தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நீராதாரங்களின் நிலையும் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளன. இதற்கு கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான குறிச்சி குளமும் விதிவிலக்கல்ல. இந்த குளத்தை மீட்டெடுக்கும் பணியில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் முயற்சியெடுக்க, அப்பணியில் தற்போது தமிழக அரசு, என்.எல்.சி.இந்தியா மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவையும் இணைந்துள்ளன. சத்குரு கலந்து கொண்ட இதன் துவக்கவிழா ஜுலை 23ம் தேதி நடைபெற்றது.

கோவையின் நீர் ஆதாரமாய் திகழும் குளங்களில் குறிச்சி குளம் முக்கியமான ஒன்று. மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டு, 334 ஏக்கர் நிலப்பரப்பில் படர்ந்து விரிந்து அழகாய் காட்சியளிக்கும் குளத்தில் கோவையின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் அளவுக்கு தண்ணீர் எப்போதும் நிறைந்து இருந்தது, விவசாயம் திளைத்து கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கை திறன் மேம்பட குறிச்சி குளத்தின் பங்கு அளப்பறியதாகும். நிலத்தடி நீர்மட்டம் மேலோங்கி, விவசாயம் செழிக்க, நீருற்றும் வாய்க்கால் வரப்புமாக எப்போதும் இயற்கையாய் காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆனால் தற்போது இக்குளத்தின் நிலை கவலையளிக்கும் விதமாக உள்ளது. குளத்தின் ஆக்கிரமிப்புகளும், மக்களின் செயற்கை மீதான மோகமும், இயற்கை பற்றிய புரிதலின்மையும் பல வகைகளில் குளம் மாசுபட வழிவகுத்தது. பிளாஸ்டிக் பொருட்களும், தண்ணீரோடு கலந்த சாக்கடை நீரும், மற்றும் ஆக்கிரமிப்பால் தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பும் சேர்ந்து குறிச்சி குளம் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பயன்பெறாமல் வீணாக உள்ளது.

குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம்

இந்த நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழியிட்டதே சத்குருதான். அவரிடம் எல்லா விஷயத்திற்கும் தீர்வு இருக்கும். இந்த திட்டத்தை பற்றி சொன்னவுடன் அதை முடித்துத் தருவதாக உறுதியளித்தார்.

குறிச்சி குளத்தின் இந்த நிலை குறித்து கவலை அடைந்த சில சமூக ஆர்வலர்கள் "குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம்" என்ற அமைப்பை துவங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பின் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற அரசு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழுமம் மற்றும் ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டு, 1.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன் தொடக்க விழா ஜுலை 22 ஆம் தேதி நடைபெற்றது. திரு. டி.என்.ஹரிஹரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று நடத்திய விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. வேலுமணி அவர்கள், என்.எல்.சி இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். சரத்குமார் ஆச்சார்யா அவர்கள் மற்றும் சத்குரு அவர்களும் கலந்து கொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

விழா, மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக ஈஷா அறக்கட்டளை சார்பாக கிராம மக்களுக்கு அளிக்கப்படும் தையல் பயிற்சியில் பங்குபெற்றவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு 2017-2018ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக 10,95,450 ரூபாயினை அமைச்சர் வழங்கினார்.

மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தன் உரையை துவக்கிய திரு. ஹரிஹரன் அவர்கள், அரசுக்கு குளங்களின் மீது இருக்கும் அக்கறை குறித்து பேசினார். கோவைக்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் தமிழகத்தில் குளங்கள் தூர்வாரப்படுவதில் கோவை மூன்றாமிடத்திலிருப்பதையும் பெருமையுடன் தெரிவித்தார்.

சத்குருவுக்கு நன்றி தெரிவித்து தன் உரையை துவக்கிய என்.எல்.சி இந்தியாவின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். சரத்குமார் ஆச்சார்யா அவர்கள், "என்.எல்.சி.நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலக்கரி மற்றும் மின்சாரம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சத்குரு என்.எல்.சி யில் சத்சங்கம் எடுக்க வந்தார். அப்பொழுது குறிச்சி குளம் தொடர்பாக எங்களிடம் எடுத்துரைத்தார். பின் அதை ஒரு திட்டமாக வகுத்து இப்பொழுது அதை நிறைவேற்றும் தருவாயில் உள்ளோம்.

எங்கள் நிலக்கரி நிலையத்திலிருந்து தினமும் 14 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வழங்கப்பட்டு வருகிறது. அதைப் போல விவசாயத்திற்க்கும் நாங்கள் தண்ணீர் வழங்கி வருகிறோம்" என்று விளக்கியவர், சத்குருவின் பசுமைக்கரங்கள் திட்டத்திற்கு தன் பாராட்டை தெரிவித்ததோடு, 'நதிகளை இணைப்போம், பாரதம் காப்போம்' (பார்க்க: RallyForRivers.org) திட்டத்திற்கு சத்குரு அவர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் மிகவும் பாராட்டிப் பேசினார். இது போன்ற பல திட்டங்களுக்கு ஈஷாவுடன் மேன்மேலும் கைகோர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நதிகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும், அதற்காக கன்னியாகுமரி முதல் இமயமலை வரை நானே டிரைவ் செய்கிறேன். 15 மாநில முதல்வர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். அது இத்திட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

அமைச்சர் வேலுமணி அவர்கள் பேசுகையில், "இந்த நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழியிட்டதே சத்குருதான். அவரிடம் எல்லா விஷயத்திற்கும் தீர்வு இருக்கும். இந்த திட்டத்தை பற்றி சொன்னவுடன் அதை முடித்துத் தருவதாக உறுதியளித்தார். என்னுடைய தொண்டாமுத்தூர் தொகுதியில் மின் தகன மயானத்தை அரசுடன் இணைந்து கோவில் மாதிரி கட்டிக்கொடுத்துள்ளார்கள், இது மாதிரி தமிழ்நாட்டில் வேறு எங்கும் இருக்க சாத்தியமில்லை. மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டுவது தொடர்பாக நாங்கள் கொடுத்த நிதியோடு அவர்களும் கொஞ்சம் சேர்த்து அதை முடித்து கொடுத்தார்கள். இவ்வாறாக பல நிலைகளில் எங்களுக்கு பேருதவி செய்து வருகிறார்கள். அதற்கு சத்குருவிற்க்கு நன்றி, குறிச்சி குளம் 334 ஏக்கர். அதை 10 அடி ஆழம் வரை தோண்டி சீர்செய்ய உள்ளனர், இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நாங்கள் அதை சுற்றி நடைபாதை அமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் சீரமைப்போம். அடுத்தபடியாக செங்குளத்தையும் இதை போல் சீர்செய்து தரவேண்டும் என்று சத்குருவிடம் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்" என்றார்.

சத்குரு அவர்கள் பேசுகையில், "குறிச்சி குளம் என்ற பெயரை வைத்துவிட்டு நாம் அந்த குளத்திற்குள்ளேயே இப்போது உட்கார்ந்து இருக்கிறோம், நாம் என்ன மீனா அல்லது மனிதரா? என்று கேட்டு அனைவரும் சிரிக்க, நகைச்வையோடு தன் பேச்சை தொடர்ந்தார். மேலும் பேசுகையில், குளத்தை நாம் தூர்வாருவோம், ஆனால் குளத்திற்கு தண்ணீர் வரவேண்டும் தானே, நாம் குளத்தை சுற்றி அணை போல வீடு கட்டிவிட்டோம். இப்பகுதி மக்கள் சிறிது சிரமத்தை பொருட்படுத்தாமல் கொஞ்சம் யோசித்து எவ்வாறு நீரை குளத்திற்கு கொண்டு வருவது என்று ஆராயவேண்டும். "நீரினால் மரம் வருவதில்லை, மரத்தினால்தான் நீர் வருகிறது" உலகத்தில் எப்போதும் ஒரே அளவு நீரே உள்ளது, ஆனால் நமக்கு தண்ணீர் வரவில்லை, ஏன் என்றால் நாம் மரத்தை எல்லாம் வெட்டிவிட்டோம். இவ்வளவு மக்கள்தொகை வைத்துள்ளோம், தண்ணீர் இல்லை என்றால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள். பஞ்சம் வந்த போது லட்சக்கணக்கான மக்கள் உயிரை விட்டார்கள், இன்னும் 20-30 ஆண்டுகளில் இப்போது இருக்கும் நீரில் 50% மட்டுமே இருக்கும். காவேரி இல்லையென்றால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு மாநிலங்களும் இல்லை, நான் சிறுவயதில் தினமும் காவிரியில் நீச்சலடித்தேன், இப்போது கால் மட்டத்திற்க்கு மட்டுமே நீர் உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச அரசுகள் இப்போது மரம் நடும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர், அது நல்லதே. நம்மால் இயலாத ஒன்று செய்யவில்லை என்றால் குற்றமில்லை, ஆனால், நம்மால் எது முடியுமோ அதை இப்போதே நாம் கட்டாயம் செய்தாக வேண்டும், அரசாங்கமும் அமைச்சரும் உறுதியாக நின்றதால் இது இப்பொழுது சாத்தியமானது. என்.எல்.சி யும் இதில் கைகோர்த்திருப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது" என்றார்.

அப்போது இடைமறித்த சத்குரு, "அடுத்த வருடம் இங்கு நான் இந்தக் குளத்தில் கால் வைக்கும்படி இருக்க கூடாது இங்கு தண்ணீர் இருக்க வேண்டும்," என்றார். இதைக் கேட்ட அனைவரின் கரகோஷங்களுக்கிடையே விழா நிறைவடைந்தது.

"நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" இதன் நோக்கம் என்னவென்றால் வற்றிய நதிகளை மேலோங்க செய்வது. இதை செயல்படுத்த பல வழிகள் உள்ளது. ஒரு மகத்தான படி என்னவென்றால் எங்கு தண்ணீர் உள்ளதோ அங்கு மரம் வைக்க வேண்டும். இதனால் விவசாயிக்கு 3% முதல் 8% வரை அவரின் உற்பத்தியை பெருக்க முடியும். நாம் நம் உணவில் 30% பழம் உண்ணும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்.

நதிகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும், அதற்காக கன்னியாகுமரி முதல் இமயமலை வரை நானே டிரைவ் செய்கிறேன். 15 மாநில முதல்வர்கள் இதில் கலந்துகொள்கிறார்கள். அது இத்திட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. 12000 வருடங்களாக இந்த மண்ணில் விவசாயம் நடந்து வந்துள்ளது. வேறு எங்கும் இது மாதிரி நடந்ததில்லை. ஆனால் இப்போது 25% மணல் ஆகிவிட்டது. மண்ணையும் நீரையும் பாதுகாத்தல் அவசியம். ஜாதி, மதம், ஆண், பெண், குழந்தைகள் வேறுபாடு இன்றி எல்லோரும் இதில் பங்கு பெற வேண்டும். நீர் குடிக்கும் எல்லோரும் இதில் பங்குபெற வேண்டும். நீர் என்பது நாட்டிற்க்கு சேர்ந்தது, எல்லா ஜீவராசிகளுக்கும் சேர்ந்தது" என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

நன்றியுரை:

குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத் தலைவர் திரு.தீபம் சுவாமிநாதன் அவர்கள் நன்றியறிவிப்பின் போது, "இந்நிகழ்ச்சி நடக்க பெரிதும் உதவிய அமைச்சர் அவர்களுக்கு தன் நன்றியை தெரிவித்ததோடு, சத்குரு வாழ்கின்ற நாட்களில் வாழ்ந்தாலே அது பெருமை. சத்குருவின் காலடியை இங்கு பதியவைத்த அமைச்சருக்கு நன்றி" என்று கூறினார். அப்போது இடைமறித்த சத்குரு, "அடுத்த வருடம் இங்கு நான் இந்தக் குளத்தில் கால் வைக்கும்படி இருக்க கூடாது இங்கு தண்ணீர் இருக்க வேண்டும்," என்றார். இதைக் கேட்ட அனைவரின் கரகோஷங்களுக்கிடையே விழா நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சி குறித்த சத்குருவின் Tweet: