நமஸ்காரம் – அனைவருக்கும் யோகா

“நமஸ்காரம் என்பது, யோகத்தின் மிக எளிய நிலை. உங்கள் கைகளை ஒன்றாக வைத்து, உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் இருமைகள் அனைத்தையும் ஒன்றிணைத்திடுங்கள்”
– சத்குரு
எல்லாவற்றையும் பாகுபடுத்திப் பார்க்கும் இந்த பரபரப்பான உலகில், அன்பையும், அமைதியையும் நாம் உணரவும், எல்லாவற்றுடனும் ஒரு தொடர்போடு இருக்கவும் ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த செயல்முறையை நமக்கு வழங்குகிறார் சத்குரு. இதை செய்வதற்கு 3-5 நிமிடங்கள் தான் ஆகும். இதை எந்நேரத்திலும், எவ்விடத்திலும் செய்யலாம்.