கடந்த ஜூன் மாதம் கோவை ஈஷா யோகா மையத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு 14 நாட்கள் ஹட யோகா பயிற்சி வழங்கப்பட்டது. ஈஷாவின் அமைதியான சுற்றுச்சூழலில் நிகழ்ந்தேறிய இந்நிகழ்ச்சி, ஜூலை 3ஆம் தேதி நிறைவுற்றது! ஈஷாவில் வழங்கப்படும் இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் பங்கேற்கும் 3வது BSF வீரர்கள் குழு இதுவாகும்!

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 100 வீரர்களில், 47 பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் துணைநிலை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், தொன்மையான சக்திமிக்க பயிற்சிகளான உப-யோகா, அங்கமர்தனா, சூரிய கிரியா போன்ற யோகப் பயிற்சிகளை வீரர்கள் பயின்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் ‘ஆம் மந்திர’ உச்சாடனை மற்றும் ஈஷா கிரியா ஆகிய எளிமையான மற்றும் சக்திவாய்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்களில் பலர், ஈஷா ஹட யோகா பயிற்றுநர்களாக கூடுதலாக பயிற்சிபெற்றனர். இதன்மூலம், இவர்கள் தங்களுடன் பணியாற்றும் சக வீரர்களுக்கும் இந்த யோகா பயிற்சிகளை கற்றுத்தரமுடியும்.

கடந்த ஆண்டு சத்குரு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் கலந்துரையபோது, மிகவும் தொன்மையான யோக விஞ்ஞானத்தை நம் தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அளிப்பதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார். BSF வீரர்களுக்கு யோகப் பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்கள் தங்களை உள்நிலையில் சிறந்த முறையில் நிர்வகிக்கவும், நாட்டின் எல்லையை திறம்பட பாதுகாக்கவும் இந்த யோகா பயிற்சிகள் உறுதுணையாய் இருக்கும் என சத்குரு தெரிவித்தார்.

இந்த யோகா பயிற்சி வகுப்புகளுக்கான முன்னெடுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து தேசமுழுக்க பணியாற்றும் ஒவ்வொரு வீரருக்கும் யோகாவின் பலன்கள் சென்றடைவதற்கான சாத்தியம் உருவாக்கப்பட உள்ளதாக BSF பயிற்சி இயக்குநரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தொன்மையான யோக தொழிற்நுட்பத்தை BSF படை வீரர்களுக்கு வழங்கும் இந்நிகழ்ச்சி மூன்றாவது முறையாக ஈஷாவில் நிகழ்கிறது. இதற்கு முந்தைய நிகழ்ச்சிகள் 2017 டிசம்பர் மற்றும் 2018 ஏப்ரலில் நிகழ்ந்தேறின!

தினமும் இரண்டு வேளை பயிற்சி நேரங்களுடன் கூடிய, வகுப்பறை நிகழ்ச்சியும் கொண்ட இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமாண்டெண்ட், துணை கமாண்டெண்ட், இன்ஸ்பெக்டெர், துணை இன்ஸ்பெக்டெர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய பதவிகளிலுள்ள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிகழ்ச்சிநிரல் தினமும் காலை 5:30 மணிக்கு துவங்கி இரவு 9:30 மணிவரை இருக்கும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
hata yoga training for BSF in Isha

hata yoga training for BSF in Isha

hata yoga training for BSF in Isha

hata yoga training for BSF in Ishahata yoga training for BSF in Isha

 

உப-யோகா

உப-யோகா என்பது மிகவும் எளிமையான, அதேசமயம் சக்திவாய்ந்த ஒரு பயிற்சி. இது தசைமண்டலம் மற்றும் மூட்டுகள் உறுதியாக இருப்பதற்கு உதவும். மேலும், உடலின் சக்தியை அதிகரிக்கும். உடல் இறுக்கம் மற்றும் சோர்வு நீங்கும்.

உப-யோகா வழங்கும் சில பலன்கள்:
  • உடல்நிலையில் அழுத்தம் மற்றும் சோர்வை அகற்றுகிறது.
  • மூட்டுகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது.
  • நீண்டநேர அசைவற்ற நிலைக்குப் பின் உடல் புத்துணர்வுகொள்ள உதவுகிறது.
  • நீண்டதூர பயணங்கள் மற்றும் ஜெட்லாக் ஏற்படுத்தும் விளைவுகளை சரி செய்கிறது.

அங்கமர்தனா

அங்கமர்தனா என்பது யோகா கலாச்சாரத்தில் தோன்றிய ஒரு ஒப்பற்ற உடற்பயிற்சி. இது உடலை வலுவாக்கவும், தசை உறுதிக்கும், இரத்த ஓட்டம் சீராக்கவும், எலும்பு மற்றும் தசைமண்டலம் சீராகவும் உதவும். முதுகுத்தண்டிற்கு உறுதியும் அளிக்கும். உடலுக்கு உறுதி அளிப்பதோடு உடலை இலகுவாக உணர உதவும்.

அங்கமர்தனா வழங்கும் சில பலன்கள்:
  • உடல் பலம், உறுதி & சமநிலை கூடுகிறது.
  • தசை, இரத்த ஓட்ட மண்டலம், எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சி கொள்ளச்செய்து, உடலுக்கு புத்துயிரூட்டுகிறது.
  • முதுகுத் தண்டுவடத்தை பலப்படுத்துகிறது.
  • உடலுக்கு ஆற்றல் தந்து, உடலினை இலகுவாக உணரச் செய்கிறது.

சூரிய கிரியா

சூரிய கிரியா என்பது 21 படிகளை கொண்ட தொன்மையான யோகப் பயிற்சி! இப்பயிற்சி மனஅமைதிக்கும், மனம்குவிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவும். உடல், மனம் மற்றும் சக்திநிலையை சீராக்கவும், உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

சூரிய கிரியா வழங்கும் சில பலன்கள்:
  • உடல் நலனும் ஆற்றலும் பெருகுகிறது.
  • உடல், மனம் மற்றும் சக்திகளின் சமநிலை வருகிறது.
  • உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்களை புத்துணர்வு பெறச் செய்து, ஹார்மோன் அளவுகளை சமப்படுத்துகிறது.

செய்தித்தாள்களில்...

hata yoga training for BSF in Isha

hata yoga training for BSF in Isha

hata yoga training for BSF in Isha

 

குறிப்பு:

இணையத்தில் இலவசமாக உப-யோகா கற்றுக்கொள்ள: tamil.sadhguru.org/yogaday