேர். ஆனால் இந்த உணர்ச்சி பெருக்கம் செயலாக உருவெடுக்கவில்லையே!
  • இதற்கு உணர்ச்சித்தீவிரமோ, அரசியல் ரீதியாகவோ தீர்வு கிடைக்காது. செயல் பிறக்கவேண்டும். நம் நதிகள் மீட்கப்பட வேண்டும் - விஞ்ஞானத்தின் அடிப்படையோடு, முறையாக. அதற்குத்தான் இப்பேரணி.

இந்நிலைக்கு நாம் வந்தது எப்படி?

  • 200 ஆண்டுகளாக நாம் கொள்ளையடிக்கப் பட்டோம். நம் நாட்டில் இருந்து எதையெல்லாம் எடுத்துச் செல்லமுடியுமோ, எல்லாவற்றையும் பிடுங்கிச் சென்றார்கள்.
  • பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் உருவாக்கி, நம்மை உறுதியோடு வாழச்செய்த கலாச்சாரம், கல்வி, ஆன்மீகம் என எல்லா அமைப்புகளையும் உடைத்து எறிந்தார்கள்.
  • போதாது என்று நாடு 3 பாகங்களாக பிளவுபட்டது. தொழில், பொருளாதாரம், வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் நொடித்துப் போன சமுதாயத்தில், யுத்தத்தில் நாம் இழந்த வீரர்கள், தம் ஊரைத் தேடி பயணித்துக் கொண்டிருந்த பல்லாயிரம் மக்கள் என குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது நம் நாடு.
  • இவை ஏற்படுத்திய சமுதாய நெருக்கடி, வலி, வேதனை மிக அதிகம்.
  • பிழைப்பிற்கு வழியில்லாதபோது, சரி-தவறு பார்க்க முடியாமல் தினசரி வாழ்விற்கான போராட்டத்தில் 50 ஆண்டுகள் சென்றுவிட்டது.
  • முன்னேறும் நோக்கத்தில், கூட வருவது யார், கீழே விழுவது யார் என்று பார்க்கமுடியாத வேகத்தில் 20 ஆண்டுகள் போய்விட்டது.
  • அதைக் குறை கூறி பயனில்லை. ஆனால் இனி கவனத்துடன் நம் வளங்களைக் கையாளவில்லை என்றால், பிழைப்பும் கிடையாது, முன்னேற்றமும் கிடையாது, நாமும் கிடையாது.

Rally-for-rivers-at-Haridwar-36
உடனடியாகத் தீர்வு:

  • மரம் நடுவதுதானே தீர்வு, இதோ மரம் நடுகிறேன் என்று கிளம்புவது தீர்வாகாது. இது நல்ல காரியம். ஆனால் இது தீர்வாகாது.
  • முழு நாட்டிற்கும் ஒரு கோட்பாடு தேவை: நம் மண்ணையும் நதிகளையும் எப்படி, எந்தளவிற்கு பயன்படுத்தலாம் என்பதற்கு சட்டதிட்டங்கள் வரவேண்டும்.
  • நாம் எல்லோரும் ஒரே திசையில் பயணிக்காமல் இங்கும் அங்குமாக மரம் நடுவது பலன் தராது.
  • இந்த தேசிய கோட்பாடு வரையறுக்கப்பட்டு விட்டால், அதன்பின் நாம் இறங்கி மரம் நடவேண்டும். ஆனால் மரம் நடுவதற்குமுன் அந்த தேசிய கோட்பாடுகளும், சட்டதிட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
  • அதற்கு இன்றைய அவசியத் தேவை: மிஸ்டு-கால். இதுவரை 12 கோடியை எட்டிவிட்டோம். அக்டோபர் 30 வரை நேரம் உள்ளது. அதற்குள் 60 கோடி மிஸ்டு-கால் எட்டினோம் என்றால், இனி அரசாங்கங்கள் மாறினாலும், இத்திசையில் இருந்து அவர்கள் மாறமாட்டார்கள்.
  • நான் 30 கோடி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எப்போது பாபா ராம்தேவ் இதில் இறங்குகிறாரோ, நாம் 60 கோடி எட்டவேண்டும்.

மாணவர்கள்

Rally-for-rivers-at-Haridwar-3

சிப்பாய்கள்

Rally-for-rivers-at-Haridwar-1

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

haridwar-43

Rally-for-rivers-at-Haridwar-8

பேரணிக்கு ஆதரவு

haridwar-55

தேவை தேசிய கோட்பாடு, தானதர்மம் அல்ல

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு சத்குரு அளித்த பேட்டியின் சிறு பகுதி:

இதுவரை 3 நதிகளை மீட்கத் தேவையான உதவி செய்வதாக, 3 நிறுவனங்கள் (CSR - கூட்டாண்மை சமூகப் பொறுப்பின் கீழ்) எங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. "நதிகளை மீட்பது" ஒன்றும் தர்மக் காரியம் அல்ல. இதற்கென தனியாக கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சாலைகளை உருவாக்குவது போல். இன்னும் சொல்லப்போனால், நதிகளை மீட்பது, சாலைகள் அமைப்பதைவிட மிகமிக முக்கியமான ஒன்று. தர்மம், விழிப்புணர்வு, சேவை என மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது நடக்கட்டும். ஆனால் இதற்கென கோட்பாடுகள் தனியாக விதிக்கப்பட வேண்டும். நம் பட்ஜெட்டில் இதற்கென நிதி ஒதுக்கீடு இருக்கவேண்டும்.

இதை செயல்படுத்தினால், நம் பொருளாதாரம் பெருமளவில் மேம்படும். இப்போது ஆந்திரப் பிரதேசம் மொத்த விவசாய நிலத்தில் 50% பழ உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அதன் பொருளாதாரம் எங்கோ மேலே உயரப் போகிறது. ஏற்கெனவே அவர்களுடைய விவசாய வளர்ச்சி 27% - உலகிலேயே மிக அதிகம். காரணம், சிறிதளவு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

என்னுடைய அனுமானத்தில் இன்றைய விவசாயிகளில் 15% கூட அவர்களது பிள்ளைகள் விவசாயத்தில் இருப்பதை விரும்புவதில்லை. நீங்கள், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இருந்து இதற்கு ஒரு ஆய்வு எடுக்க வேண்டும். அதன் முடிவில் நீங்கள் சொல்லும் விழுக்காடு இதைவிடக் குறைவாக இருக்கலாம். 8,000-10,000 ஆண்டு காலமாக விவசாயம் செய்து நாம் சேகரித்த இந்த ஞானம் போல் உலகில் வேறெங்கும் கிடையாது. அதுவும் மண்ணை உணவாக்கும் இந்த வித்தை அறிந்தவர்கள், இங்குபோல் வேறெங்குமே அதிகம் இருப்பதில்லை. இன்றிருக்கும் நிலையில் அடுத்த 25-30 ஆண்டுகளில் இந்த ஞானம் முற்றிலுமாக அழிந்துவிடும்.

இங்கு ஒருவரின் கூற்றுப்படி, நாம் ஏற்கெனவே 17% உணவை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோமாம். 130 கோடி மக்கட்தொகையோடு, உணவு விளைவிக்கும் திறனையும் நாம் இழந்துவிட்டால், எப்படிபட்ட நெருக்கடியில் மாட்டிக் கொள்வோம் என்று உங்களுக்குப் புரிகிறதா? நம் மக்கட்தொகை என்ன, துபாய் அளவிற்கு கொஞ்சமா என்ன, தேவையான உணவை இறக்குமதி செய்துகொள்ள?

டிகாப்ரியோ அறக்கட்டளை பேரணிக்கு ஆதரவு

ஹாலிவுட் நடிகரான லியோனார்டோ டி காப்ரியோ அவர்களின் சமூகசேவை அறக்கட்டளை, நம் பேரணியைப் பாராட்டி டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறது: “நதிகளை மீட்க முழு தேசமும் ஒன்றிணைந்து கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்த்திராத புதுமையான பேரணி. இது உலகிற்கே ஊக்கமாக அமைய வல்லது”

புதுடில்லி நோக்கிப் பயணம்

நாளை பேரணியின் கடைசி நாள். பேரணியின் உச்சகட்டம். புதுடில்லியில் மத்திய அரசிடம் திட்டப்பரிந்துரையை பரிசீலனைக்கு ஒப்படைக்க உள்ளோம். ஹரித்வாரில் பேரணி முடிந்த சிறிது நேரத்தில் பயணமானோம். வழியில் மக்கள் ஏற்பாடு செய்திருந்த சிற்சிறு கூட்டங்களில் கலந்துகொண்டு, புதுடில்லி நோக்கி சென்று கொண்டே இருக்கிறோம்.
haridwar-67

நள்ளிரவில் புதுடில்லியை அடைந்தோம்

“இந்தியா கேட்” அருகே சத்குருவைக் காண கூடியிருக்கும் மக்கள்.
haridwar-69

haridwar-70

haridwar-71

ஹரித்வார் பேரணி - தொகுப்பு

ஹரித்வார் பேரணி - முழு வீடியோ